கனடா சரித்திரத்தின் கறுப்புப் பக்கங்கள் பற்றிய மற்றொரு ஆதாரம் சமீபத்தில் கிடைத்திருக்கிறது. ரெசிடென்சியல் ஸ்கூல் எனப்படும் உண்டு, உறைவிடப் பள்ளி வளாகத்தில் இருந்து 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பின்னணி என்ன?
கனடாவின் பூர்வகுடிகள்
கனடாவில் ஐரோப்பியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 1800-களில் குடியேறத் தொடங்கினர். அப்படிக் குடியேறிய வெள்ளையினத்தவர், கனடாவில் வசித்து வந்த பூர்வகுடிகளை ஒடுக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் வழியாக, தங்கள் மதம், வாழ்வு முறைக்கு அவர்களை மாற்ற முயற்சிகளை எடுத்தனர். அதன் ஒரு பகுதிதான் ரெசிடென்சியல் ஸ்கூல் எனப்படும் உண்டு, உறைவிடப்பள்ளிகள்.
பூர்வகுடியைச் சேர்ந்த 7 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளை வலுக்கட்டாயமாக அவர்களது குடும்பங்களில் இருந்து பிரித்து அம்மக்களின் கலாசாரம், வாழ்வியல் போன்றவற்றை அறியவிடாமல் செய்தனர். 1800-களின் தொடக்கத்தில் இருந்து 1978ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த இத்தகைய பள்ளிகள் எண்ணிக்கை மட்டும் 150-க்கும் மேல் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த வகைப் பள்ளிகளை அரசே நடத்தினாலும், அதன் கண்ட்ரோல் மொத்தமும் கத்தோலிக்க திருச்சபைகள் வசமிருந்தது.
கல்விக்காகக் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு இந்தப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டாலும், அங்கு தரமான வகையில் கல்வி போதிக்கப்படவில்லை என்கிறது பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு. இந்தப் பள்ளிகளில் 1,50,000-த்துக்கும் மேற்பட்ட ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் (First Nations), மெடிஸ் (Métis), இனியூட் (Inuit) ஆகிய பூர்வகுடிகளைச் சேர்ந்த குழந்தைகள் இந்த வகைப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்கிறார் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஸ்டூவர்ட் பிலிப்.
காம்லூப்ஸ் ரெசிடென்சியல் ஸ்கூல்
கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து சுமார் 160 மைல் தொலைவில் இருக்கிறது காம்லூப்ஸ் ரெசிடென்சியல் ஸ்கூல் வளாகம். 1890-ம் ஆண்டு மே மாதத்தில் செயல்படத் தொடங்கிய இந்தப் பள்ளி 1978 ஜூலையில் மூடப்பட்டது. இந்தப் பள்ளி வளாகத்தில்தான் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஃபர்ஸ்ட் நேஷன்ஸ் அமைப்பு இதைக் கண்டுபிடித்ததாகக் கடந்த மே மாதம் 27-ம் தேதி அறிவித்தது. இது கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொடக்க காலங்களில் இந்தப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை பற்றியோ, இதர விவரங்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. ஆனால், 1920ம் ஆண்டு கனடா நிறைவேற்றிய The Indian Act படி ரெசிடென்சியல் பள்ளிகளில் அட்டடன்ஸ் கட்டாயமாக்கப்பட்டது.
கனட அரசின் உண்மை கண்டறியும் குழுவான என்.சி.டி.ஆர், ரெசிடென்சியல் பள்ளிகளில் 1,50,000 மாணவர்கள் படித்த நிலையில், அவர்களில் பலர் வீடு திரும்பாமலேயே இருந்திருக்கிறார்கள். பள்ளிகளில் இருந்து தப்பியோடுவது, இறப்பது போன்றவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 1907-ம் ஆண்டு இதுபோன்ற பள்ளிகளில் ஆய்வு நடத்திய அரசு அதிகாரி ஒருவரின் குறிப்பின்படி, கனடா முழுவதும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேரும் 24% மாணவர்கள் இறப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இது ரொம்பவே குறைவான கணக்கீடு என்கிறார்கள். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் குறிப்பின்படி, பள்ளிகளில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளில் 47 – 74% குழந்தைகள் சிறிது காலத்திலேயே உயிரிழந்து விடுவதாகச் சொல்கிறது. இதேபோன்று மற்ற ரெசிடென்சியல் பள்ளி வளாகங்களிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கனடா முழுவதும் பரவலாக எழுந்திருக்கிறது. இதை வலியுறுத்தி கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அமைப்புகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
என்ன சொல்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ?
தேர்தல் சமயம் தொடங்கி கனட பூர்வகுடி மக்களுக்கு ஆதரவானவராகவே கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னைக் காட்டிக் கொண்டார். 215 குழந்தைகள் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார். `இந்த விவகாரத்தை நாம் அப்படியே விட்டுவிட முடியாது. இது ஒரு தனித்த சம்பவம் அல்ல’ என்றும் அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து
Also Read – கர்ணன் படம் பிடிச்சிருந்ததா… அப்போ நிச்சயமா இந்த 5 படங்களும் உங்களைக் கவரும்!