இன்றைக்கு மில்லியன் கணக்கில் சப்ஸ்கிரைபர்களை வைத்து டிரெண்டிங்கில் இருக்கும் யூ டியூப் சேனல்களின் முதல் வீடியோக்களை நீங்க பாத்திருக்கீங்களா? இல்லைனா.. உங்களுக்கான பட்டியல்தான் இது…
Black sheep
பிளாக் ஷீப்க்கு முதலில் அவங்க வைத்த பெயர் `ஸ்மைல் மிக்சர்’ என்பதுதான். எதையாவது குழப்பி போட்டு அடிக்கணும்னு ஸ்டார்ட் பண்ண இந்த சேனல் இன்றைக்கு பிளாக் ஷீப்பா மாறி மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்களைப் பெற்று வளர்ந்து நிற்கிறது. 2016-ம் ஆண்டு தங்களுடைய முதல் வீடியோவை அப்லோட் பண்ணியிருக்காங்க. பிளாக் ஷீப் அவார்ட்ஸ் கொடுக்குற அளவுக்கு வளர்ந்து நிக்கிறாங்க. செமல!
Nakkalites
மேயுற மாட்ட நக்குற மாடு கெடுத்த மாதிரி.. சும்மா இருந்த இவங்கள சொறிஞ்சு விட்டது யாருனு தெரியல. தங்களுடைய பொலிட்டிக்கல் ஐடியாலஜி, ஹியூமர் சென்ஸ் முக்கியமா அந்த கோயம்புத்தூர் லாங்குவேஜ்னு கலந்துகட்டி வீடியோஸ் போடுறதுல நக்கலைட்ஸ்க்கு இணை அவங்கதான். `வாயை புடுங்கலாம் வாங்க’னு இவங்க 2017-ம் ஆண்டு முதல்ல ஸ்பூஃப் வீடியோதான் அப்லோட் பண்ணிருக்காங்க.
Madan Gowri
விக்கி பீடியா, கூகுள் – இப்படியெல்லாம் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுற மதன் கௌரி 2016-ம் ஆண்டு ரிலேஷன்ஷிப் பத்திதான் முதன்முதலில் வீடியோ போட்ருக்காரு.
Rishipedia
எந்த வீடியோ போட்டாலும் மில்லியன் கணக்குல வியூஸ் வாங்குற ரிஷிபீடியா முதன்முதலில் `நீங்கள் பார்த்தால் கூட நம்பவேமுடியாத 5 ஹோட்டல்கள்’ என்ன என்பது பத்திதான் 2017-ம் ஆண்டு வீடியோ போட்ருக்காரு. அப்பவே நம்பமுடியாத விஷயங்களைதான் தேடி தேடி போய்ருக்காரு.
Tamil tech
251 ரூபாய் மொபைல் உங்களுக்கு நியாபகம் இருக்கா? அந்த மொபைலோட ரிவியூ வீடியோவதான் தமிழ் டெக் 2016-ம் ஆண்டு முதன்முதலில் போட்ருக்காங்க.
Jump cuts
சிங்கம் சிங்கிளாதான் வரும்னு சிங்கிளா வந்து மில்லியன் வியூஸ் வாங்குற ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர் புரோமோ வீடியோ ஒண்ணுதான் முதன்முதல்ல அப்லோட் பண்ணிருக்காரு. அதற்கு அடுத்தபடியா Boys vs Girls during examination என்கிற வீடியோவ 2016-லயே அப்லோட் பண்ணியிருக்காரு.
Parithabangal
அமைச்சர் வளர்மதி தொடர்பான ட்ரோல் வீடியோவதான் பரிதாபங்கள் சேனல்ல 2018-ம் ஆண்டு முதன்முதல்ல போட்ருக்காங்க.
Minutes mystery
`ரஜினி கமல் எல்லாம் ஒருகாலத்தில் இவரின் கால் தூசு ! இவருக்கு நிகர் யாருமில்லை’னு ராஜ்கிரனோட பயோகிராஃபி வீடியோவைதான் 2018-ம் ஆண்டு முதன்முதல்ல மினிட்ஸ் மிஸ்ட்ரி சேனல் அப்லோட் பண்ணியிருக்காங்க
Eruma sani
சி.எஸ்.கே கேப்டன் தோனியோட ஸ்டேடியம் எண்ட்ரி அப்போ ரசிகர்கள் செய்யும் சேட்டையைதான் முதன்முதல்ல எருமைசாணி 2017-ல் வீடியோவா போட்ருக்காங்க.
Madras Samayal
ரொம்பவும் ஃபேமஸான சமையல் சேனல்களில் மெட்ராஸ் சமையல் சேனல் முதன்மையானது. இவங்களுக்கு மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. சில்லி பிரான் எப்படி செய்றதுனு 2015-ல் தன்னுடைய முதல் வீடியோவ இவங்க போட்ருக்காங்க.
Village food factory
டாடி ஆறுமுகம்னு அன்போடு அழைக்கப்படும் இவருக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்காங்க. இயற்கையான இடத்துல இயற்கையான சமையல்முறையை கடைபிடிக்கிறதுல இவர் பெஸ்ட். நண்டு கிரேவி எப்படி வைக்கிறதுனு 2016-ல் முதன்முறையா தன்னுடைய வீடியோவை அப்லோட் பண்ணியிருக்காரு.
Village cooking channel
ராகுல்காந்தி வரைக்கும் ஃபேமஸான் குக்கிங் சேனலிது. மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்களை வச்சிருக்காங்க. ஈசலை எப்படி சமைக்கிறது என்பதைப் பற்றிதான் 2018-ல் தங்களோட முதல் வீடியோவா யூ டியூப் சேனல்ல போட்ருக்காங்க.
Mic set
சீன் போடாத – அப்டினு ஒரு ஆல்பம் சாங்கைத்தான் 2018-ல் மைக் செட் முதன்முதலில் தங்களோட யூ டியூப் பேஜ்ல அப்லோட் பண்ணிருக்காங்க. அப்புறம் நண்பர்கள்கூட சேர்ந்து பல வீடியோக்கள் போட்டு யூ டியூபின் பாகுபலியா வளர்ந்து நிக்கிறாரு.
Irfan’s view
ஃபுட் ரிவியூ பண்றவராதான உங்களுக்கு இர்ஃபானைத் தெரியும். ஆனால், அவர் போட்ட முதல் வீடியோ ஒரு மூவி ரிவ்யூ. ஆமா, `கவலை வேண்டாம்’ படத்தோட மூவி ரிவ்யூவதான் முதன்முதலில் தன்னோட இர்ஃபான்ஸ் வியூ யூ டியூப் சேனலில் 2016-ல் அப்லோட் பண்ணிருக்காரு.
Also Read : உங்க க்ரஷை இம்ப்ரஸ் செய்வதற்கான 11 வழிகள் இதோ..!