லியோ

லோகேஷ்.. விஜய்.. அனிருத்… லியோ-வுக்கு என்னென்ன சவால்கள் இருக்கு?!

லியோ படத்துக்கு இருக்க சவால்கள் என்னென்னு பார்க்குறதுக்கு முன்னாடி இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பார்த்துட்டு வந்துடுவோம். நெல்சன் – விஜய் காம்போல ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில வெளியான படம் பீஸ்ட். அரபிக்குத்து பாட்டு, ட்ரெயிலர் எல்லாமே வேறமாறி ஹிட்டு. அதுனாலயே படம் கண்டிப்பா மாஸா இருக்கும்னு எல்லாரும் சேர்ந்து அந்தப் படத்துக்காக காத்துட்டு இருந்தாங்க. ஆனால், படத்துல விஜய்க்காக கதை பண்றேன், அவர் இமேஜை காப்பாத்துறேன்னு கதையை விட்டு வெளிய போய், விஜய்யை மையமா வைச்சு, மத்த எல்லாரையுமே டம்மி பண்ணி கிளைமாக்ஸ்லலாம் சொதப்பி வைச்சிருந்தாரு. ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனதும் நெல்சன்ட்டா, எல்லா சரி, பிளைன்ல சல்யூட் அடிக்க சொன்னவன் யாருனு மட்டும் சொல்லுங்கனு விஜய் ஃபேன்ஸ் மீம்ஸ்லா போட்டு வைச்சு செஞ்சுட்டு இருந்தாங்க. அதுனால, ஜெயிலர் படம் மேல மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதுனால படம் ரிலீஸ் ஆனதும் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்துச்சு. கதையை விட்டு விலகாமல் எல்லா கேரக்டரும் நம்ம கூட கனெக்ட் ஆனாங்க, குறிப்பா.. பீஸ்ட்ல கிளைமாக்ஸ்ல பண்ண தப்பை, ஜெயிலர்ல சரி பண்ணி, மாஸ்லா கூட்டி சம்பவம் பண்ணியிருந்தாரு. ஆனால், பீஸ்ட்டோட கம்பேர் பண்ணி பார்த்தோம்னு வைங்க. பீஸ்ட்லயே கிளைமாக்ஸ் மட்டும் சரியா இருந்தா படம் பாஸிட்டிவா ஓடியிருக்கும். ஜெயிலர்ல கிளைமாக்ஸ் நல்லா இல்ல அப்டினு வைங்க.. படம் பீஸ்ட் மாதிரி ஆகியிருக்கும். சரி, ஜெயிலர் ரிலீஸாயிடுச்சு, அடுத்து மிகப்பெரிய எதிர் பார்ப்புல இருக்குற படம்னா லியோதான். அதுக்கு காரணம் என்ன?

பீஸ்ட்

மாஸ்டர் படம் லோகேஷ் கரியர்ல முக்கியமான படம். அதுதான் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போச்சு. அதுக்கப்புறம் அவரோட உயரம்ன்றது பல டைரக்டர்ஸ் பொறாமைப்படுற அளவுக்கு பெருசா போச்சு. எனக்கு தெரிஞ்சு இந்தப் படத்துல, அதிகமா சவால் இருக்குறதே லோகேஷ்க்குதான். ஏன்னா, ஒவ்வொரு படமும் அவர் கரியர்ல முக்கியமான படமா இருந்துருக்கு. முந்தின படங்களைவிட பெஸ்ட்டாவும் இருந்துட்டு இருக்கு. அப்போ, இதுக்கு முந்தின படத்தைவிட பெஸ்ட்டா வந்தே ஆகணும்ன்றது மிகப்பெரிய ப்ர்ஷர். அதுமட்டுமில்லாமல், ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறாங்க. எல்லாரும் 10 நிமிஷம் வந்தாலே அவங்க படமாக மாறிடும். இதுக்கிடையில விஜய்யோட ரோலை நல்லா எஸ்டாபிளிஷ் பண்ணனும், எந்த சாயலும் இருக்கக் கூடாது. அவருக்கான சீன்ஸ் கம்மியாச்சுனா ரசிகர்கள் வைச்சு செஞ்சுருவாங்க. விஜய்யோட கேரக்டர் நல்ல ஸ்ட்ராங்கா, சரியான ஸ்பேஸ்ல இருந்தா மட்டும்தான் லோகேஷ் தப்பிப்பாரு. இல்லைனா நெல்சனை செய்த மாதிரி செஞ்சு விட்ருவாங்க. மற்ற நடிகர்களோட ஃபேன்ஸும் இதையேதான் எதிர்பார்ப்பாங்க. எங்க தலைவனை டம்மி பண்ண, லோகி உனக்கு இருக்குடின்ற மோட்ல தான் சுத்துறாங்க. கைதி + விக்ரம் படம் எல்.சி.யூ யூனிவர்ஸ்குள்ள வந்துச்சு. லியோவும் அந்த யூனிவர்ஸ்ல வரணும்ன்றது மிகப்பெரிய எதிர்பார்ப்பா இருந்துட்டு இருக்கு. இல்லைனா மிகப்பெரிய டிஸப்பாயின்ட்மென்ட் ஆவாங்க.

