தமிழ் சினிமால பாடலாசிரியர் தாமரைக்கு அடுத்து தனக்குனு தனி ஸ்டைலை புடிச்சு பாடல்களை எழுதுற பாடலாசிரியர் உமா தேவி. நாம தினமும் கேக்குற பல பாடல்கள்ல எதாவது ஒரு பாட்டு கண்டிப்பா இவங்க எழுதுனதாதான் இருக்கும். தமிழ்ல இருக்குற அழகான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து மெட்டுக்குப் பொருத்தி அந்த வரிகளுக்கு நம்மள அடிமையாக்குற உமாதேவியைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
96 படத்துல இரவிங்கு தீவாய் பாடல்ல “மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே”னு ஒரு வரி வரும். அந்தப் பாட்டைக் கேட்டாலே அழுகை வந்துரும். ஆனால், அதுல வர்ற இந்த வரி வாழ்க்கை மேல ஒரு பற்றுதலை ஏற்படுத்தும். இதைப் பத்தி உமாதேவி, “குயில்கள் எப்பவுமே கூடு கட்டாதுதான். ஆனால், மரத்துல குடியேறி இருக்குற கூடுகள் வீழ்ந்து அனாதையா இருக்கும்போதும். குயில்கள் பாடுறதை நிறுத்தாது. இதை சமூகம் நமக்கு தர்ற வாழ்வியல்ல இருந்துதான் எடுத்தேன்”னு ஒரு நேர்கணல்ல சொல்லுவாங்க. ரொம்பவே அசற வைக்கிற வரியா இந்துச்சு. நம்மள அசற வைக்கிறது உமா தேவிக்கு சாதாரண விஷயம்தான். ஆனால், பா.ரஞ்சித் மாதிரி இலக்கியம் படிக்கிற, படைப்பாளியா இருக்குற ஆளையும் தன்னோட வரிகளால அசற வைச்சவங்க உமா தேவி. யார்யா இவங்க? எப்படி இப்படிலாம் எழுதுறாங்க?-னு அவங்க பாட்டைக் கேக்குற எல்லாருக்குமே அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணும்.
திருவண்ணாமலைல அத்திப்பாக்கம்ன்ற கிராமத்துல பிறந்து வளர்ந்து அங்கயே யு.ஜி வரைக்கும் படிச்சு முடிச்சாங்க. உமா தேவியோட அம்மா, அப்பாலாம் கூத்துக்கலைஞர்கள். அதனால, கலைன்ற விஷயம் இவங்களுக்குள்ள தானாகவே இருக்கு. சின்ன வயசுல இருந்தே கிரியேட்டிவ் மைண்ட் உள்ள ஆள்களை சுத்தி தான் வள்ர்ந்துருக்காங்க. ஸ்கூல் படிக்கும்போதுல இருந்தே கவிதை போட்டிகள் நிறைய போக ஆரம்பிச்சாங்க. நிறைய போட்டிகள்ல மாவட்ட அளவுலலாம் பரிசுகள் வாங்க ஆரம்பிச்சாங்க. இலக்கிய இதழ்களுக்கும் கவிதைகள் எழுதி அனுப்ப ஆரம்பிச்சாங்க. யு.ஜி முடிச்சிட்டு பி.ஜி படிக்க சென்னைக்கு உமா தேவி வர்றாங்க. அவங்க எழுதுன ஒரு கவிதை தொகுப்புக்கு பா.இரஞ்சித்தோட ஆசிரியர் சந்ரு அட்டைப்படம் வரைஞ்சு கொடுத்துருக்காரு. அவரைப் பார்க்கப்போகும்போது பா.இரஞ்சித் உமா தேவிக்கு பழக்கம் ஆகியிருக்காரு. நிறைய இன்டர்வியூக்கள்ல உமா தேவி சொல்லுவாங்க, “உங்க எல்லாருக்கும் அவரை டைரக்டராதான் தெரியும். ஆனால், எனக்கு நல்ல இலக்கியவாதியா, வாசிப்பாளரா தெரியும்” அப்டினு.
உமா தேவி நிறைய பாடல்கள்ல தாபம் அப்டின்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பாங்க. அதைக் கேட்டு பா.இரஞ்சித்தே அர்த்தம் தெரியாமல் குழம்பினாராம். அதுக்கு என்ன அர்த்தம்? சொல்றேன். வெயிட் பண்ணுங்க.
