பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தானிய பெட்டகம் – என்ன ஸ்பெஷல்?!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த17-ம் தேதி ஒருநாள் பயணமாக டெல்லி சென்றார். அப்போது, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் மாலை 4 மணிக்குத் தமிழகத்திற்கான வளர்ச்சி குறித்து பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்காக நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ‘Home of Chess’ என்ற புத்தகத்தை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

பிரதமர் மோடிக்கு புத்தகத்துடன், தமிழகத்தின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய தானிய பெட்டகம் ஒன்றை பிரதமருக்குப் பரிசாக வழங்கினார். அந்த பெட்டகத்துக்குள் மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்கார், சீரகச் சம்பா, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு உள்ளிட்ட 9 வகையான தானியங்கள் இருந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு மருத்துவ குணமும், சிறப்பம்சமும் உண்டு. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்

9 தானியங்களின் சிறப்புகள்!

மாப்பிள்ளைச் சம்பாவில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளைச் சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மையைப் பலப்படுத்தும். குள்ளக்கார ஆண்ட்டி ஆக்சிடெண்ட், துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. கருப்புக் கவுனி என்பது நெடுங்காலமாக அரசர்களுக்கு மட்டுமே பயிரிடப்பட்ட அரிசி. இந்த அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. சீரகச் சம்பா அரிசி உடலுக்கு நிறைய ஆற்றலை அளிக்கக் கூடிய தானியமாகும். கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் ஏற்படாமல் தடுக்க இது உதவும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பிரதமர் மோடி

கம்பு தானியங்களின் அரசனாகும். இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழைக் குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையக் கூடும். வரகு நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் குணங்களும் கொண்டது. ஆரோக்கியமான சத்தான உணவோடு உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும். சாமை பழங்குடி மக்கள் பயிராக்கிப் படைத்திடும் மருத்துவ குணமிக்க தானியம். குறிப்பாக முதுகெலும்பைப் பலப்படுத்தும். தினை கண்ணுக்கும், குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியம். தினையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பிரதமர் மோடி

காரணம் என்ன?

தமிழக மக்கள் உண்ணும் உணவே மருந்து என்பதைப் பிரதமர் மோடிக்கு எடுத்துக்கூறும் வகையில் தான் முதல்வர் ஸ்டாலின் 9 தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Also Read: `கிங்’ கோலியின் அதிரிபுதிரி ரெக்கார்டுகள் #14YearsOfViratKohli

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top