இந்தியாவோட அடுத்த பிரதமர் யாருனு கேட்டா… அதுல யோகி ஆதித்யநாத் பெயர்தான் முன்னாடி நிக்குது. யோகி ஆதித்யநாத் பெயரை சொன்னதும் நமக்குலாம் அவர் சொன்ன சர்ச்சைக் கருத்துகள், சர்ச்சை செயல்கள்தான் முதல்ல நியாபகம் வரும். யோகி ஆதித்யநாத் கையில் எடுக்குற புல்டோசர் தண்டனை பற்றி தெரியுமா? மக்களை இந்தியாவை விட்டு வெளியேறுங்கனு ஒரு தடவை சொன்னாரு. எதுக்கு தெரியுமா? அன்னை தெரசாவை விமர்சிக்கிறதையும் அவர் விட்டு வைக்கலை ஏன்? இதையெல்லாம் பற்றிதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
புல்டோசர் பாபா சர்ச்சை
பா.ஜ.க-வின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர் சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்து பேசியது இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகள் இந்தியாவுக்கு எதிராக விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். இந்தியாவில் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்திரப்பிரதேசத்தில், இதுதொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதற்கு மூளையாக இருந்தவர் முகமது என்றும் அவரது வீட்டில் துப்பாக்கி, நீதிமன்றங்களுக்கு எதிரான வாசகங்கள் இருந்ததாகவும் கூறி அவரைக் கைது செய்தனர். முகமது என்ற நபரின் வீடு விதிகளை மீறி கட்டியதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து அவரது வீட்டின் ஒரு பகுதியை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.
யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் புல்டோசர் தண்டனைகள் வழங்கப்படுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு சமூக விரோதிகள், அவர்களின் புகலிடங்கள், நில அபகரிப்பு என யோகி ஆதித்யநாத் அரசு கருதும் இடங்களை எல்லாம் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்குவது அவரின் வழக்கம். இந்த நடவடிக்கைகை மையமாக வைத்து கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட புல்டோசர் பாபா என எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத்தை கிண்டல் செய்தார். தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறது என பா.ஜ.கவினர் ஒருபக்கம் தெரிவித்தாலும், மற்றொரு பக்கம் யோகி ஆதித்யநாத் என்ன நீதிபதியா எனவும் எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். யோகி ஆதித்யநாத் அரசு புல்டோசர் தண்டனை கொடுக்கும்போதெல்லாம் அதுதொடர்பான சர்ச்சைகளும் சராமாரியாக எழுவது உண்டு.
யோகா மற்றும் சூர்ய நமஸ்காரம்
பா.ஜ.க அரசை பலரும் விமர்சிக்கிறதுக்கான முக்கிய காரணம் அதோட ஃபாஸிஸத் தன்மையும் எல்லா விஷயத்துலயும் இருக்குற திணிப்பும்தான். இதை முதலமைச்சர் ஆகுறதுக்கு முன்னாடி இருந்தே யோகி ஆதித்யநாத் கடைபிடிச்சிட்டு இருக்காருனு சொல்லலாம். யோகி ஆதித்யநாத் கோரக்பூர் எம்.பி ஆக இருந்தாரு. அப்போ ஒரு வாரணாசியில் உள்ள கோயில் விழா ஒண்ணுல கலந்துக்கிட்டாரு. அதுல அவர் பேசும்போது, “யோகா மற்றும் சூர்யநமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். சூர்யன் இரு கடவுள். அவருக்கு நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்கி சாக வேண்டும்”னு பேசியிருப்பாரு. அதாவது யோகா, சூர்யநமஸ்காரம் பண்ணாதவங்க வாழவே தகுதி இல்லாதவங்கன்ற ரேஞ்ச்ல பேசியிருப்பாரு. யோகி ஆதித்யநாத் பேசினதுக்கு எதிரா இந்தியா முழுவதும் மக்கள் பலரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
