எஸ்.பி.பி - அஜித்

Ajith-SPB: அஜித் – எஸ்.பி.பி காம்போவின் பெஸ்ட் பாடல்கள்!

அஜித்துக்கு இருக்கும் எத்தனையோ ஸ்பெஷல்களில் ஒன்று, பாடல் காட்சிகளில் பாடலுக்கேற்ற சரியான பாவத்துடன் அவர் வாயசைப்பது. அவ்வகையில்  யார் பாடினாலும் அஜித்துக்கு கச்சிதமாக இருக்கும் நிலையில், அவரது  வழிகாட்டி எஸ்.பி.பி-யின் குரல் அஜித்துக்கு  இன்னும் கனக்கச்சிதம். இந்த காம்போவில் அமைந்த சில சூப்பர் ஹிட் பாடல்கள் பற்றி.

`புத்தம் புது மலரே’ – அமராவதி

அஜித் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு எஸ்.பி.பி பாடிய இந்தப் பாடல் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துவருகிறது. இதே படத்தில்  எஸ்.பி.பியின் ஹஸ்கி குரலில் ‘தாஜ்மஹால் தேவையில்லை’  பாடலும் வேற ரகம்தான். இந்தப் பாடல்களைக் கேட்டு கரைந்திடாத அன்றைய யூத்களே இருக்கமுடியாது. இதே படத்தில் இந்தப் பாடல்கள் மட்டும் இல்லாமல் ‘அடி சோக்கு சுந்தரி’, ‘ஆஹா கனவேதானா..’ ஆகிய மேலும் இரு பாடல்களையும் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி

நலம் நலமறிய ஆவல்’ – காதல் கோட்டை

அஜித்துக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த ‘காதல் கோட்டை’ படத்தில் இந்த ரொமாண்டிக் நம்பரைத் தந்திருப்பார்  எஸ்.பி.பி. ‘கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே’ என எஸ்.பி.பி கொஞ்சுவது காலம் கடந்து நிற்கும். இதே படத்தில், ‘சிவப்பு லோலாக்கு’ என்ற துள்ளலான பாடலையும் பாடியிருப்பார் எஸ்.பி.பி.

‘ஒருமுறை எந்தன் நெஞ்சில்’ – ஆசை

தேவா இசையில் சிறப்பாக அமைந்த ஒரு பாடல் இது. எஸ்.பி.பியின் குரலில் ‘ஓஹோ…’ என நீண்டதொரு ஹம்மிங்கில் தொடங்கும் இந்தப் பாடல் முழுக்க முழுக்க, வித்தியாசமான  ரிதம்கொண்ட  ஏற்ற இறக்கங்களில் உருவாகியிருக்கும்.

‘காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா’ – அவள் வருவாளா

ஒருதலை காதலில் ஏங்கும் ஒரு இளைஞனின் உள்ளக் குமுறலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு அவ்வளவு அழகாக தன் குரலால் உயிரூட்டியிருப்பார் எஸ்.பி.பி.  அஜித்தின் அப்போதைய இளமையான தோற்றத்திற்கும் இந்தப் பாடலுக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும் எஸ்.பி.பியின் குரல். இதே படத்தில் ‘மச்சான்கிட்ட முந்தானைய’ என்ற அசத்தல் பெப்பி நம்பர் பாடலும் எஸ்.பி.பி குரலில் இடம்பெற்றிருக்கும்.

உன்னைப் பார்த்த பின்புதான்  – காதல் மன்னன்’

விண்டேஜ் அஜித் ரசிகர்களின் தேசிய கீதம் இந்தப் பாடல்.  பரத்வாஜின் வித்தியாசமான இசையமைப்பில்  உருவான  இந்த ஒரே பாடலில் எஸ்.பி.பியின் குரலில் ஹை-பிட்ச்சும் லோ-பிட்சும் மாறி மாறி வந்து கேட்பவர்களைக் கிறங்கடிக்கச் செய்யும்.

‘சத்தம் இல்லாத தனிமைக் கேட்டேன்’ – அமர்க்களம்

தொடர்ந்து அஜித்துக்கு காதல் பாடல்களாகவே பாடி வந்த எஸ்.பி.பி, முதன்முறையாக வேறொரு பரிணாமத்தில் பாடிய பாடல் இது. பாடல் முழுக்க மூச்சு விடாமல் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி  என அப்போது வந்த செய்திகளில் பேசப்பட, உடனே ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் டெக்னாலஜி’ என உண்மையை வெளிப்படையாக சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் எஸ்.பி.பி.

‘வத்திக்குச்சி’ – தீனா

இந்தப் பாடலும் அஜித் ரசிகர்களுக்கு  மிக முக்கியமானப் பாடல். அஜித்துக்கு எஸ்.பி.பி பாடிய முதலும் கடைசியுமான ஹீரோ அறிமுகப்பாடலும்கூட.  சாஃப்ட் ஹீரோ இமேஜிலிருந்து ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக இந்தப் படத்தில் அஜித் உருமாறியிருந்த நேரத்தில் ரஜினிக்கு பாடுவதுபோன்ற தொனியில் மாஸாக பாடி அசத்தியிருப்பார் எஸ்.பி.பி.

Also Read – #20YearsofSneha: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில் சினேகாவுக்கு ஸ்பெஷல் இடம்… ஏன் – 5 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top