`காலம் பொன் போன்றது’ – அப்டினு சொல்லுவாங்க. ஏன், நம்மளே இந்த ஸ்டேட்மெண்டை அடிக்கடி படன்படுத்தியிருப்போம். ஆனால், உண்மையிலேயே காலத்தை பொன் போல கருதி அதை நாம் செலவழிக்கிறோமா? என்று கேள்வி கேட்டால்… கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால், டைம் வேஸ்ட் ஆகுதுனு ரொம்பவே புலம்புவோம். அந்த புலம்புற லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்களா? அப்போ உங்களுக்கான கட்டுரைதான் இது. உங்களது வேல்யூபிளான டைமை வேஸ்ட் பண்ணாம இருக்குறதுக்கான சில ஐடியாக்கள் மற்றும் எப்படி நேரத்தை வேல்யூபிளாக செலவிடலாம் என்பதற்கான சில ஐடியாக்கள் இங்கே..
* உங்களது நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள் என உங்களுக்கு சரியா தெரியவில்லை என்றால் நீங்கள் சரியாக நேரத்தை கையாளவில்லை என்று அர்த்தம். உங்களது செயல்பாடுகளை கேலண்டர் அல்லது நோட்பேட் போன்றவற்றில் குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் உங்களது நேரத்தைக் கண்காணிக்க முடியும். எனவே, உங்களது நேரத்தைப் பதிவு செய்வதன் மூலம் என்ன விஷயத்தில் நீங்கள் தேவையில்லாமல் நேரத்தை செலவழிக்கிறீர்கள் என்பதை அறிந்துகொண்டு தேவையான விஷயத்தை அந்த நேரங்களில் செய்ய முடியும்.
* சமூக வலைதளங்களில் உங்களது நேரத்தை செலவிடுவது, மற்றவர்களுடன் உங்களது நேரத்தைக் கழிப்பது போன்றவை பாஸிட்டிவான விஷயங்கள்தான். இருந்தாலும் உங்களுக்கான பெர்சனல் நேரங்களை ஒதுக்கி அந்த நேரத்தை மற்ற விஷயங்களுக்காக பயன்படுத்தினால் உங்களது நேரங்களை மற்றவர்கள் திருட நீங்களே அனுமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனைத் தவிர்க்க தைரியமாக `நோ’ சொல்லிப் பழகுங்கள். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களுக்காக `நோ’ சொல்வது தவறே இல்லை. இந்த விஷயத்தில் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நீங்கள் நினைக்கத் தேவையில்லை.
* நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரங்களை செலவழிப்பது வாழ்க்கையை வேடிக்கையாகவும் நிறைவாகவும் மாற்றும். எனவே, அவர்களுடன் உங்களது நேரத்தில் குறிப்பிட்ட பகுதியைச் செலவு செய்யலாம். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை சமாளிக்க இந்த குறிப்பிட்ட நேரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். எனவே, தினமும் நீங்கள் யாருடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்களுடன் உங்களது நேரத்தை செலவு செய்யலாம். இதன்மூலம் குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் கடமைகள் குறித்தும் தெளிவு கிடைக்கும். அதேபோல நேரம் கிடைக்கும் சமயங்களில் உங்களது வீட்டினருடன் இணைந்து சுற்றுலா சென்று வரலாம். இதற்கான திட்டத்தை ஆண்டின் தொடக்கத்திலேயே வகுப்பது நல்லது. பின்னால், பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால், அந்த விஷயம் நடக்காமலேயே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தினமும் நேரங்களை ஒதுக்கி வையுங்கள். இப்போது சிறிய அளவில் இதற்காக நீங்கள் நேரத்தை ஒதுக்குவது பின்னாளில் உங்கள் வாழ்க்கையில் மிகவும் உதவியாக இருக்கும். உங்களது கவலைகளை மறக்கும் வரை உடற்பயிற்சி செய்யுங்கள். அதேபோல வாசிப்பு பழக்கத்தையும் உங்களது நாளின் அங்கமாக வைத்துக்கொள்ளுங்கள். புத்தகங்களை வாசிப்பது மிகவும் நிறைவான உணர்வை உங்களுக்குத் தரும். நேரத்தை வீணாக செலவு செய்தோம் என்ற எண்ணம் நீங்கள் படிக்கும்போது அடியோடு மறையும்.
* இன்றைய சூழலில் பெரும்பான்மையானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை என்றால் தூக்கம்தான். பல மணி நேரம் விழித்திருந்து திரைப்படங்களைப் பார்ப்பது பாடல்களை கேட்பது போன்றவற்றில் நேரங்களை செலவிடுகின்றனர். எனவே, நேரம் கிடைக்கும்போது நீங்கள் தூக்கத்தை மேற்கொள்வது சிறந்த விஷயங்களில் ஒன்றாக இருக்கும். போதிய அளவான நேரம் தூங்குவது உங்களது புத்துணர்ச்சியை அதிகரிக்கும். தூங்குவதை சோம்பேறித்தனம் என்று கருதாமல் உழைப்புக்கு ஏற்ற ஊதியமாகக் கருதி அதனை செய்ய வேண்டும்.
Also Read : விம்பிள்டர் ஜூனியர் சாம்பியன் சமீர் பானர்ஜி… யார் இவர்?