சினிமா லவ்வர்களின் ஃபேவரைட் ஜானர் `த்ரில்லர் மற்றும் ஹாரர்’ என்றே சொல்லலாம். த்ரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் தருகிற அனுபவத்தை வேறு எந்த திரைப்பட ஜானர்களும் தருவது இல்லை. எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் இந்த ஜானர் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம்மை சுற்றி நடக்கும் சிறு அசைவுகள் கூட நமக்கு பயத்தையே ஏற்படுத்தும். த்ரில்லர் மற்றும் ஹாரர் மூவிகளுக்கு மட்டுமே அத்தகைய சிறப்புகள் உண்டு. நிறைய த்ரில்லர் மற்றும் ஹாரர் மூவிக்களை நீங்க பாத்துருப்பீங்க. அந்த வகையில், குலை நடுங்க வைக்கிற ஏழு த்ரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
The Texas Chainsaw Massacre
டோப் ஹூப்பர் இயக்கத்தில் மேரிலின் பர்ன்ஸ், பால் ஏ பார்டின், எட்வின் நீல், ஜிம் சீடோ ஆகியோரின் நடிப்பில் 1974-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `தி டெக்ஸாஸ் செயின்சா மஸாக்கர்’. இதயம் பலவீனமானவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க தடை விதிக்கப்பட்டதாம். டெக்ஸாஸில் உள்ள தங்களது தாத்தாவின் சமாதியைப் பார்க்க செல்லும் இரண்டு சகோதரர்களை மையமாக வைத்து செல்லும் போது மனிதர்களை உண்ணும் மனிதர்களிடம் சிக்குகின்றனர். இதனையடுத்து அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே கதை. தைரியம் இருப்பவர்கள் மட்டும் இந்தப் படத்தைப் பாருங்க. ஏன்னா.. அவ்வளவு கொடூரமா இருக்கும். உலகிலேயே இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் மிகவும் திகிலான படம் இது என விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது.
As Above, So Below
ஜான் எரிக் டௌடில் இயக்கத்தில் பெர்டிடா வீக்ஸ், பென் ஃபெல்ட்மேன், எட்வின் ஹாட்ஜ் மற்றும் ஃபிரான்கோய்ஸ் சிவில் ஆகியோரின் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ஆஸ் அபோவ், சோ பிலோ. ஸ்கேர்லட் என்கிற கதாபாத்திரமும் அவங்களோட டீமும் ஃபிலோசபர் ஸ்டோன தேடிப் போறாங்க. அங்க வங்க என்னலாம் பிரச்னைகளை சந்திக்கிறாங்க அப்டின்றதுதான் இந்த படத்தோட ஒன் லைன். செம திகிலான திரைப்படம் இது. படத்துல வர்ற இடங்களே ரொம்ப பயங்கரமானதா இருக்கும். படத்தை பாக்குற நமக்கே மூட்டு முட்டும் அந்த அளவுக்கு ஆபத்தான இடங்களைக் கடந்து போவாங்க. செம த்ரில்லான படம். தனியா இந்தப் படத்தைப் பாக்காதீங்க.
Ghosts of Darkness
டேவிட் ரியான் கெய்த் இயக்கத்தில் மைக்கேல் கோல்ட்ஸ், ஸ்வீவ் வெஸ்டன் மற்றும் பால் ஃப்ளென்னரி ஆகியோர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான், கோஸ்ட்ஸ் ஆஃப் டார்க்னஸ். ஒரு வீட்டுல யார் தங்கினாலும் இறந்து பொய்டுவாங்க. அதனால, அந்த வீட்டோட தொடர்புடைய ஒருத்தர் இரண்டு பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்ஸ அந்த வீட்டுல மூன்று நாள் இரவு தங்க வைப்பாங்க. அந்த வீட்டுல அவங்களுக்கு நடக்குற பயங்கரமான சம்பவங்கள், அந்த வீட்டுல இருக்குற அமானுஷ்ய சக்தியை என்ன பண்ணாங்க அப்டின்றதுதான் கதை. இந்தப் படத்துல வர்ற பேய் எல்லாமே பயங்கரமா இருக்கும். ஒவ்வொரு சீனும் ரத்தத்தை உறைய வைக்கிற மாதிரி எடுத்துருப்பாங்க.
