தமிழர்களின் இல்லங்களில் ஒரு உறவினராகத் திகழும் உங்கள் சத்யா, தன் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் குடும்பமாகவே பார்க்கிறது. உணர்வுப்பூர்வமான இந்த பந்தத்தினால் தன் குடும்ப திறமைசாலிகளைக் கொண்டாட ‘நம்ம வீட்டு சூப்பர் ஸ்டார்’ எனும் பிரம்மாண்ட திருவிழாவை முன்னெடுத்தது. சத்யாவின் வாடிக்கையாளர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் திறமையையும் அங்கீகரிப்பதே அதன் நோக்கம். இந்த பிரம்மாண்ட திருவிழாவை Tamilnadu Now முன்னெடுத்து நடத்தியது. இதற்கான அறிவிப்பை சத்யா வெளியிட்டதிலிருந்தே தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அலசி ஆராய்ந்து தனித்த திறமை கொண்ட போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் 25 போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் கௌரவப்படுத்தும் விதமாக ஜனவரி 28-ம் தேதி சென்னையில் உள்ள GRT Grand நட்சத்திர ஹோட்டலில் ‘நம்ம வீட்டு சூப்பர் ஸ்டார்’ எனும் பிரம்மாண்ட திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சத்யா ஏஜென்சியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜான்சன், சத்யா மொபைல்ஸ் இயக்குநர் ஜாக்சன் உள்ளிட்ட பலர கலந்து கொண்டனர்.
சத்யா ஏஜென்சியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜான்சன் பேசும்போது, “இதனை ஒரு குடும்ப விழாவாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் இதுதான் எங்கள் கொள்கை. இங்கு வந்திருக்கும் பெற்றோர்கள், மாணவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது எனக் கண்டுபிடிக்க வேண்டும். நமது எண்ணங்களைத் திணிக்காமல் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போது குழந்தைகள் நிச்சயமாகச் சாதனையாளர்களாக வருவார்கள். அதற்கான தொடக்கம்தான் இந்த நிகழ்வு. பெற்றோர் எப்படி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்களோ, அதேபோல சத்யாவும் மாணவர்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் கவுரவிக்கும். ஒவ்வொரு மாணவர்களும் தங்களது திறமைகளால் சாதித்து அந்த விழாவிற்கு எங்களை அழைக்க வேண்டும் அதுதான் எங்களுக்குப் பெருமை. மாணவர்களின் திறமைகளைக் கொண்டு மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.
சத்யா மொபைல்ஸ் இயக்குநர் ஜாக்சன் பேசும்போது, “நம் குடும்பங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது குடும்பத்தில் இருக்கும் திறமையை நாம் பாராட்டாமல் வேறு யார் பாராட்டுவார்கள். அதற்காகத்தான் இந்த நம்ம வீட்டு சூப்பர் ஸ்டார் திருவிழா. தங்கள் திறமையால் உலகத் தமிழர் மனதை வென்ற நம்ம வீட்டு சூப்பர்ஸ்டார்களுக்கு மகுடம் சூட்டி அழகு பார்ப்பதில் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை முன்னெடுத்த Tamilnadu Now டீம்க்கு நன்றி” என்றார்.
அடுத்ததாக மேடையேறினர், காமெடி கிங் மதுரை முத்துவும், பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதியும். மதுரை முத்துவும், அன்னபாரதியும் காமெடியில் வெளுத்துவாங்க, அந்த ஒரு மணிநேரமும் அரங்கில் சிரிப்புச் சத்தம்தான்.
விழாவின் இறுதியாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. Rubiks Cube-ல் 4 முறை கின்னஸ் சாதனை படைத்த இளையராம்க்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய், Best Young Achiever 2021 விருது பெற்ற சூப்பர்ஸ்டார் சுட்டி இமானுவேல் டேரிக்கு இரண்டாம் பரிசாக 50,000 ரூபாய், மூன்றாம் பரிசாகப் பரதத்தில் கலக்கிய தனுஶ்ரீக்கு 25,000 ரூபாயும் மற்ற 22 பேருக்கு தலா 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
சத்யாவின் `நம்ம வீட்டு சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி விரைவில் மதுரையிலும் நடைபெற உள்ளது. அதில் கலந்துகொள்ள… – https://tamilnadunow.com/sathya-namma-veettu-superstar-madurai/
சென்னையில் நடந்த சத்யாவின் நம்ம வீட்டு சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க..
Also Read: `3.5 லட்சம் இன்ஸ்டா ரீல்ஸ்; சோசியல் மீடியாவை ஆளும் Kacha Badam சாங்’ – பின்னணி தெரியுமா?