தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நாள் முதல் ஷோவுக்கு வெறித்தனமான கொண்டாட்ட மூடில் உள்ளே சென்ற ரசிகர்களில் பலரும் தலையைத் தொங்கப்போட்டு வந்ததே படம் எப்படி என்பதைச் சொல்லாமல் சொன்னது. விஜய்யின் அலட்டல் இல்லாத நடிப்பு… பரபர ஆக்ஷன் காட்சிகள்.. அங்காங்கே சில சிரிப்பு வெடிகள் என போரடிக்காமல் போனது. ஆனால், நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த 4 மேஜிக் இந்த படத்தில் மிஸ் ஆனதுதான் பிரச்னை. அது என்னென்ன?

வித்தியாசமான கேரக்டர்ஸ்
கோலமாவு கோகிலா, டாக்டர் இந்த இரண்டு படங்களில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 30 கேரக்டர்களை பெயர் சொல்லி தனியாக அடையாளம் சொல்ல முடியும். அந்தளவுக்கு ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு பர்ப்பஸ் இருக்கும். அவர்கள் அந்தக் கதையை நகர்த்திக் கொண்டு செல்ல உதவுவார்கள். ஆனால், பீஸ்ட் படத்தில் மிகக் குறைவான கேரக்டர்கள், அவர்களும் பர்ப்பஸ் இல்லாமல் சும்மானாச்சுக்கும் கதையில் உலா வருவதால் வழக்கமாக நெல்சனின் படங்களில் இருக்கும் சுவாரஸ்யம், இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். விடிவி கணேஷ் கேரக்டர், மனநல மருத்துவர் இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள்தான் தனித்துத் தெரிந்தன.

ஹீரோ ஒன் மேன் ஆர்மியா?
டாக்டர் படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு கடத்தப்பட்ட குழந்தையை மீட்க வேண்டும் என்ற கடமை இருக்கும். அதை அவர் மட்டுமே தனியாக செய்யமாட்டார். ஒரு குடும்பமே சேர்ந்து அவர்களுக்கு உதவும். அந்த திட்டத்தில் அவர்களுடைய பங்கும் பெரிதாக இருக்கும். நிறைய இடங்களில் ஹீரோ அளவுக்கு இன்னும் சில கேரக்டர்களுக்கு மாஸ் இருக்கும். ஆனால், பீஸ்ட் படத்தில் ஒன் மேன் ஆர்மியாக தீவிரவாதிகளை பொளந்து எடுக்கிறார் விஜய்.
சீரியஸூக்கு நடுவில் காமெடி.. காமெடிக்கு நடுவில் சீரியஸ்!
நெல்சன் படங்களில் இருக்கும் ப்ளஸ்ஸே டார்க் காமெடிதான். ஒரு சீரியஸ் சீனுக்கு நடுவில் காமெடி எட்டிப்பார்க்கும். காமெடி சீனிலும் ஒரு சீரியஸ்னஸ் இருக்கும். உதாரணமாக டாக்டரில் ரயில் ஃபைட்டில் சீரியஸாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போதே சிரிப்பூட்டுவார்கள். அது பீஸ்ட்டில் மிஸ்ஸிங். காமெடி தனியாகவும் சீரியஸ் தனியாகவும் நிற்கிறது.

Larger than life
டாக்டர், கோலமாவு கோகிலா இரண்டிலுமே எவ்வளவு ஆக்சன் காட்சிகள் இருந்தாலும் எதார்த்தத்தை மீறியதாக இருக்காது. ஆனால் இதில் கார் பறக்கிறது, ரஃபேல் தாக்குதல் நடத்துகிறார்.
Also Read – அஜித் தாக்கப்பட்டாரா?! ‘பீஸ்ட்’ பார்க்கலாமா – வேண்டாமா… ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்