நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருப்பது, அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. CSK வெற்றிப்பாதைக்குத் திரும்ப 3 விஷயங்கள் முக்கியம்… அது என்னென்ன?
பேட்டிங்கில் ஃபயர்

ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஃபார்ம் சி.எஸ்.கேவுக்கு கவலையாக மாறியிருக்கும் அதேநேரம், டாப் ஆர்டரும் மிடில் ஆர்டரும் பேட்டிங்கில் ஃபயர் காட்டவில்லை. பேட்டிங்கில் சரவெடி வெடித்து பழைய பன்னீர்செல்வமாக சி.எஸ்.கே பேட்டர்கள் ஃபார்முக்குத் திரும்ப வேண்டும்.
சஹார் ரீப்ளேஸ்மெண்ட்
தீபக் சஹாரை டி20 ஸ்பெஷலிஸ்டாக வளர்த்தெடுத்தில் சி.எஸ்.கே-வின் பங்கு ரொம்பவே முக்கியமானது. அதனால்தான், இந்த ஏலத்தில் 14 கோடி என்கிற பெரும் தொகை கொடுத்து அவரை எடுத்தது. பவர்பிளேவில் எதிரணிக்குக் கலக்கம் கொடுக்கும் அவர் காயத்தால் விளையாடாத நிலையில், அவருக்கு சரியான மாற்றுவீரரை சி.எஸ்.கே சீக்கிரம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது உடனடித் தேவை.

பிளேயிங் லெவன் காம்பினேஷன்
ஐபிஎல்லைப் பொறுத்தவரை பிளேயிங் லெவன் காம்பினேஷன் ரொம்ப முக்கியம். இந்த சீசனில் சி.எஸ்.கேவுக்கு இதுவரை சரியான பிளேயிங் லெவன் காம்பினேஷன் அமையவில்லை. பேட்ஸ்மேன், பௌலர், ஆல்ரவுண்டர் என பேப்பரில் வெயிட்டாக இருந்தாலும், சரியான பெர்ஃபாமிங் சைட்-ஆக சி.எஸ்.கேவுக்கு கிளிக் ஆகவில்லை.
Also Read – Retired Out – Retired Hurt வித்தியாசம்… ஐசிசி விதி என்ன சொல்கிறது?