சாதிய உணர்வை தூக்கிப் பிடிக்கும் ஒருவன், சாதியை தூக்கி வீசி மனிதனாக மாறுகிறான்’ங்குற ஒன்லைன் கதையை துணிச்சலாக படமாக்கியிருந்தார், இயக்குநர் சேரன். கலைஞர் பாராட்டு, மக்களின் வரவேற்பு என படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் பெயர் பாரதி கண்ணம்மா. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனி ஒரு ஆளா, அவருக்கு கிடைச்ச வெற்றி தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத படைப்பாளியாகவே ஆக்கியது.
90-களின் பிற்பகதி அது.. சாதியத்தை தூக்கி நிறுத்தும் கிராம சினிமாக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த காலக்கட்டம். அப்போதுதான் அந்த படம் வெளியாகிறது. வெளியானது முதலே தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. ‘சாதிய உணர்வை தூக்கிப் பிடிக்கும் ஒருவன், சாதியை தூக்கி வீசி மனிதனாக மாறுகிறான்’ங்குற ஒன்லைன் கதையை துணிச்சலாக படமாக்கியிருந்தார், அந்த அறிமுக இயக்குநர். கலைஞர் பாராட்டு, மக்களின் வரவேற்பு என படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் பெயர் பாரதி கண்ணம்மா. அந்த இயக்குநர் சேரன்.
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனி ஒரு ஆளா, அவருக்கு கிடைச்ச வெற்றி தமிழ் சினிமாவோட தவிர்க்க முடியாத படைப்பாளியாகவே ஆக்கியது. இயக்குநர், நடிகர் சேரன் சினிமாவுல பண்ண சம்பவங்களைத்தான் வீடியோவா பார்க்கப்போறோம்.
கே.எஸ்.ரவிகுமாரிடம் ‘புரியாத புதிர்’ படத்தில் உதவி இயக்குநரா வேலை செய்ய ஆரம்பிச்சவர், ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்கள்ல துணை இயக்குநராக வேலை பார்த்தார். அசிஸ்டெண்ட்டா ரெண்டாவது படமான சேரன் பாண்டியன் படத்திற்குப் பின்னால் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார், சேரன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு போக, மகாநதி படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலையை பார்த்தார். அங்கே ஒரு கட்டத்தில் வேலை செய்யப்பிடிக்காமல் மறுபடியும், கே.எஸ் ரவிக்குமாரிடமே வந்தார், சேரன். “அன்னைக்கு பெரிசா கோவிச்சுக்கிட்டு போன, இப்ப எதுக்கு இங்க வந்து நிக்கிற”னு கே.எஸ் ரவிக்குமார் கேட்க, “வந்துட்டேன்” என சேரன் சொல்ல, கே.எஸ். ரவிக்குமார் சிரிச்சுக்கிட்டே, “போ போய் யூனிட்ல வேலை பாரு”னு சொல்லி சேர்த்துக்கிட்டார். இதுமுதல்முறை அல்ல, இதுபோல பலமுறை நடந்திருக்கிறது. சொல்லப்போனால், கே.எஸ் ரவிக்குமாரின் செல்லப்பிள்ளையாகவே மாறிப்போனார், சேரன்.
ஆட்டோகிராப் படத்துக்காக அன்னைக்கு முக்கியமான நடிகர் கமிட் செய்யப்பட்டார். ஆனால் ஒரு நாள் அட்வான்ஸ் கொடுக்க லேட் ஆனதால் அவர் அந்தப் படத்துல இருந்து விலகிட்டார். அவர் யார்னு யோசிச்சு வைங்க. அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.
அறிமுகம்!
1997ல் ‘பாரதி கண்ணம்மா’ சேரன் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். தலைசிறந்த படைப்பாளி ஒருவரின் வருகைக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த படம்னு கூட சொல்லலாம். ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட படம். அந்த படத்தோட ஹீரோ பார்த்திபனுக்கும், சேரனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு நட்பில் விரிசல் விடுற அளவுக்கு தான் நினைத்த க்ளைமேக்ஸை படமாக்கியிருந்தார் சேரன். அச்சு அசலான கிராமத்து சாதிய கட்டமைப்பை வெளிக்காட்டியிருந்தார், சேரன்.
