முரட்டு சிங்கிளா இருப்பதிலும் பாஸிட்டிவ் இருக்கு பாஸ்… என்னன்னு கேக்குறீங்களா?

டிராவல் செய்வது முதல் பணம் சேமிப்பு வரை... நீங்கள் முரட்டு சிங்கிளாக இருப்பதன் பெனிஃபிட்ஸ் பாயின்ட்கள் இதோ... 1 min


`லவ்’-வுக்கான டெஃபனிஷன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். ஏதாவது ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. சிங்கிளாக இருப்பது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களே தவிர தனிமையில் இல்லை. சிங்கிளாக இருப்பதும் உண்மையில் பல பாஸிட்டிவான விஷயங்களைக் கொண்டுள்ளது. அந்த பாஸிட்டிவான விஷயங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்…


Also Read : `மேஷம் முதல் மீனம்…’ வார ராசிபலன் மே 31 முதல் ஜூன் 06-ம் தேதி வரை..!

  1. 1 சுதந்திரமான பயணம்...

    Single

    ஒரு நாள் காலையில் எழுந்து திடீரென மலைகள், காடுகள் நிறைந்த இடங்களுக்கோ அல்லது கடற்கரைகள் நிறைந்த இடங்களுக்கோ நீங்கள் செல்ல விரும்பினால்... அதை நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நபரிடம் தெரிவித்தால்... அவரையும் அந்த ட்ரிப்பில் நீங்கள் சேர்த்துக்கொள்ளாவிட்டால் நிச்சயம் அதிருப்தி அடைவார். உங்களுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நீங்கள் சிங்கிளாக இருந்தால் எந்தவித தயக்கமும் இன்றி நீண்ட திருப்தியான சுதந்திரமான பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம். பறவையைப் போல சுற்றித் திரிந்து வரலாம். எஞ்சாய் யுவர் ஓன் கம்பெனி!

  2. 2 ஃப்ளர்ட் செய்தல்...


    இன்றைய சூழலில் ஃப்ளர்ட் செய்வது மிகவும் சாதாரணமான இயற்கையான விஷயம் எனலாம். சிங்கிளாக இருக்கும்போது ஃப்ளர்ட் செய்வது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், நீங்கள் மிங்கிளாக இருக்கும்போது ஃப்ளர்ட் செய்தால் பலவித பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். ஃப்ளர்ட் செய்யும் நபராக நீங்கள் இருந்தால் சிங்கிளாக இருப்பது எப்பவும் பெஸ்ட்!

  3. 3 உங்களை நீங்களே நேசிக்கலாம்...


    எந்த உறவாக இருந்தாலும் சரி முதலில் உங்களை நீங்கள் நேசிக்காவிட்டால் ஆரோக்கியமான எந்த உறவையும் உங்களால் உருவாக்க முடியாது. தங்களை நேசிப்பவர்கள் பின்னாளில் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது அந்த ரிலேஷன்ஷிப் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்களை நீங்களே நேசிக்கவும் தெரிந்துகொள்ளவும் அதிக நேரம் நீங்கள் சிங்கிளாக இருக்கும்போது கிடைக்கும். உங்களுக்கு பிடித்தது செல்ஃப் லவ் இஸ் தி பெஸ்ட் லவ்!

  4. 4 அதிகமாக நேரத்தை சேமிக்கலாம்...


    ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு பல மணி நேரத்தை டெக்ஸ்ட் மெசேஜ், போன் கால் என தங்களது மொபைலுடன் செலவிடுகின்றனர். எனவே, நீங்கள் சிங்கிளாக இருக்கும்போது அதிகமான நேரத்தை சேமிக்கலாம். இந்த சமயங்களில் புத்தகம் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது என நேரத்தை செலவிடலாம். உங்களுக்கென ஒரு ஸ்ஷெடியூல் ஒன்றைப் போட்டு அதற்கு ஏற்பட ஒரு நாளை பிரித்துக்கொள்ளலாம். டைம் முக்கியம் பாஸ்!

  5. 5 நிம்மதியாகத் தூங்கலாம்...


    ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் அதிகமாக மிஸ் செய்யும் விஷயங்களில் தூக்கமும் ஒன்று.   இரவு முழுவதும் போன் பேசியபடியே பலரும் தங்களது நேரத்தை செலவழிப்பார்கள். சிங்கிள்ஸ் அதிலிருந்து எஸ்கேப் ஆகலாம். குறிப்பாக விடுமுறை நாள்களில் எவ்வளவு நேரம் தூங்க விரும்புகிறோமோ அவ்வளவு நேரம் தூங்கலாம். நேரத்துக்கு குட் மார்னிங் அனுப்ப தேவையில்லை, சாப்பிட்டாச்சா என்று கேட்கத் தேவையில்லை, அன்றாடம் நமது ஆக்டிவிட்டீஸ் பத்தி அப்பப்போ அப்டேட் கொடுக்கணும்னு அவசியம் இல்லை. நிம்மதியாகத் தூங்கலாம். ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களைவிட சிங்களாக இருப்பவர்கள் நிம்மதியாகத் தூங்குவதாக சில சர்வேக்களில் கூட உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

    தூக்கம் முக்கியம் பிகிலு!

  6. 6 நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம்...


    பெரும்பான்மையான காதலர்கள் தங்களது பார்ட்னரிடம் கேட்கும் கேள்வி, ``உனக்கு நான் முக்கியமா? இல்லை, ஃப்ரண்ட்ஸ் முக்கியமா?” என்பதுதான். சிங்கிள்ஸ் இந்த கேள்வியில் இருந்து முதலில் தப்பிக்கலாம். நண்பர்களுடன் நினைத்த நேரத்துக்கு வெளியே சென்று வரலாம். யாருடனும் நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்றால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியும்.  

    நட்பு இருக்கு.. மத்ததெல்லாம் எதுக்கு?!

  7. 7 பணத்தை சேமிக்கலாம்...


    மிங்கிளாக இருந்தால் நீங்கள் எந்த செலவு செய்தாலும் அது இரட்டிப்பானதாக இருக்கும். ஆனால், நீங்கள் சிங்கிளாக இருக்கும்போது குறைவான அளவே பணம் செலவாகிறது. இதுபோக கிஃப்ட்ஸ், டேட்டிங் போன்றவற்றுக்கும் அதிகளவில் பணம் செலவாகும். இதனால், பணத்தை சேமிக்க முடியாத நிலை இருக்கும். சிங்கிளாக இருக்குபோது சேமிப்பு, முதலீடுகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்த முடியும். சிங்கிளாக இருக்கும் ஆண்களைவிட கமிட்டட் ஆண்கள் அதிகமாகவே சம்பாதிக்கின்றனர் என்கிறது சில ஆய்வுகள். ஆனால், அவர்களின் செலவு சிங்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம். என்னடா இது கமிட்டட் பீப்பிள்க்கு வந்த சோதனை!


Like it? Share with your friends!

392

What's Your Reaction?

lol lol
3
lol
love love
30
love
omg omg
24
omg
hate hate
30
hate

Ram Sankar

0 Comments

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format