உலகம் முழுவதும் விரும்புற விளையாட்டுல ஒண்ணு கிரிக்கெட். கிரிக்கெட் அப்படிங்குறதைத் தாண்டி ஒருவித எமோஷன்களோட சம்பந்தப்பட்டது. அதனாலதான் என்னமோ ஒரு டீம் ஜெயிக்கும்போது நாமளே ஜெயிச்சது மாதிரி சதோஷப்படுறோம். அதேபோல நம்ம ஆதர்சனமான டீம் தோற்குறப்போ நாமளே தோத்த மாதிரி ஒரு வருத்தத்தையும் கொடுக்குது. அப்படி கிரிக்கெட் ஹிஸ்டரியில எமோஷனல் மொமெண்ட்ஸ் நிறைய இருக்கு. நாம ஐ.பி.எல்ல நடந்த 5 எமோஷனல் மொமெண்ட்களைப் பத்தித்தான் இந்த வீடியோல பார்க்க போறோம். அதுல சில மொமெண்ட்கள் பார்த்தவங்களை கண்ணீர்விட வைக்கிற மாதிரிகூட இருக்கும்.
ரத்தத்துடன் விளையாடிய வாட்சன்!
* 2019- ஐ.பி.எல் சி.எஸ்.கே – மும்பைக்கு இடையில நடந்தது. பைனல் மேட்ச்ல சென்னை செகண்ட் பேட்டிங் பிடிச்சு டார்கெட்டுக்கு திணறிக்கிட்டிருக்கும்போது, முக்கியமான வீரர்கள்லாம் அவுட் ஆகி வெளியே போயிடுவாங்க. ஆனா ஓப்பனிங் இறங்கின வாட்சன் மட்டும் அவுட் ஆகாமல் வெறித்தனமா விளையாண்டுகிட்டிருந்தார். எந்த அளவுக்குனு சொன்னா கால்முட்டியில ரத்தம் வந்துகிட்டிருக்கும். ஆனா, அதைக்கூட பொருட்படுத்தாம அசால்ட்டா விளையாண்டுகிட்டிருப்பார். இந்த ஒரு விஷயத்தை ரொம்ப நேரத்துக்கு அப்புறமா ரசிகர்கள் கவனிச்சாங்க. அதைப் பார்த்ததும் க்ரவுண்ட்லயே வாட்சனோட டெடிகேசனுக்காக கண்கலங்கிட்டாங்கன்னே சொல்லலாம்.
கண்கலங்கின கோலியும், டிவிலியர்ஸூம்!
* மேட்ச் பார்த்து ரசிகர்கள் அழலாம். ஆனா கிரிக்கெட் வீரர்களே அழுத சம்பவமும் நடந்திருக்கு. 2021- ஐ.பி.எல் – ஆர்.சி.பி செம பார்ம்ல இருந்தாங்க. இந்த வருஷம் கப் அடிச்சிருவோம்னு நம்பிக்கையோடவும் இருந்தாங்க. அவ்ளோ ஏன் ரசிகர்களும் அந்த மனநிலையிலதான் இருந்தாங்க. அதுதான் ஏ.பி டிவிலியர்ஸோட கடைசி சீசன். இது மட்டும் இல்லாம விராட் தலைமையில ஆர்.சி.பி விளையாடுன கடைசி சீரிஸூம் அதுதான். ஆனா, துரதிர்ஷ்டவசமா ஆர்.சி.பி அந்த செமி பைனல்ல கொல்கத்தா டீம்கிட்ட தோத்து போயிடுது. பெரிய எதிர்பார்ப்புல இருந்த டிவிலியும், கோலியும் கிரவுண்ட்லயே கண்கலங்கி அழுதாங்க. அதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டு போனாங்க.
ரோஹித் சர்மாவின் பெருந்தன்மை!
