பொதுவா எல்லாருக்குமே ஸ்கூல், காலேஜ் லைஃப் எப்பவும் மறக்கமுடியாததா இருக்கும். ஸ்டூடண்ட் லைஃப் நமக்குக் கொடுக்குற பல கிஃப்ட்கள்ல ஃப்ரண்ட்ஷிப் ரொம்பவே முக்கியமானது. நமக்கு பல இடங்கள்ல ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும், இந்த லைஃப்ல கிடைக்குற ஃபிரண்ட்ஷிப் லைஃப் லாங் நம்ம கூடவே டிராவல் பண்ணுவாங்க.
தமிழ் சினிமா காமெடியன்களில் ஸ்கூல் பையன் தொடங்கி வயசானவர் கேரக்டர் வரைக்கும் எத்தனையோ வெரைட்டி காட்டுனதுல முக்கியமானவரு நம்ம வைகைப்புயல் வடிவேலு. பாடி லாங்குவேஜ்லயே நம்மை ஒரு உலுக்கு உலுக்கிருவாரு. அப்படி வடிவேலு, ஸ்டூடண்டா சம்பவம் பண்ண 5 படங்களைப் பத்திதான் நாம இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.
* ராஜாவின் பார்வையிலே – அறிவழகன்
தமிழ் சினிமா ஸ்கூல் ஸ்டூடன்ஸ்ல எப்பவும் ஒரு பசுமையான இடம் நம்ம அறிவழகனுக்கு இருக்கும். அஜித் – விஜய் சேர்ந்து நடிச்ச படமான ராஜாவின் பார்வையிலே படத்தில் ஒரே ஸ்கூல்ல 18 வருஷமா படிக்குற அறிவழகன் கேரக்டரை எந்தவொரு தமிழ் சினிமா ரசிகனும் மறந்திருக்க மாட்டார்கள். அதுவும் விளையாட்டு டீச்சருடனான காதல், ஹெட்மாஸ்டருக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுப்பது, டவுசர் பைக்குள் அரிசையைப் போட்டு தண்ணீரை ஊற்றுவது, டீச்சருடனான பிரிவுக்குப் பின் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் என படத்தின் ஒன் ஆஃப் தி ஹைலைட்டே நம்ம அறிவுதான். ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் மீம்களை எடுத்துக்கிட்டீங்கன்னா, நிச்சயம் அறிவு இல்லாம இருக்க மாட்டார்.
* காதலன் – ‘கலியபெருமாள்’ என்கிற வசந்த்
காதலன் படத்துல வர்ற வசந்த், மெட்ராஸ் கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜோட ஜாய்ன் செக்ரட்டரி. வேட்டியைக் கட்டி அதுக்கு மேல ஃபேண்ட் போடுற நம்ம வசந்தோட இண்ட்ரோவுக்கே தனி பி.ஜி.எம் போட்டுருப்பாரு ஏ.ஆர்.ரஹ்மான். பெண்களோட வகைகள் பற்றி பிரபுதேவாவுக்கு கிளாஸ் எடுப்பது தொடங்கி டான்ஸ் கிளாஸில் பேட்ட ராப் வரைக்கும் காமெடியில் அதகளம் பண்ணிருப்பாரு நம்ம வடிவேலு. காலேஜ் ஸ்டூண்ட் கேரக்டர்கள்லயே நம்ம வசந்த் கொஞ்சம் ஸ்பெஷலானவர்.
* காதல் தேசம் – வில்சன்
இவரோட இன்ட்ரோ சீனே ரெண்டு ஹீரோக்கள்ல ஒருத்தரான வினீத்துக்கு லிஃப்ட் கொடுப்பது போலத்தான் இருக்கும். பச்சையப்பாஸ் ஸ்டூடண்டான வசந்தோட முழுநேர வேலையே சைட் அடிக்குறதுதான். நிக்குற பஸ்ல ஏற மாட்டாரு; அதே மாதிரி இறங்கவும் மாட்டாரு. இதைக் கேட்டா, நீயெல்லாம் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்டானு நக்கலா ஒரு பதில் வைச்சிருப்பாரு. அதே மாதிரி கரண்ட் இல்லாம டிரெஸ்ஸை எப்படி அயர்ன் பண்ணலாம்னு ஹாஸ்டல்ல இருக்க ஸ்டூடண்ட்ஸுக்கும் நச்சுனு ஒரு ஐடியாவையும் வில்சன் கொடுத்திருப்பார்.
* மனதைத் திருடிவிட்டாய் – ஸ்டீவ் வாக்
தமிழ் சினிமா காலேஜ் ஸ்டூடண்ட்கள்லயே ரொம்ப ரொம்ப முக்கியமானவர் மனதைத் திருடிவிட்டாய் ஸ்டீவ் வாக். அதுக்கு முன்னாடி எந்தவொரு காமெடியனும் டிரை பண்ணாத பாடி லாங்குவேஜ், டிரெஸ்ஸிங் சென்ஸோட இருப்பார். விவேக், பிரபுதேவா கூட சேர்ந்து இவர் அடிச்ச லூட்டி எவர்கிரீன் கிளாசிக் காமெடினே சொல்லலாம். ஸ்டீவ் வாக், சீனியர் வாக், மிஸ்டர் அண்ட் மிஸஸ் வாக்னு நாலு கேரக்டர் இந்தப் படத்துல வடிவேலுவுக்கு. புரூஸை கரெக்ட் பண்றதுக்காக தன்னுடைய குடும்பத்தைப் பத்தி ஸ்டீவ் வாக் சொல்ற சீன்ல, உண்மையை பிரபுதேவா நினைச்சுப் பாக்குற சீன்லாம் வேற லெவல். அதேமாதிரி, சிங் இன் தி ரெய்ன், Why blood, Same blood-னு பல எவர்கிரீன் டயலாக்குகள் இந்தப் படத்துல கொட்டிக் கிடக்கும்.
* சச்சின் – அய்யாசாமி
ஸ்கூல் லைஃபுக்கு ஒரு அறிவுனா, காலேஜ் லைஃபுக்கு ஒரு அய்யாச்சாமி. விஜய் – வடிவேலு காம்போல ஒன் ஆஃப் தி பெஸ்ட்னே இந்தப் படத்தைச் சொல்லலாம். அந்த அளவுக்கு அதகளம் பண்ணிருப்பாங்க ரெண்டு பேரும் சேர்ந்து. ஒரு பக்கம் சந்தானமும் இந்தப் படத்தில் இருப்பார். விஜய்யை இமிடேட் செய்து, ஓடி வந்து இளைப்பாறியபடியே அதானேடா…னு வரிசையா டயலாக் பேசி, ஒரு பொண்ணுகிட்ட நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்கனு சொல்லி அடி வாங்குற சீன், இன்ட்ரோ சீன், சந்தானத்தைக் கலாய்க்கும் சீன், ஷாலினி மனதில் இடம்பிடிச்சுடனும்னு அவர் செய்யுற சின்ன சின்ன சேட்டைகள் எல்லாமே சிரிப்பு வெடிகள்தான்.
ஸ்டூடண்டா நம்ம வைகைப்புயல் கலக்குன கேரக்டர்கள்ல எது உங்களோட ஃபேவரைட்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க..
Also Read – இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா… கவுண்டமணியின் நேம் போர்டு மேஜிக்!