நம்ம சிங்கார சென்னை பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்களைத் தான் நாம பார்க்கப்போறோம்.
சென்னை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் நெருக்கம் மிகுந்த இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். புறநகர் உள்ளிட்ட பகுதிகளின் வாழும் மக்களையும் சேர்த்து உலக அளவில் 36-வது பெரிய மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த நகரம். நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வெளியிட்ட உலகின் டாப் 10 ஃபுட் சிட்டீஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நகரம்.
ஆங்கிலேயர்களின் முதல் கோட்டை
இப்போது சட்டப்பேரவை செயல்படும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் கட்டிய முதல் கோட்டையாகும். 1639ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டை இன்றளவும் கம்பீரமான வரலாற்றுச் சான்றாக நிற்கிறது. அந்தக் கோட்டையில்தான் தற்போது தமிழக சட்டப்பேரவை இயங்கி வருகிறது.
சிஸ்டர் சிட்டீஸ்
உலகின் பல நாடுகளில் இருக்கும் நகரங்களோடு சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தோடு சென்னை மாநகரம் இயங்கி வருகிறது. ரஷ்யாவின் வோல்கோகிராட் நகருடனான சென்னையின் தொடர்பு 1966-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. அமெரிக்காவின் டென்வர், சான் ஆன்டோனியோ, மலேசியாவின் கோலாலம்பூர், சீனாவின் சோங்கியுங், தென்கொரியாவின் உல்சான் ஆகிய நகரங்களோடு சென்னை மாநகர் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
விமான சேவை
சென்னைக்கு விமான சேவை 1917-ல் தொடங்கப்பட்டது. பஸ் போக்குவரத்து 1925-ம் ஆண்டு தொடங்கப்படுவதற்கு முன்னரே விமான சேவை தொடங்கப்பட்டது உங்களுக்குத் தெரியுமா? சென்னையின் முக்கியசாலையாக விளங்கும் அண்ணா சாலை, முன்னர் கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு என்றழைக்கப்பட்டது.
மாநகராட்சி
லண்டனுக்குப் பிறகு இன்றும் உயிர்ப்போடு செயல்படும் மாநகாராட்சி வரிசையில் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சென்னை மாநகராட்சி 1688-ல் தோற்றுவிக்கப்பட்டது.
சிக்கன் 65
1965-ல் சிக்கன் 65 என்ற புதிய டிஷ்ஷை சென்னையில் செயல்பட்டு வந்த புஹாரி ஹோட்டல் அறிமுகப்படுத்தியது. பெயர்க்காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில், புஹாரி ஹோட்டலின் மெனு கார்டில் 65-வதாக இடம்பெற்றதால் இந்தப் பெயர் என்றும் கூறப்படுகிறது.
பழமையான பொறியியல் கல்லூரி
கிண்டி பொறியியல் கல்லூரி 1794-ல் நிறுவப்பட்டது. நில அளவை குறித்த படிப்புக்காகத் தொடங்கப்பட்டு, 1859-ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரியாக உருவெடுத்தது. 1858-ல் ஒரே ஒரு மாணவருடன் சிவில் என்ஜினீயரிங் படிப்பு தொடங்கப்பட்டது. 160 ஆண்டுகளுக்கு மேலாக பொறியியல் கல்வி அளித்து வரும் கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவின் பழமையான பொறியியல் கல்லூரியாகும்.
பழமையான கிரிக்கெட் ஸ்டேடியம்
சென்னையில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருந்ததால், 1846ல் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. பின்னர், 1916ம் ஆண்டு கட்டப்பட்ட சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று.
Also Read – குக் வித் கோமாளி Vs மாஸ்டர் செஃப்… என்னென்ன வித்தியாசங்கள்?