அப்பா, அண்ணன் மூலம் தமிழ் சினிமாவுல ஹீரோவா அறிமுகமாகியிருந்தாலும், தனது தனித் திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவா உயர்ந்திருக்கிறார் ஜெயம் ரவி. 20 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஜெயம் ரவி, அதற்காகப் போட்ட உழைப்பு பெரியது. அவரோட சினிமா பயணம் தொடங்குன புள்ளி… அவரோட பெர்சனல் லைஃப்னு அவரோட ஜர்னியைப் பத்திதான் நாம இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்…

ஜெயம் படம் மூலம் ஹீரோவா அறிமுகமாகியிருந்தாலும் ரவி, சின்ன வயசுலயே ஒரு சைல்ட் ஆர்டிஸ்டா இரண்டு படங்கள்ல நடிச்சிருக்கார். அந்த ரெண்டு படங்களுமே அவரோட அப்பா எடிட்டர் மோகன் தயாரிப்புல வெளிவந்த படங்கள். இவரை கல்லூரியில் சேர்க்கக் கூட்டிப்போனபோது, `உங்களோட குடும்பம் சினிமா குடும்பம். படிப்பை டிஸ்கண்டினியூ பண்ண வாய்ப்புகள் அதிகம். அதனால, ஒரு சீட் வேஸ்டாயிடுமே’னு கல்லூரி நிர்வாகம் தரப்பில் தயங்கியிருக்கிறார்கள். ஆனால், அவரது பெற்றோர்கள் இருவரும், நாங்க கியாரண்டி. எங்க மகன் படிச்சு முடிச்ச பிறகுதான் கூட்டிட்டுப் போவோம் என்று உறுதியளித்திருக்கிறார்கள். முதல் ஆண்டில் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பண்ணிய பெர்ஃபாமன்ஸைப் பார்த்து, கல்லூரியின் முதல்வரே, நீங்க நல்லா பண்றீங்க.. நிச்சயம் நடிக்கப் போகலாமே என்று பாராட்டினாராம்.
ஜெயம் ரவி, தன்னோட சகோதரர் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படம் மூலம் ஹீரோவா அறிமுகமானார். ஆனா, அதுக்கு முன்னாடியே ராஜாவை நடிக்க வைத்து இயக்கியிருக்கிறார் ரவி. எப்போ நடந்தது அந்த சம்பவம்… அவர் நடிச்ச கேரக்டர் பத்தின சுவாரஸ்ய தகவல்களை வீடியோவோட கடைசில சொல்றேன்.

சின்ன வயசுல இருந்தே சினிமா நுணுக்கங்களைத் தனது தந்தையிடம் கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள் இவரும் இவரது சகோதரர் ராஜாவும்… கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சினிமா பற்றிய நேரடி அனுபவம் வேண்டும் என்கிற வகையில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கிறார். அதன்பின்னர், ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படம் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். யோகி பாபு லீட் ரோலில் வைத்துப் படம் ஒன்றை இயக்கவும் ஜெயம் ரவி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சினிமா துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெயம் ரவி, “சினிமாவுக்கு நான் வந்து 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். சக நடிகர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். எனக்குப் பிறகு வந்தவர்கள் 40, 45 படங்களில் நடித்து விட்டனர். நான் 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஏன் என்று யோசித்து பார்த்தால், குவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கிறேன். குவான்டிட்டியை விட குவாலிட்டிதான் முக்கியம் என கருதுகிறேன். 4 படங்கள் நடித்தாலும் குவாலிடியாக நடித்தால் போதும் என நினைக்கிறேன்’’ என்று சொல்லியிருந்தார்.

ஸ்கூல் டேஸ்ல இருந்தே டான்ஸ், ஸ்போர்ட்ஸ்ல கில்லியா இருந்திருக்கிறார் ரவி. இதனாலேயே தான் படிக்கும் நாட்களில் ஸ்கூலில் முக்கியமான நபராக வலம்வந்திருக்கிறார். சின்ன வயசுல இருந்தே பரதநாட்டியத்தை முறைப்படி நளினி பாலகிருஷ்ணனிடம் கற்றுக் கொண்டார். 12 வயதிலேயே தனது அரங்கேற்றத்தை முடித்திருக்கிறார். மதுரை மாவட்டம் திருமங்கலம்தான் இவரோட அப்பா எடிட்டர் மோகனோட பூர்வீகம். சின்ன வயசுலயே சென்னைக்கு வந்த அவரின் ஒரிஜினல் பெயர் மோகன் இல்லை. முகமது அலி ஜின்னா. பின்னாட்களில் சினிமாவுக்கு வந்த பிறகுதான் மோகன் என தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார். ரவியின் மூத்த சகோதரர் ராஜா, சகோதரி ரோஜா என மூன்று பேருக்குமே ஆர் என்கிற எழுத்தில்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். ராஜா இயக்குநர், சகோதரி ரோஜா பல் மருத்துவராக இருக்கிறார். டிக் டிக் டிக் படத்தில் மகன் ஆரவ்வுடன் நடித்த பிறகு, இருவரும் சேர்ந்து நடிக்க 25-க்கும் மேல் வாய்ப்புகள் வந்திருக்கிறது. ஆனால், மகனின் படிப்பைக் கருத்தில் கொண்டு அந்த வாய்ப்புகளைத் தற்போதைக்குத் தள்ளிப்போட்டிருக்கிறார்களாம். இவரது மனைவி ஆர்த்தி, பிரபல டிவி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார்.

ஜெயம் ரவி, லயோலா காலேஜ்ல விஷூவல் கம்யூனிகேஷன் முடிச்சவர். காலேஜ் படிக்கும்போது புராஜக்டுக்காக ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்திருக்கிறார். அந்த ஷார்ட் ஃபிலிமில் அண்ணன் ராஜாவை ஒரு சீனில் நடிக்க வைத்திருக்கிறார். ஐசியூவில் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் ஒரு பேஷண்ட், தன்னுடைய அந்திம நேரத்தில் இருக்கும்படியான சீன். கொஞ்சம் மோனோலாக்லாம் பண்ணிட்டு, இறந்துபோற அந்த பேஷண்டா மோகன் ராஜாவை ஜெயம் ரவி நடிக்க வைச்சிருந்தாராம். அந்த வகையில், அண்ணன் தன்னை இயக்குவதற்கு முன்னாடியே ஜெயம் ரவி, அண்ணனை தனது இயக்கத்தில் நடிக்க வைத்துவிட்டார். முதல் படமான ஜெயம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பேனரை, அவரது தந்தை எடிட்டர் மோகன் கிட்டத்தட்ட அரை மணிநேரம் பார்த்துக் கொண்டே இருந்தாரம். அந்த மொமண்ட் ஜெயம் ரவியின் எமோஷனலான மொமண்ட். பொன்னியின் செல்வன்ல டைட்டில் ரோலான அருள்மொழிவர்மர் கேரக்டர்ல ஜெயம் ரவி நடிச்சிருக்கார். இந்த வாய்ப்புக் கிடைச்சது தனக்குக் கிடைச்ச ஆசீர்வாதம்னு சொல்லியிருந்தார்.
ஜெயம் ரவி நடிச்சதுல தீபாவளி `பில்லு’, பேராண்மை `துருவன்’, தனி ஒருவன் `மித்ரன்’ கேரக்டர்கள் என்னோட பெர்சனல் ஃபேவரைட்… உங்களோட ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – இங்க வா… யார் நீ… உனக்கு என்ன பிரச்னை… விஜய் தேவரகொண்டா ரோஸ்ட்!