சந்தோஷ் நாராயணன் தெரியும்… டி.ஜே.சேண்டி தெரியுமா?

‘கண்ணம்மா கண்ணம்மா’ நம்மளை உருக்குற காதல் மெலடி, ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்’னு ஃபயர் வரவைக்கிற தீம், ‘ஆடி போனால் ஆவணி’னு கலக்கலான கானா… ‘எஞ்சாய் எஞ்சாமி’னு இன்டர்நேஷனல் லெவல்ல கலக்குற மக்களின் வாழ்வை சொல்ற இன்டிபென்டன்ட் ஆல்பம் – இப்படி எல்லாத்துலயும் கலக்குற சந்தோஷ் நாராயணன் எதுல பெஸ்ட்? அவருக்கு இருந்த ஸ்டைலிஷான பெயர் என்ன? மியூசிக்லாம் எப்போ கம்போஸ் பண்ணுவாரு? சந்தோஷ் பாடுறதை கேட்டதும் ரஞ்சித்தோட ரியாக்‌ஷன் என்ன? விஜய்க்கு பிடித்த சந்தோஷ் பாட்டு எது? இதெல்லாம் தெரிஞ்சுக்க வீடியோவை முழுசா பாருங்க!

Santhosh Narayanan
Santhosh Narayanan

கல்லூரி படிக்கும்போதே சந்தோஷ் நாராயணனுக்கு மியூசிக் மேல ஆர்வம் வந்திடுச்சு. ஆனால், காலேஜ் முடிச்சதும் ஒரு நாள் மட்டும் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்த்துருக்காரு. அன்னைக்கு லஞ்ச் டைம்ல, உங்க காலேஜ் லைஃப் இன்னும் முடியலன்ற ரேஞ்சுக்கு கம்பெனில பேசியிருக்காங்க. வெளிய வந்ததும் அம்மாக்கு கால் பண்ணியிருக்காரு. அம்மா கேட்ட முதல் கேள்வி. ‘என்னடா வேலைய விட்டுட்டியா?’ அப்டின்றதுதான். நமக்குலாம் மியூசிக்தான் சோறு போடும்னும் சொல்லியிருக்காங்க. அதை இன்ஸ்பைரிங்கா எடுத்துட்டு உழைக்க ஆரம்பிச்சிருக்காரு.

ஒரு கட்டத்துல வறுமை அதிகமாயிருக்கு. படம் எதுவும் நடக்காதுனு நினைச்சிருக்காரு. அப்போ ரிச்சி ஸ்ட்ரீட்ல கம்ப்யூட்டர் அஸம்பிள் பண்ணி கொடுக்க ஆரம்பிச்சிருக்காரு. ஆரம்பத்துல எலக்ட்ரானிக் மியூசிக் பண்ணிட்டு இருந்துருக்காரு. அப்போலாம் இவரோட பெயர் டி.ஜே.சேண்டி.

Santhosh Narayanan
Santhosh Narayanan

சந்தோஷ் நாராயணன் வாழ்க்கைல வறுமை அதிகமா இருந்தப்போ, ஆந்திரா மெஸ்லதான் சாப்பாடு. அந்த ஆந்திரா மெஸ் நடத்துனவரு, ஒரு நாள் என்னப்பா ரொம்ப கஷ்டப்படுறீங்களானு கேட்ருக்காரு. ஆமானு, சந்தோஷ் சொன்னதும். அவர்கிட்ட இருந்த ஒரு பழைய சேர் ஒண்ணை பரிசா கொடுத்துருக்காரு. யாராவது மியூசிக் கேக்க வந்த அந்த சேர்லதான் உட்கார வைப்பாராம். அதுக்குமுன்னாடிலாம் தரைதான்.

பா.ரஞ்சித் அறிமுகமாகி ‘அட்டக்கத்தி’ படத்துக்கு மியூசிக் போட சொல்லியிருக்காரு. அப்போ, புரொடியூஸர் சி.வி.குமார்… சந்தோஷ்கிட்ட, “எனக்கு நீங்க இந்த படத்துல மியூசிக் பண்றதுல விருப்பம் இல்லை. ஆனால், ரஞ்சித் நீங்கதான் வேணும்னு சொல்றாரு. நீங்க நல்லா பண்ணீங்கனா… எனக்கும் வேணும்”னு சொல்லியிருக்காரு. அப்புறம் நடந்ததுலாம் வரலாறு.

பல இசையமைப்பாளர்கள் ரஹ்மானைப் பார்த்து நைட்லதான் மியூசிக் கம்போஸ் பண்ணுவாங்க. ஆனால், இவருக்கு அப்படி எந்த சென்டிமென்டும் இல்லை. ஏரியால கரன்ட் இருக்கும்போது மியூசிக் பண்ணிப்பாராம். அதுமட்டுமில்ல இவர் பண்ற மியூசிக்லாம் கேட்டுட்டு, ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டுதான மியூசிக் போடுறனு கேப்பாங்களாம். இவரோட ஃப்ரெண்ட்ஸ் ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டு மியூசிக் பண்ணதைக் கேட்ருக்காரு. கேவலமா இருந்துச்சாம். சந்தோஷ் நாராயணன் ஒரு டீடோட்லர்.சொல்லுவாரு.

Santhosh Narayanan
Santhosh Narayanan

ஒரு தடவை ‘நான் நீ’ பாட்டை பா.இரஞ்சித்துக்கு பாடி காமிச்சிருக்காரு. ‘என்ன மாமா… இவ்வளவு கேவலமா பாடுற’னு கிளம்பி போய்ட்டாராம். கூடவே இருந்து பார்த்தா எதுவும் நல்லாருக்காதுனு நினைச்சிட்டாராம். அப்புறம் அவர் பெருசா ஸ்டுடியோக்கு வர மாட்டாராம். தேசாந்திரி பாட்டுலாம் 17 வருஷத்துக்கு முன்னாடி ட்யூன் பண்ணி வைச்சிருந்தேன்.

