கைதி

எல்.சி.யூவின் ஆரம்பப்புள்ளி.. கைதி உருவான கதை!

ஒரு ஆக்‌ஷன் சினிமா, பார்க்கிற ஆடியன்ஸை கொண்டாட்ட மனநிலையில அனுப்பணும். ஆனா நீ தான் என் அப்பாவா, உன் பெயர் என்ன? என குழந்தை கேட்கும் ஒற்றை வரியில கண்கலங்கி மக்கள் வெளில வந்தாங்க. ஆக்‌ஷன் சினிமாவுக்குள்ள இவ்ளோ டெப்த்தான எமோஷனலா என ரசிகர்கள் மிரண்டு போற அளவுக்கு இருந்தது கைதி சினிமா. வெளிவந்து சுமார் 4 வருஷம் ஆனாலும் இன்னைக்கும் அந்த படத்தைப் பார்க்கிறப்போ கூஸ்பம்ப்ஸ் அப்படியே மெயிண்டைன் ஆவதுதான் கைதியின் பலம். ஆப்போசிட்ல பிகில்னு ஒரு மாஸ் படம் வந்தாக்கூட அசால்ட்டா ஓரம்கட்டின கைதியோட வெற்றிக்கான காரணங்களைத்தான் இந்த படத்துல பார்க்கப்போறோம்.

 கைதிக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அது என்னனு யோசிச்சு வைங்க. அது வீடியோவோட தொடர்ச்சியில இருக்கு.

ஸ்கிரீன்ப்ளே!

ஸ்கிரீன்ப்ளேயைப் பொறுத்தவரைக்கும் போலீஸ், கைதி, போதைக்கடத்தல் கும்பல்னு முக்கோண கதைதான் படத்தோட அவுட் லைன். அதோட சப்-ப்ளாட்டா போலீஸ் ஸ்டேஷன், உளவாளி, கைதியோட மகள்னு அதுலயும் ஒரு முக்கோண அவுட்லைன். இப்படி அவுட்லைனை தெளிவா போட்டதால விறுவிறுப்பான காட்சிகளையும் வைச்சு அழுத்தமான ஸ்கிரீன்ப்ளே தர முடிஞ்சது. இந்த ஸ்கிரீன் ப்ளேயை பொறுத்தவரைக்கும் எந்த காட்சியும் தேவை இல்லாததுனு சொல்லவே முடியாது, ஏன்னா எல்லாமே கதையை அடுத்தடுத்து நகர்த்திட்டு போற காட்சிகள். ஒரு ரயில்ல இருகிற ரயில் பெட்டிகள் போலனு கூட சொல்லலாம். ஒரு பெட்டி தடம்புரண்டாக்கூட மொத்த ரயிலும் நின்னுடும். அதுபோலத்தான் ஒரு சீனை போரடிக்க வைச்சுட்டா, மக்கள் லஜிக் பக்கம் திரும்பிடுவாங்கனு பார்த்து பார்த்து எழுதப்பட்டிருந்தது. முதல் அரை மணிநேரம் கதையில என்ன நடக்கப்போகுதுனு சொல்லிட்டு, அடுத்த 2 மணிநேரமும் அதோட விளைவுகளைச் சொல்ற மாதிரி இருக்கும். அந்த முதல் அரைமணிநேரத்துல 2.50 நிமிஷம் அப்பாவை எதிர்பார்த்துக்கிட்டிருக்க மகள், அடுத்த ஒரு நிமிஷம் கொக்கைனை பிடிக்கிற போலீஸ் காட்சிகள், அடுத்த 2.50 நிமிஷம் அடைக்கலம் கேங்க் கொக்கைனை எடுத்துட்டு வர கிளம்பும். ரொம்ப தெளிவான இண்ட்ரோவை 7 நிமிஷத்துலயே சொல்லிட்டு, அடுத்தடுத்த 3 நிமிஷத்துக்குள்ள சப்-ப்ளாட்களை இண்ட்ரோ பண்ணிட்டு கதைக்குள்ள போய்டுவாங்க. ஆனா ஹீரோவோட இண்ட்ரோ சரியா 23வது நிமிஷத்துலதான் படத்துக்கு உள்ளயே வரும். அப்போ இருந்தே படம் க்ளைமாக்ஸ் மாதிரித்தான் டிராவல் ஆகும். இதுல முதல் அரைமணிநேரத்துக்குள்ள ஒரு மூடை செட் பண்ணிட்டதால, ஹீரோயினுக்கான அவசியமும், பாட்டுக்களையும் ஆடியன்ஸ் எதிர்பார்க்க வைக்கலை. கைதிக்கு மெயின் ஹீரோ ஸ்கிரீன்ப்ளேதான். ஆக்‌ஷன் சினிமாவுக்கான கதையில ஹீரோ முதல்முதலா இறங்கி சண்டை போடுற இடமே ஒரு மணிநேரம் கழிச்சுத்தான் வரும். இதுவும் ஒருவிதமான ஸ்கிரீன்ப்ளே மேஜிக்தான்.