Don’t Be Afraid of the Dark
ட்ராய் நிக்ஸே இயக்கத்தில் கேட்டி ஹோல்ம்ஸ், காய் பியர்ஸ், பெய்லி மேடிசன், ஜேக் தாம்சன் ஆகியோரது நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் டோண்ட் பி அஃப்ரெய்ட் ஆஃப் தி டார்க். ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் பல வருஷத்துக்கு அப்புறமா வர்றாங்க. அங்க அமானுஷ்யமா இருக்குற ஒரு அறையை குட்டி பொண்ணு கண்டுபிடிக்குது. அதுக்கப்புறமா அவங்களுக்கு என்னலாம் பயங்கரமான சம்பவங்கள் நடக்குது அப்டிங்குறதுதான் கதை. படத்துல வர்ற ஒவ்வொரு சீனும் ரொம்ப கொடூரமா இருக்கும். இந்த படத்துல வர்ற குழந்தைக்கு எதாவது ஆயிடுமோனு எப்பவும் ஒரு பதற்றம் படம் பாக்குற நம்ம மனசுல இருந்துட்டே இருக்கும். கதைக்களமும் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். ரொம்ப பலவீனமானவங்களா நீங்க இருந்தீங்கனா கண்டிப்பா இந்தப் படத்தைப் பாக்குறத தவிர்த்துடுங்க.
Raw
ஜூலியா டுகார்னாவ் இயக்கத்தில் கேரேன்ஸ் மாரில்லர், எல்லாரம்ப்ஃப் மற்றும் லாரண்ட் லுகாஸ் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் `ரா’. சிவனேனு சைவமா இருந்த பொண்ணை அந்த பொண்ணோட ஃப்ரண்ட்ஸ் அசைவமா மாத்தி விடுறாங்க. அதுக்கு அப்புறம் அந்த பொண்ணுக்கு மனுஷங்க கறிய சாப்பிடனும்னு ஆசை வந்திடுது. இதனால், கூட இருக்குறவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்க அப்டின்றதுதான் கதை. ரத்தமும் சதையுமா இந்தப் படத்தை எடுத்து வச்சிருக்காங்க. சும்மா சிக்கன், மட்டனை சாப்பிடுற மாதிரி இந்த பொண்ணு மனுஷங்கள சாப்பிடும். ரொம்பவே இண்ட்ரஸ்டிங்கான ஒரு படம் ஹாரர் ஜானரோட மிகப்பெரிய காதலர் நீங்கனா.. கண்டிப்பா இந்தப் படத்தை தவர விடாதீங்க.
The Collector
மார்கஸ் டன்ஸ்டன் இயக்கத்தில் ஜோஷ் ஸ்டியுவர்ட், மேட்லின் சைமா, ஜுவான் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் `தி கலெக்டர்’. ஒரு வீட்டுக்கு ஐந்து பேர் குடியிருக்க போவாங்க. அங்க ஏற்கெனவே ஒருத்தன் இருப்பான். அவன்தான் கலெக்டர். அந்த கலெக்டர் குடியிருக்க வந்த நபர்களை கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை பண்ணி கொல்லுவான். இதுதான் இந்தப் படத்தோட கதை. அவன் கொல்ற காட்சிகள் எல்லாமே ரொம்பவே கொடூரமானதாக இருக்கும். லைட் ஹார்ட் பெர்சன் இந்தப் படத்தைப் பார்க்காமல் தவிர்ப்பதே நல்லது.
The Ring
கோர் வெர்பின்ஸ்கி இயக்கத்தில் நவோமி வாட்ஸ், மார்டின் ஹெண்டர்சன், டேவிட் ஃபார்ஃப்மேன், பிரையன் காக்ஸ் போன்றவர்களின் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படந்தான் `தி ரிங்’. இந்தப் படத்தின் போஸ்டர்களே அவ்வளவு பயங்கரமா இருக்கும். மர்மமான வீடியோ ஒன்றை சிலர் பாக்குறாங்க. அவங்களுக்கு ஒரு போன் வருது. அதுல ஒருவாரம் அப்டினு ஒரு குரல் கேக்குது. அந்த நாள்களுக்குள்ள அவங்க இறந்துடுறாங்க. இந்தப் படத்தோட ஹீரோயினும் அந்த வீடியோவைப் பாத்துடுறாங்க. அவங்கள அந்தப் பேய் கொன்னுச்சா? இல்லையா? அவங்களுக்கு என்ன நடந்தது? என்பதுதான் இந்தப் படத்தோட கதை. நீங்க மிஸ் பண்ணியிருந்தீங்கனா.. கண்டிப்பா இந்தப் படத்தைப் பாருங்க.
இந்தப் படங்களைத் தவிர நீங்க பார்த்த கொடூரமான படங்களை கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read : பி.சி.ஸ்ரீராம் ஃபேனா நீங்க… அப்போ உங்களுக்கான குவிஸ்தான் இது!