“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே” – எவ்வளவு உணர்வுபூர்வமான வரிகள்! இன்னும் கொஞ்சம்நாள்ல பலரோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இதுவாதான் இருக்கும். ஏன்னா… தந்தையர் தினம் இன்னும் சில நாள்களில் வரப்போகுது. தந்தையர் தினத்துக்கு என்ன கிஃப்ட் அப்பாக்கு கொடுக்கலாம்னு இப்பவே யோசிச்சிட்டு இருக்கும் பிள்ளைகளா நீங்க? அப்போ உங்களுக்கான கட்டுரைதான் இது. அப்பாக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு நாங்க சஜ்ஜஸ்ட் பண்றோம். இதுல உங்களுக்கு ஃபேவரைட்டா இருக்கும் பொருளை அப்பாக்கு வாங்கி கொடுங்க.
உங்க அப்பா அதிகமாக வாசிக்ககூடிய நபரா? – அப்போ கிண்டில் கிஃப்ட் பண்றதுக்கு மிகவும் சரியான தேர்வாக இருக்கும். நகைச்சுவைகளை விரும்பி படிக்கக்கூடிய நபராக இருந்தால் தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் புத்தகத்தைக் கூட நீங்க வாங்கி பரிசளிக்கலாம். (டிஸ்க்ளெய்மர் : தங்கதுரை புத்தகத்தைப் படிச்சிட்டு உங்க அப்பா சொல்ற ஜோக்குகளுக்கு நீங்க சிரிச்சே ஆகனும். இல்லைனா, பாக்கெட் மணி கட் ஆக வாய்ப்பு இருக்கு)
Watch
வாட்ச் பிரியரா உங்க அப்பா.. அப்போ கிஃப்ட் பண்றதுக்கு சரியான தேர்வா வாட்சஸ் இருக்கும். ஏற்கெனவே, வாட்ச் இருக்குனு நினைக்காதீங்க. வாட்ச் லவ்வர்ஸ்க்கு எவ்வளவு வாட்ச் வாங்கி கொடுத்தாலும் பத்தாது. சோ, உங்க அப்பா வாட்ச் லவ்வரா இருந்தா தைரியமா வாங்கி கொடுக்கலாம். ஸ்மார்ட் வாட்ச் கூட நீங்க வாங்கி கொடுக்கலாம். டைம் வேஸ்ட் பண்ணாம ஆர்டர் பண்ணுங்க.
Speaker
குளிக்கும்போதுகூட டைம் வேஸ்ட் பண்ணாமல் பாடல்களை விரும்பி கேக்குறவரா உங்க அப்பா.. அப்போ ஒரு நல்ல ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கிக் கொடுங்க. உங்க அப்பாவுக்கு கண்டிப்பா யூஸ்ஃபுல்லா இருக்கும்.
Wallet
உங்க அப்பாவோட வேலட்ட எடுத்து பாருங்க. ரொம்ப வருஷமா யூஸ் பண்ணி கிழிந்துபோன நிலைமைல இருக்கும். அதை மாத்துறதுக்கான வாய்ப்பு இப்போ உங்ககிட்ட இருக்கு. ஆமா, புதுசா ஒரு வேலட்டை நீங்க வாங்கி உங்க அப்பாவுக்கு பரிசாக கொடுக்கலாம். நிச்சயம் பயனுள்ள பொருளா இது இருக்கும்.
கொஞ்சம் கிரிஞ்சான கிஃப்ட்தான் இது. ஆனாலும், நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம். அப்பாக்கிட்ட நீங்க ரொம்பநாளா சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்த விஷயங்களை, அப்பாக்கிட்ட புடிச்ச விஷயங்களை இந்த Fill-in-the-blank புக் மூலமாக நீங்க தெரியப்படுத்தலாம். அதற்கான ஸ்பேஸ இந்த புக் உங்களுக்கு தருது. இதை வாங்கி நீங்க எழுதி குடுத்தீங்கனா உங்க அப்பா நிச்சயம் கொஞ்சம் ஃபீல் பண்ணுவாரு.
Headphones
தனிமையை அதிகம் விரும்பக்கூடியவராகவும் அதிகமான பாட்காஸ்ட்கள், பாடல்களை கேட்கக்கூடியவராகவும் உங்களது அப்பா இருந்தால் அவருக்கு இந்த Wireless Over Ear Headphone-ஐ பரிசாகக் கொடுக்கலாம். நிச்சயம் அவருக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
Dad – A Dozen Reasons Why I Love You
ரொம்ப சென்டிமென்டான கேரக்டராக உங்க அப்பா இருந்தா, இந்த கிஃப்ட் நிச்சயம் உங்க அப்பா – பிள்ளை ரிலேஷன்ஷிப்ல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன்னா, உங்க அப்பாவ பிடிக்கிறதுக்கான காரணத்தை இதுவரை நீங்க வெளிய சொல்லாமல் இருந்துருக்கலாம். அப்படியான சூழலில் இந்த கிஃப்டை நீங்க வாங்கி கொடுக்கும்போது ரொம்ப உணர்வுபூர்வமாக உங்க அப்பா ஃபீல் பண்ண வாய்ப்புகள் அதிகம். சோ.. ட்ரை பண்ணி பாருங்க.
இவற்றைத் தவிர புக்ஸ், டீ ஷர்ட்ஸ், ஷூ போன்றவற்றையும் ஃபாதர்ஸ் டே அன்று பரிசாக உங்களது அப்பாக்கு வாங்கிக் கொடுக்கலாம். இதுல உங்களுக்கு பிடிச்ச கிஃப்ட் எது? இதைத் தவிர வித்தியாசமா வேற என்ன கிஃப்ட் கொடுக்கலாம்னு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read : பண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க!