அமீர்கான் ஒரு மேடையில், “இந்தியாவில் இருப்பதை பாதுகாப்பாக உணரவில்லைனு என்னுடைய மனைவி சொல்றாங்க. அதனால, நாட்டைவிட்டு வெளியேறவும் விருப்பப்படுறாங்க. அதேமாதிரி, எங்களுடைய விருதுகளை திருப்பி கொடுக்கிறதை தங்களோட அதிருப்தியின் வெளிப்பாடாக காண்கிறோம்”னு பேசினாரு. இதற்கு யோகி ஆதித்யநாத், “நாட்டை விட்டு யாரேனும் வெளியேற விரும்பினால், நாங்கள் அவர்களைத் தடுக்கப்போவதில்லை. குறைந்தபட்சம் நாட்டில் மக்கள் தொகையாவது குறையும்”னு சொல்லியிருப்பாரு. யோகி ஆதித்யநாத்தோட இந்த ஸ்டேட்மென்டையும் மக்கள், சமூக ஆர்வலர்கள் பயங்கரமா வைச்சு செய்தாங்க. எதுக்கெடுத்தாலும் நாட்டைவிட்டு வெளியேறுனு சொல்றது பா.ஜ.க தலைவர்களுக்கு இப்போதும், எப்போதும் புதிய விஷயம் ஒண்ணும் இல்லை.
அன்னை தெரசா
இன்னைக்கும் மிகவும் மதிக்கப்படுற மனிதர்களில் ஒருத்தர், அன்னை தெரசா. பொதுவா இந்த மாதிரி மக்கள் சேவை செய்தவங்களை யாரும் விமர்சனம் பண்ணமாட்டாங்க. ஏன்னா, அவங்க பண்ண சேவைகளை வேற யாராலையும் பண்ண முடியாததா இருக்கும். ஆனால், பா.ஜ.க-வினர் அவரையும் விட்டு வைக்கலை. பா.ஜ.க கையில் வைத்துள்ள மத அரசியலை வைத்து அன்னை தெரசாவை பயங்கரமா விமர்சனம் பண்ணுவாங்க. யோகி ஆதித்யநாத் எம்.பியாக இருந்தபோது, “இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்க அன்னை தெரசா பயங்கரமா முயற்சி பண்ணாங்க. கொல்கத்தாவின் அவங்க இருந்தபோது செய்த செயல்கள் எல்லாம் வடகிழக்கு மாநிலங்களில் இன்றைக்கும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரிவினை குரல்கள் அதிகமாயிருக்கு”னு பயங்கரமா விமர்சனம் பண்ணியிருப்பாரு. அந்த நேரத்துல இவர் அன்னை தெரஸா பத்தி பேசுனது ரொம்பவே ஷாக்கா இருந்துச்சு. ஆனால், மதத்தை வைச்சு பலரையும் கேலி பண்றதும் பா.ஜ.க தலைவர்களுக்கு புதுசு இல்லைதான!
ஷாரூக்கான்
பாலிவுட்ல சூப்பர் ஸ்டாரா இருக்குறவரு ஷாரூக்கான். அவரைப் பத்தி யோகி ஆதித்யநாத் பேசுனதாக்கூட ஒரு வீடியோ வெளியாகி இந்திய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வீடியோவில் யோகி ஆதித்யநாத், “ஷாரூக்கான் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து கூறுகிறார். இப்படி அவர் பேசினால், இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மக்கள் அவருடைய படங்களை புறக்கணிப்பார்கள். பின்னர், மற்ற இஸ்லாமியர்களைப் போல அவரும் சாலைக்கு வந்துவிடுவார்”னு பேசியிருந்தாரு. அவரை பயங்கரவாதிகளுடனும் ஒப்பிட்டு கூறினார். அவரது அந்த சமயத்தில் வரவிருந்த பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவியது. ஆனால், அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் எனகூறியது பொய்யான தகவல் எனவும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
Also Read – இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா… கவுண்டமணியின் நேம் போர்டு மேஜிக்!