அடுத்து, மாற்றுத் திறனாளியோட பிரச்சினையை எடுத்துச் சொன்ன படம் ‘பொற்காலம்’. எவர்கிரீன் நாயகன் முரளியின் கடைசி சோலோ ப்ளாக்பஸ்டர் ஹிட் படமும் அதுதான். இதுவும் மண்சார்ந்து எதார்த்த வாழ்வியலை அச்சு அசலாக பதிவு செய்திருந்தது. அடுத்ததா நான் கருத்தியல் ரீதியான சினிமாவும் பண்ணுவேன்னு முடிவுக்கு வந்த சேரன், தேசியகீதம் படத்தை எடுத்தார். அரசியல்வாதிகளின் முகத்திரையை நேரடியாக தோலுரித்து காட்டினார் சேரன். படத்தில் இடம்பெற்றிருந்த முதல்வர் கேரெக்டராக கலைஞர் கருணாநிதியை குறிப்பிட்டிருந்தார்னு விமர்சனங்கள் எழுந்தது. சேரன் கலைஞரை சந்திச்சுப் பேசி தன்னோட நியாயங்களைச் சொல்லி கலைஞரும் சமாதானம் ஆனார். ஆனால் அரசாங்கத்தை எதிர்த்துப் படம் செய்றார்னு அடுத்து யாரும் சேரனை வைத்து படம் தயாரிக்க வரவே இல்லை. அடுத்த ஒன்றரை வருடங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தார் சேரன். அடுத்ததா நடிகர் முரளி சேரனை அழைச்சுக்கிட்டு போய் வெற்றிக்கொடிகட்டு படத்தை ஆரம்பிக்க வைச்சார். அந்த படம் சமூக பிரச்னைகளுக்கான தேசிய விருதை வாங்கவும் வைச்சது. வேலையின்மையை நெற்றிப்பொட்டில் அடிச்ச மாதிரி காட்டியிருந்தார் சேரன். அதுல இடம்பெற்றிருந்த பார்த்திபன் – வடிவேலு காமெடி இன்னைக்கு பார்த்தாலும் எபிக்கா இருக்கும். அதேபோல மீம் டெம்ப்ளேட்டுகளாவும் சுத்திட்டு இருக்கு. அடுத்ததா குடும்பம், பாசம், நட்பு, காதல்னு கலந்த பாசப்படமான ‘பாண்டவர் பூமி’ படத்தைக் கொடுத்து முக்கிய இயக்குநராக மாறினார்.
நடிகர்!
நண்பர் தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘சொல்ல மறந்த கதை’யில் நடிகராக அறிமுகம் ஆகி, நல்ல நடிகர்ங்குற பெயரையும் வாங்கியிருந்தார், சேரன். அடுத்த்தாக தன்னுடைய அடுத்த கதைக்கான ஹீரோவை தேடிக் கொண்டிருந்தார். பிரபுதேவா, விக்ரம்னு பல பேர்கிட்ட கதை சொல்லி, கடைசியா நாமளே நடிச்சிடலாம்னு ஒரு முடிவுக்கு வந்தார். அந்த கதைதான் ஆட்டோகிராப். தன்னோட அசிஸ்டெண்ட் டைரக்டர்கள்கிட்ட இதைப்பத்தி சொன்னப்போ அதை யாருமே ஏத்துக்கலை. ஆனா, கேரளா போர்ஷன் ஷூட் பண்ணி பார்த்த பின்னால எல்லோரும் நல்லா இருக்குங்குற மூட்க்கு வந்து படத்தைப் பண்ணியிருக்காங்க. படத்தின் நாஸ்டால்ஜியா காட்சிகள் மூலம் சிறுவயது நினைவுகளை ரணமாக கிளறிவிட்டு, அதற்கு மருந்தும் போட்டுவிட்டு போயிருந்தார் சேரன். படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்ப, அந்தக் காலக்கட்டத்தில் பரபரப்பான இயக்குநராகவும், நடிகராகவும் மிகவும் கொண்டாடப்பட்டார். தனியார் டிவியில ஒளிபரப்பான டாப்டென் புரோக்கிராம்ல அதிகமான மாதங்களா இந்த படத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டது. ஒரு மனிதன் கடந்துவந்த பாதையை எதார்த்தம் மாறாமல் கொடுத்திருந்தார் சேரன்… சொல்லப்போனா, இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றி ஒவ்வொருவரும் இந்த படத்தை தன்னோட வாழ்க்கையோட கம்பேர் பண்ணி பார்த்துக்கிட்டதுதான்.