கானாப் பாட்டை அவருக்கு அறிமுகப்படுத்தினதே பா.ரஞ்சித் தான். அதுக்கு முன்னாடிலாம் கானானா என்னனே அவருக்கு தெரியாது. கானாவைப் பத்தி நிறைய விஷயங்களை கானா பாலா சந்தோஷ்க்கு சொல்லிக்கொடுத்தாரு.

விஜய்க்கு ஜிகர்தண்டா படத்தோட பாட்டு ரொம்பவே புடிக்குமாம். இதை சந்தோஷ்க்கிட்ட சொல்லியிருக்காரு. அவரோட பிறந்தநாள்க்கு ஒரு கிரிக்கெட் பேட்டும் பரிசா கொடுத்துருக்காரு. கிரிக்கெட்னா சந்தோஷ்க்கு உயிரு. ஜி.என்.சி.சிதான் அவர் கிரிக்கெட் வாட்ஸ் அப் குரூப்போட பெயர். அதுல விளையாட வராம, பேசாம இருந்தாலோ, ஃபார்வேட் மெசேஜ் அனுப்புனாலோ ரிமூவ் பண்ணிடுவாங்களாம்.

விஜய்யுடன்
விஜய்யுடன்

தன்னோட பாட்டுல அரசியல் கருத்துகள், மனிதம், ஈக்குவாலிட்டி எல்லாத்தையும் பேசுவாரு. மனிதி பாட்டு இன்னும் கொஞ்சம் வருஷத்துல தேவையில்லாம போகணும்ன்றதுதான் அவரோட ஆசை. அந்தப் பாட்டுல அவங்க அம்மாவும் பாடுனது அவருக்கு இன்னும் ஸ்பெஷல்.

ஃபர்ஸ்ட் சந்தோஷ்பண்ண வேண்டிய படம் ‘தமிழ் படம்’. அதுல சாம்பிள்க்கு போட்ட பாட்டுலாம் மொக்கையா இருந்ததால கிளம்புனு சொல்லியிருக்காங்க. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் சந்தோஷூக்கு அப்பா – அம்மா மாதிரி. எம்.எஸ்.வி தாத்தா மாதிரி. அவருக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் மைக்கேல் ஜாக்ஸன். அவரே ஒரு இன்டர்வியூதான் வாழ்க்கையிலயே பண்ணியிருக்காரு. அவரே அவ்வளவுதான் நம்ம எதுக்கு இவ்வளவு இன்டர்வியூ கொடுக்கணும்னு பேசாம இருக்காராம்.

ஆஸ்திரேலியாவுக்கு அப்பப்போ போய் ரெக்கார்ட் பண்ணுவாராம். அது பயங்கர எக்ஸைட்மெண்ட் இருக்குமாம். ஆகாயம் தீப்புடிச்சா பாட்ட ரெக்கார்ட் பண்ணிருக்காரு அங்க இருந்து. ரஞ்சித் என்ன இவ்வளவு கேவலமா இருக்கு. அங்க போய் என்ன பண்ற ஊருக்கு வானு திட்டி இருக்காரு.

கார்த்திக் சுப்புராஜ்கூட ரஜினி வொர்க் பண்ணப்போறருனு சொன்னதுக்கு அப்புறம் மியூசிக் அனிருத்னு வந்துச்சு. அதுக்கு கார்த்திக் சுப்புராஜ் குடும்பத்தோட சந்தோஷ் வீட்டுக்குப் போய் டிஸ்கஸ் பண்ணியிருக்காரு. அந்த சிச்சுவேஷன்ல எமோஷனலாகி அழுதுட்டாராம்.

சந்தோஷ்க்கு பாடவே தெரியாதுனு பிரதீப் சொல்லுவாரு. சந்தோஷ்க்கு பிடிச்ச சிங்கர் பிரதீப்தான். அதுவும் ‘ஒருமுறை’ பாட்டு ரொம்பவே புடிக்குமாம். வீட்டுக்கு சும்மா மீட் பண்ண பிரதீப் போனா ஒரு பாட்டு பாடிட்டு போனு சந்தோஷ் சொல்லுவாராம். அப்படி எதார்த்தமா பாடுனதுதான் மனிதன் படத்துல ‘அவள்’. அதேமாதிரி கீபோர்டு கொண்டு வரானோ இல்லையோ கிளீனர் கொண்டு வருவான்’னும் கலாய்ப்பாங்க. சரி, மெலடி, தீம், கானா – இதுல எது பெஸ்ட்னு ஒரு முடிவுக்கு வர்றது ரொம்பவே கஷ்டம். என்னைக் கேட்டா அவர் மூணுலயுமே பெஸ்ட்தான். அதனால, அவர் எதுனு பெஸ்ட்னு நீங்க நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – ’மேக்கப் மேன் டு பிரமாண்ட தயாரிப்பாளர்’ – ஏ.எம்.ரத்னம்… சில சுவாரஸ்யங்கள்!

2 thoughts on “சந்தோஷ் நாராயணன் தெரியும்… டி.ஜே.சேண்டி தெரியுமா?”

  1. Hi there! This post could not be written any better!
    Reading through this post reminds me of my previous room mate!
    He always kept talking about this. I will forward this post to him.

    Pretty sure he will have a good read. Thanks for sharing!!

  2. Howdy! Do you know if they make any plugins to assist
    with Search Engine Optimization? I’m trying to get my site to rank for some targeted keywords but I’m
    not seeing very good success. If you know of
    any please share. Thanks! I saw similar text here: Eco blankets

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top