லியோ

ரோலக்ஸும் லியோவும் சந்திக்கிற அந்த மொமண்டுக்காக ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் காத்துட்டு இருக்காங்க. தமிழ் சினிமாலயே யூனிவர்ஸுன்றது ரொம்பவே புதுமையான ஒண்ணு. அதுவும் எல்.சி.யூ பானர்ல வரப்போகிற முதல் படம். இந்த எல்.சி.யூ படம் தோத்துச்சுனா மொத்த எல்.சி.யூவும் அடி வாங்கும். புஸ்வானம் மாதிரி போய்டும். அதுனால ஜெயிச்சே ஆக வேண்டிய கட்டாயம் நிறையவே இருக்கு. விஜய்க்கு வசூல் ரீதியாக பல படங்கள் ஹிட் கொடுத்தாலும், கதை வைஸ் இன்னும் துப்பாக்கிக்கு அடுத்து பெஞ்ச் மார்க் வரலை. சோ, அதுனால விஜய்க்கு வேறலெவல் ஹிட்டு வந்தே ஆகணும். தலைவரு நிரந்தரம், பேரை தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க 100 பேருனு அனி மாம்ஸ் பாட்டு போட்டு எல்லா ஃபேன்ஸையும் வம்புக்கிழுத்து வாடகை வீட்டுல குடி வைச்சிருக்காரு. அவங்க ஏத்துக்குற மாதிரிஅனி மியூசிக் இருந்தே ஆகனும். இல்லைனா, எங்க தலைவனுக்கா இப்படி பண்றனு செய்கைதான்.

சவுத் இந்தியால தெலுங்குல இருந்து பாகுபலி 1000 கோடி வசூல், ஆர்.ஆர்.ஆர் 1000 கோடி வசூல், கன்னடால கே.ஜி.எஃப் 1000 கோடி வசூல், சலார் 1000 கோடி வசூல்னு போட்டுட்டு இருக்காங்க. தமிழ் சினிமால அப்படி ஒரு பெஞ்ச் மார்க் இன்னும் வரலை. அதுனால, லியோ மேல மிகப்பெரிய எதிர்பார்ப்பு வசூல் ரீதியிலயும் இருக்கு. லியோவே வசூல் பண்ணலை, பான் இந்தியா ஸ்டார்ஸ் இருந்தும் பண்ணலைனா, வேற எந்தப்படம் பண்ணும்ன்ற கேள்வியும் இருக்கு.

Also Read – இவங்க சிரிப்பு போலீஸ் இல்லை.. சின்சியரான எமோஷனல் போலீஸ்!

அட்லீயோட தெறிக்கும் இந்தப் படத்தும் நிறைய ஒற்றுமை இருக்குனு பேசிக்கிறாங்க. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தழுவி இந்தப் படத்தை எடுக்குறதே பேச்சு இருக்கு. அதோட கதை பேக்கரில அமைதியா வேலை பார்க்குற தாஸ் அண்ட் கோவைச் சேர்ந்த எக்ஸ் கேங்க்ஸ்டரின் கதை. தாஸ் அண்ட் கோ.. இதுலதான் அண்ணன் தம்பிகள் இருப்பாங்க. தம்பிக்கும் அண்ணன்களுக்கும் நடக்குற சண்டைதான் கதை. அதுனால விஜய் பெயரும் தாஸ்லதான் இருக்கும். தெறில இருந்த அதே பேக்கரி.. அதே வாடகை. ஆனால், லோகேஷ் எதாவது மேஜிக் ஸ்கிரீன் பிளேல கண்டிப்பா பண்ணியிருப்பாருனு நம்புவோம். தாஸ் அண்ட் கேங்குக்கு பாஸா நம்ம ஆண்டனி இருப்பாருனு நம்புவோம்.

நீங்க லியோ படத்துக்கு இருக்குற சவாலா எதை பார்க்குறீங்கனு கமெண்ட்ல மறக்காமல் சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top