லோகேஷ் கனகராஜ்!

இரவின் காதலன் லோகேஷ் கனகராஜ்னு மாநகரத்துக்குப் பின்னால கைதியில நிரூபிச்சார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மூலமா கவனிக்க வைச்சவர், கைதி மூலமா ஓவர் நைட்ல ஒபாமா ஆகிட்டார். ஒவ்வொரு நிமிஷமும் சீட்டோட நுனியில உட்காரவைச்ச படம். லியோவை பார்க்கிறதுக்கு முதல் 10 நிமிஷம் மிஸ் பண்ணிடாதீங்கனு லோகேஷ் சொன்னார். ஆனா, கைதியோட ஒவ்வொரு நிமிஷமும் மிஸ் பண்ணிடக் கூடாதுனு சொல்லாமலேயே பார்க்க வைச்சார். இது ஆரம்பிச்ச இடம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. முன்னணி நடிகர்கள் கவனிக்க ஆரம்பிக்கிறாங்க. அடுத்ததா கைதி அப்படினு சொல்வேனுதான நினைக்கிறீங்க. அதுதான் இல்ல. சூர்யாவுக்குக் கதை கேட்குறாங்க. இரும்புக்கை மாயாவினு ஒரு கதை ரெடி பண்றார். ஒரு வருஷம் போகுது. ஆனா, அரை மணிநேரத்தை தாண்டி லோகேஷால கதை தயார் பண்ண முடியலை. கதை டிஸ்கஷன் நேரத்துல சாப்பாட்டு கடைக்கு போறார். டேபிள்ல செய்தித்தாள் விரிக்கிறாங்க. அப்போ ஒரு பெட்டி செய்தி கண்ல மாட்டுது. அந்த செய்திதான் நாம பார்த்த கைதிங்குற மாபெரும் வெற்றிப்படத்தோட கதை. இரண்டு வரி பெட்டிச் செய்தியா அந்த செய்தித்தாள்ல இடம் பிடிச்சிருந்தது. நண்பர்களோட டிஸ்கஸ் பண்ண இதையும் படமாக்கலாம்னு என முடிவு பண்றார். ஒரு அவுட்லைனையும் தயார் பண்றார். முதல்ல கேரெக்டரை மன்சூர் அலிகானை மனசுல வச்சே பண்றார். இன்னைக்கும் கார்த்தியோட மேனரிசம் மன்சூரோட மேனரிசம் மாதிரியே இருக்கும்.

இரும்புக்கை மாயாவி லேட் ஆனதால, வேற ஒரு ஒன்லைன் இருக்குனு கைதி கதையை சொல்றார், லோகேஷ். சரி இதை கார்த்தியோட லைனப்க்கு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி, அவர்கிட்ட ஒன்லைன் சொல்ல, அவருக்கும் பிடிச்சுப்போக கைதி ஓகே ஆகுது.
ஆனா அப்போ இருந்த பிசி ஷெட்யூல்ல கார்த்தி தரப்புல கொஞ்சம் தாமதமாகுது. லோகேஷ் ஒருமுறை விஜய் சேதிபதியை சந்திச்சு கதைய சொல்றார். அவருக்கு கதையை பிடிச்சுப்போக, நான் பண்ணட்டுமானு கேட்குறார். அதைக் கேள்விப்பட்ட கார்த்தி, ‘விஜய் சேதுபதி பண்றேன்னு சொன்னாரா, நல்ல கதையா வரும்போல’னு முடிவு பண்ணி, மத்த கமிட்மெண்ட்சை ஒதுக்கி வச்சுட்டு அடுத்தபடமா கைதியை அறிவிக்கிறார். அப்படித்தான் ஆரம்பிச்சது கைதி.  

Also Read – சேட்டை புடிச்ச பையன்.. சாண்டி மாஸ்டர் சம்பவங்கள்!

கார்த்தி அண்ட் கோ!