பா.இரஞ்சித், உமா தேவியோட கவிதைகளை தொடர்ந்து வாசிச்சிட்டே இருந்துருக்காரு. அப்போ, மெட்ராஸ் படத்துக்கு பாட்டு எழுதணும்னு உமா தேவியை கூப்பிட்ருக்காரு. கொஞ்சம் தயங்கிதான் அந்தப் படத்துக்கு பாட்டெழுத உமா தேவி வர்றாங்க. முதல்லயே நம்ம வாசிப்புப் பழக்கமும் தமிழும் படிச்சதால அந்த இசைக்கு என்ன வார்த்தை சரியா இருக்கும்னு தெரிஞ்சு தன்னோட கற்பனையை சேர்த்து வாழ்வியல்ல இருந்து கொஞ்சம் வரிகளை எடுத்து பாடல்களை எழுதி கொடுத்துருக்காங்க. “நான் நீ நாம் வாழவே உயிரே, நீ நான் நாம் தோன்றினோம்” பாடல்ல முதல் வரியே ரொம்ப எதார்த்தமா ஈஸியா கனெக்ட் பண்ணிக்கிற விதமா இருக்கும். அப்புறம் அந்த பாட்டுல நிறைய பேரோட ஃபேவரைட் லைன், “உயிர் வாழ முள்கூட ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே, உயிரே உன் பாதை மலராகும்” அப்டின்றதுதான். அந்த பாட்டுல “தாபப்பூவும் நான்தானே”னு ஒரு வரி வரும். இந்த வரியைக் கேட்டுட்டு ரஞ்சித் “உண்மைலயே தாபப்பூனு ஒரு பூ இருக்கா?”னு கேட்ருக்காரு. உடனே உமா தேவி, “அப்படி ஒரு பூ இல்லை. தாபம்னா அதீத காதல். அதை ஒரு பூவா என் கற்பனைல நான் சொன்னேன்”னு சொல்லிருக்காங்க.
பொதுவா சினிமால ஒருத்தர் வெற்றி அடையுறாங்கன்னா, அதுக்கு கூட்டணியும் ஒரு முக்கியமான காரணம். அந்த வகைல, பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் – உமா தேவி கூட்டணி தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒரு கூட்டணினு சொல்லலாம். இவங்க கூட்டணில வந்த எல்லாப் பாட்டுமே செம ஹிட்டுதான். இவங்க கூட்டணில முக்கியமான படம் கபாலி, காலா. கபாலில ‘மாயநதி’ பாட்டு இன்னைக்கும் பலரை அழ வைக்கும். “மாய நதி இன்று மார்பில் வழியுதே, தூய நரையிலும் காதல் மலருதே” – எவ்வளவு பெரிய பிரிவை கவித்துவத்தோடு சொல்லியிருக்காங்க. பாட்டு முழுக்கவே அவ்வளவு வலி இருக்கும். உமா தேவி எந்த வார்த்தையையும் வலிந்து எழுதவே மாட்டாங்களாம். அந்த சிச்சுவேஷன் சொல்லும்போது அந்த கேரக்டரா உணர்ந்து வர்ற வார்த்தைகள்தான் எல்லாமே.
கபாலில வீரத்துரந்தரா பாட்டும் இவங்க எழுதுனதுதான். முதல்ல இந்தப் பாட்டை கபிலன் எழுதுனாருனு நினைச்சேன். அப்புறம்தான் இவங்க எழுதுனாங்கனு தெரிஞ்சது. வீரத்துரந்தரா அப்டின்ற வார்த்தையே அவ்வளவு போல்டான வார்த்தை. முதல்ல இந்தப் பாட்டை சொன்னதும் சங்கப் பாடல்கள் படிச்சுட்டு 50 வரிகளை எழுதி எடுத்துட்டுப் போனாங்களாம். ஒரு பாட்டை திரும்ப திரும்ப படிச்சு அது ரொம்ப புடிச்சாதான் டைரக்டர்கிட்ட அந்த வரியை கொடுப்பாங்களாம். ஆனால், இந்தப் பாட்டுக்கு ஸ்டுடியோ போனதும் லைனப் பார்த்து பாட ஆரம்பிச்சிட்டாங்களாம். அந்த வார்த்தைக்கு போர் வீரர்கள் கூட்டத்துக்கு தலைவர் மாதிரினு அர்த்தமாம். தாமரை கற்க கற்க எழுது ஒரு ஸ்டீரியோடைப்பை உடைச்ச மாதிரி உமா தேவி வீரத்துரந்தரா எழுதி உடைச்சாங்க. இவங்க இன்னொரு ஸ்டீரியோடைப்பையும் கண்ணம்மா பாட்டுல உடைச்சிருப்பாங்க.