* 2021- பஞ்சாப்-மும்பைக்கு இடையிலான மேட்ச்ல கெயிலுக்கு பந்து வீசுவார். கெயில் அதை ஸ்ட்ரெயிட்ல அடிக்க, மறுமுனையில இருந்த ராகுல்மேல பட விழுற நிலைக்கு போயிடுவார். அவர் மேல பட்ட பந்து க்ருணால் பாண்டியாகிட்ட போயிடும். அதை எடுத்து ராகுலை ரன் அவிட் ஆக்கிட்டு, அவுட் கேட்பார் க்ருணால் பாண்டியா. ராகுல் அதிர்ச்சியா நிற்க, கேப்டன் ரோகித் அவுட் இல்லை, பந்து போடுனு சொல்ல, க்ருணால் பாண்டியாவும் அவுட் இல்லைனு பந்து போடுவார். அப்போ ராகுல் ரோகித்தையும், க்ருணாலையும் பார்த்து நெகிழ்ச்சியா ஒரு தம்ப்ஸப் காட்டுவார். அந்த மொமெண்ட் ரோகித்தோட பெருந்தன்மையை காட்டினது.
தோற்றது தெரியாமல் கொண்டாடிய கெயில்!
* கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் செலிபிரேட் பண்றது தப்பில்ல, ஆனா ஜெயிக்கிறதுக்கு முன்னால செலிப்ரேட் பண்றது தப்பு. அதுக்கு எடுத்துக்காட்டா ஒரு சம்பவம் 2013-ம் வருஷம் நடந்த சென்னை-பெங்களூரு ஐ.பி.எல் மேட்ச்ல கடைசி ஒரு பால்ல 2 ரன்கள் அடிச்சா சென்னை ஜெயிச்சுடுவாங்கனு இருந்தது. கடைசி பாலைஜட்டு ஸ்ட்ரைக்ல இருக்க, ஆர்.பி சிங் பாலை இறக்க, பேட்ல டாப் எட்ஜ் பட்ட பால் கேட்ல முடிஞ்சிடும். இப்போ மேட்ச் ஜெயிச்சிட்டோம்னு பெங்களூரு வீரர்கள்லாம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ அம்பயர் மட்டும் நோ-பால் கேட்டு டி.வி அம்பையர்கிட்ட கால் பண்ணுவாரு. அப்போ ரிவ்யூல நோ பால்னு தெரிய வர சென்னை செயிச்சிட்டோம்னு அவங்க செலிப்ரேட் பண்ண ஆரம்பிப்பாங்க. ஆனா ஆர்.சி.பி வீரர்கள்தான் சோகமான முகத்தோட இருந்தாங்க. இதுல இன்னும் சோகம் என்னன்னா ரிவ்யூல நோ பால்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா கூட கெயில் டான்ஸ் ஆடி செலிப்ரேட் பண்ணிக்கிட்டிருப்பாரு. பாவம் யாரு பெத்த பிள்ளையோ மொமெண்ட்..!
Also Read – எடுத்தது 2 படம்.. பண்ணது பல சம்பவங்கள்… அதுதான் நலன் குமாரசாமி!
ஒரு ரன்னில் தோல்வி.. ஆறுதல் சொன்ன கோலி!
* 2021- ம் வருஷம் பெங்களூரு – டெல்லி மேட்ச்ல கடைசி ஓவர்ல 14 ரன்கள் எடுத்தா மேட்ச் வின்னர் ஆகலாம். பண்ட்டும், ஹெட்மயரும் க்ரீஸ்ல இருப்பாங்க. கடைசி ஓவர்ல 13 ரன்கள் எடுத்துடுவாங்க. ஆனா, அந்த ஒரு ரன் எடுக்க முடியாம தோத்துப் போயிடுவாங்க டெல்லி டீம். இதுக்காக க்ரவுண்ட்ல மனசு வருத்தப்பட்டு பண்ட்டும், ஹெட்மயரும் என்ன செய்யுறதுனு தெரியாம நிற்பாங்க. அப்போ கவலையை போக்குறதுக்காக ஆப்போசிட் டீம் கேப்டன் கோலி, ஹெட்மயரோட தலைமேல கையை வச்சு ‘இதெல்லாம் சாதாரணம்’னு ஆறுதல் சொல்லி அழைச்சுட்டு போவார்.
இதுபோக வீரர்கள் அடிபடுறப்போ ஆப்போசிட்ல விளையாடுற வீரர்கள் ஹெல்ப் பண்ண சம்பவங்களும் நிறையவே நடந்திருக்கு. உங்களுக்கு ஹார்ட் டச்சிங்க்கா பட்ட எமோஷனல் மொமெண்ட்களை கமெண்ட்ல சொல்லுங்க.