படத்துல டயலாக்குகள் கம்மி, ஆக்‌ஷன் மட்டும்தான், ஹீரோயின் இல்ல, பாடல்கள் இல்லனு எல்லா சமரசங்களையும் பண்ணிட்டு கதையை நம்பித்தான் படத்துக்குள்ள வந்தார், கார்த்தி. படம் முழுக்கவே ஆக்‌ஷனில் கலக்கும் கைதி டில்லியாகவும், மகளிடம் உருகும்போது அப்பா டில்லியாகவும் வெரைட்டி பெர்ஃபார்மென்சில் பின்னியிருந்தார். கார்த்தியை பருத்திவீரன் மேன்லியா காட்டினாலும், கைதி அவருக்கு ஆக்‌ஷனோட உச்சக்கட்டமா இருந்தது. எனக்கு மட்டும்தான் மாஸ் காட்டணும்னு லோகேஷ்கிட்ட கன்டிஷன் போடாம, மத்தவங்களுக்கும் பிரிச்சுக் கொடுத்து படத்தோட வெற்றிக்கு பக்கபலமா இருந்தார், கார்த்தி. பார்வையிலும், அசைவிலும் தன்னால் மிரட்ட முடியும்னு நிரூபிச்சார். கார்த்திக்கு அடுத்ததஹ படத்துல கவனம் ஈர்த்தது ஜார்ஜ் மரியான். தன்னாலும் சீரியஸாக நடிக்க முடியும் என நிரூபிச்சார். மாணவர்களை நினைச்சு பதறும்போது, அர்ஜூந்தாஸை வெளுக்கும்போதும் வெளிப்பட்டது அபாரமான நடிப்பு. அர்ஜூன் தாஸ் குரலாலும், உடல்மொழியாலும் கவர, தீனா ஒன்லைனர்களால் தெறிக்கவிட்டார்.

ஃபிலோமின் ராஜ் – சத்யன் சூரியன் – சாம்.சி.எஸ் கூட்டணி!

ஆக்‌ஷனில் அன்பறிவ் மிரட்ட, ஒளிப்பதிவுல சத்யன் சூரியனும், இசையில சாம்.சி.எஸ்-ம் கூட்டணி போட்டு மிரட்டினார்கள். ஒவ்வொரு ப்ரேமுக்கும் உயிர் கொடுத்தார் சத்யன் சூரியன். முழு படமும் இரவில் நடக்கும்போதும் சலிப்பு தட்டாம ரசிக்க வைச்சார். சாம்.சி.எஸ். ஒரு பக்கம் பதற்றத்தைக் கூட்டுற இசையையும், கிடைச்ச சின்ன கேப்புல எமோஷனைக் கூட்டுற இசைனு எல்லா ஏரியாக்கள்லேயும் நல்லாவே ஸ்கோர் பண்ணார். நீங்க மட்டும்தான் பண்ணுவீங்களா நானும் வர்றேன் என ஃபிலோமின் ராஜ் எடிட்டிங்கில் மிரட்டினார். இது எல்லாத்துக்கும் மேல ஆக்‌ஷன் பிரதர்ஸ் அன்பறிவ் படத்தோட முக்கியமான பில்லர். படத்துக்கு பொன் பார்த்திபன் எழுதின வசனங்கள் பக்கபலமா இருந்தது. டெக்னிக்கலா முக்கியமான படம் கைதினு சொல்ல வைச்சாங்க மொத்த குழுவும்.

எல்லாத்தையும்விட கைதிதான் இந்த எல்.சி.யூவுக்கு உள்ள இருக்கிற ஆரம்பப் புள்ளி. இந்த புள்ளியை தொடாம லோகேஷ் எல்.சி.யூவுல எந்த படமும் பண்ண முடியாதுங்குறதுதான் கைதியோட ஹைலைட்டே.

கைதி படத்துல எந்த சீன் உங்களுக்கு பிடிக்கும்ங்குறதை கமெண்ட்ல சொல்லுங்க.

2 thoughts on “எல்.சி.யூவின் ஆரம்பப்புள்ளி.. கைதி உருவான கதை!”

  1. You’re welcome! Thank you for your understanding. If you have any specific questions, topics, or areas of interest you’d like to explore, feel free to share them. Whether it’s about technology trends, scientific discoveries, literary analysis, or any other subject, I’m here to provide information and assistance. Just let me know how I can assist you further, and I’ll be happy to help!

  2. You’re welcome! Thank you for your understanding. If you have any specific questions, topics, or areas of interest you’d like to explore, feel free to share them. Whether it’s about technology trends, scientific discoveries, literary analysis, or any other subject, I’m here to provide information and assistance. Just let me know how I can assist you further, and I’ll be happy to help!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top