Also Read – மல்லிகைப் பூவே டு மல்லிப்பூ… பாடலாசிரியர் தாமரை பயணம்!
காலா படத்துல வர்ற கண்ணம்மா பாட்டு நிறைய பேரோட ஃபேவரைட். அந்தப் பாட்டுல “ஊட்டாத தாயின் கணக்கின்ற மார்போல் போல் என் காதல் கிடக்கின்றதே”னு ஒரு வரி வரும் நிறைய பேர் என்ன, பெண்ணோட பார்வைல இருந்து ஆணுக்கு பாடல் வரிகள் எழுதும்போது இப்படி ஹீரோ எப்படி பாட முடியும்னு உமாக்கிட்ட கேட்ருக்காங்க. அதுக்கு “தாய்மைன்றது பொதுவான உண்ர்வு தான? அதுமட்டுமில்ல ஒரு பெண் இதை பாடியிருந்தா சாதாரணமா இருக்கும். ஆண் பாடினதாலதான் அந்த வரி இன்னும் உணர்வுபூர்வமானதாக மாறிச்சு. வெறும் உடல்ரீதியா மட்டும் அதை பார்க்காதீங்க”னு ஒரு பேட்டில சொல்லியிருந்தாங்க. கேட்டதும் ஆமால்ல அப்படினு தோணுச்சு. அப்புறம், பெண்களுக்கான பவர்ஃபுல்லான வரிகளையும் “தோரணம் ஆயிரம்”, “அடி வாடி திமிரா” பாடல் வரிகள்ல சொல்லியிருப்பாங்க. பழைய தமிழ்ச்சொற்களை பாடல்ல எழுதி இளைஞர்கள் மத்தியில கொண்டு போய் சேர்க்கணும், அவங்க அதுக்கான அர்த்தங்களை தேடணும் அப்டினு உமா தேவிக்கு ஆர்வம் அதிகம். வெறும் பாடல்களோட இல்லாமல், சமூகப் பிரச்னைகள் சார்ந்தும் பெண்ணியம் சார்ந்தும் நிறைய கவிதைகளை எழுதிட்டு இருக்காங்க.
யுவன் கூட்டணிலகூட உமா தேவி நல்ல பாடல்களை எழுதியிருக்காங்க. என்.ஜி.கே-ல அன்பே பேரன்பே, நேர்கொண்ட பார்வைல வானில் இருள் பாட்டுலாம் எக்ஸாம்பிளா சொல்லலாம். அப்புறம் ராட்சசன்ல காதல் கடல் தானா, தீரன் அதிகாரம் ஒன்றுல ஓசாத்தி, கட்டப்பா காணோம் படத்துல ஹே பெண்ணே பெண்ணே, கணம் படத்துல அம்மா பாடல், பஃபூன்ல தனி மரமாய் இருந்தேன், இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு படத்துல நிலமெல்லாம் எங்கள் வேர்வையில் முளைக்க, கடைசீல பிரியாணி படத்துல கடவுளே-னு ஒரு பாட்டு எழுதியிருப்பாங்க செமயா இருக்கும். இப்படி உமா தேவி எழுதுன பெஸ்ட் பாடல்களை சொல்லிட்டே போகலாம்.
கவிதைக்காரி-னு தான் உமா தேவி தன்னை எப்பவும் சொல்லுவாங்க. சமீபத்துல நட்சத்திரம் நகர்கிறது படத்துல பேரின்ப காதல் பாட்டை எழுதியிருந்தாங்க. ரொம்பவே புதுசா, ஃபீல் குட்டா இருந்துச்சு. கபாலில ஒரு டயலாக் வரும்ல “உங்க வைய்ஃப உங்களுக்கு ரொம்ப புடிக்குமா?”னு கேட்டதும் ரஜினி “ரொம்ப”னு சொல்லுவாங்கள்ல. உமா தேவியோட பாடல் வரிகளைக் கேட்டா அதுக்கப்புறம் எல்லாருமே கையை நீட்டி அவங்களை ரொம்ப புடிக்கும்னுதான் சொல்லுவாங்க.