திமுக தலைமையிலான சட்டமன்றத்தை கண்ணியத்துடன் நடத்த, அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் எண்ணம். கடந்த முறை அ.தி.மு.க ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், சிறப்பாக செயல்பட்டு அந்தப் பதவிக்கு சட்டமன்றத்தில் ஒரு கண்ணியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அவரையும் தாண்டி, தி.மு.க ஆட்சியில் அமரப்போகும் சபாநாயகர் செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அதற்காக, தி.மு.க பொதுச் செயலாளரும், நீண்ட அனுபவம் வாய்ந்தவருமான துரைமுருகனை அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என மு.க.ஸ்டாலினின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், துரைமுருகனின் விருப்பம், பொதுப்பணித்துறை அமைச்சராக வேண்டும் என்பதாக உள்ளது. அதனால், இன்னும் சபாநாயகர் யார் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. துரைமுருகன் ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், சக்கரபாணிக்குத்தான் அந்தப் பதவி ஒதுக்கப்படும். அதேநேரத்தில், துரைமுருகன் கேட்கும் பொதுப்பணித்துறையை அவருக்கு ஒதுக்க மு.க.ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் துரை முருகன், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தததையடுத்து, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி 10 மாதங்கள் அந்தப் பொறுப்பை துரைமுருகனிடம் இருந்து பறித்து, தனது வசம் வைத்திருந்தார்.
அதனால், இந்த முறை பொதுப்பணித்துறையை இரண்டாகப் பிரித்து, நீர்பாசனத்துறை என்று ஒரு புதிய இலாகவை உருவாக்கி வேண்டுமானால் துரை முருகனிடம் கொடுக்கலாம் எனும் முடிவில் மு.க.ஸ்டாலின் இருக்கிறாராம்.
Also Read – நாம் தமிழர் பிரித்தது யாருடைய வாக்குகளை? #DataStory