அடுத்ததா ’தவமாய் தவமிருந்து’ சேரனை தேசிய அளவில் கவனம் ஈர்க்க வைச்சது. அப்பாவோட வலிகளையும், தியாகங்களையும், ரத்தமும் சதையுமாக உலவிவட்ட காவியப் படைப்புனுகூட சொல்லலாம். தாயின் பாசத்தை அதிகமாக பொழிந்திருந்த திரையில் தந்தையின் பாசத்தைப் பேச வைத்தார், சேரன். நடிகராகவும், இயக்குநராவும் உச்சம் தொட்டிருந்தார் சேரன். இந்த படங்கள் மூலம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவராக ஆனார் சேரன். தொடர்ந்து ‘மாயக் கண்ணாடி’, ‘பொக்கிஷம்’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘திருமணம்’ ஆகிய படங்களிலும் தன் தனித்துவ முத்திரையை வெளிப்படுத்தினார் சேரன். இதுபோக ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘யுத்தம் செய்’, வசந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தார் சேரன்.
தொடர்ந்து நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் சேரன், சரத்குமாரின் நூறாவது திரைப்படமான ‘தலைமகன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதினார். ’மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் பாடலாசிரியர் அவதாரமும் எடுத்தார்.
சிக்கலாக வந்த தயாரிப்பு!
முதல் தயாரிப்பான ஆட்டோகிராப் படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்க துவங்கினார் சேரன். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ஆடும் கூத்து, முரண், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கைனு படங்கள் தயாரிக்கிறார். ஆனா இந்த படங்கள் எதுவுமே நல்ல ப்ரொடியூசரா வெற்றியை தரலை. அதனால அவரோட டைரக்ஷன்ல கவனம் செலுத்த முடியாம ரொம்பவே கஷ்டப்பட்டார். இதுபோக அவர் முன்னெடுத்த C2H திட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. இதற்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் சேரன். ஒரு நல்ல படைப்பாளி, இந்த பிரச்னைகளுக்குள் சிக்கிக் கொண்டு படங்கள் இயக்கவில்லை சேரன். அதிக வருஷங்கள் கழிச்சு திருமணம் படத்தை இயக்கினார்.
Also Read – படிச்சவனுக்கு எதுக்கு சினிமா… கற்றது தமிழ் ராம் சினிமா பயணம்!
தவிர்க்க முடியாத தனித்துவமான படைப்பாளி!
கிராமத்துக் கதைகளானாலும் நகரத்துக் கதைகளானாலும் மண்ணின் முகங்களையும் மண்ணுக்கேற்ற கதைக் களங்களையும் வைத்து மனித உணர்வுகளை உயிரோட்டத்துடன் சமூக அக்கறையைப் பாசாங்கில்லாமல் வெளிப்படுத்திய படங்களே சேரனைத் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளி ஆக்கியிருக்குனு கூட சொல்லலாம். ஒரு படம்னா, அதுல இருக்குற வாழ்வியலோட இணைஞ்சு கதை சொன்னாத்தான், அதுக்குள்ள ரசிகர்கள் ட்ராவல் பண்ண முடியும். அதுதான் சேரனின் தனித்துவமும் கூட. இது தவமாய் தவமிருந்து படத்துல அதிகமாவே இருக்கும். ஒரு நடிகராகவும் பல வகையான கதாபாத்திரங்கள்ல நடிச்சு ரசிகர்களுக்குப் விருந்தும் படைத்திருக்கிறார்.
ஆட்டோகிராப் படத்துக்காக அன்னைக்கு கமிட்டான நடிகர் பிரபுதேவா. தேதிகளை எல்லாம் ஒதுக்கி படத்துக்கு ஓகே சொல்லிட்டார். ஆனா கடைசி நேரத்துல அவரால நடிக்க முடியலை. இயக்குநர் சேரன் நடிச்ச படத்துல எனக்கு பிடிச்சது ஆட்டோகிராப்தான். உங்களுக்கு அவர் இயக்கத்துல நடிப்புல பிடிச்ச படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.