`மதம் என்பது மக்களின் அபின்’ என்று கார்ல் மார்க்ஸ் கூறியது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்னை மீண்டும் மிகப்பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பிரச்னைப் பற்றிய தகவல்கள் இங்கே…
- இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் தொடர்பான பிரச்னைகள் நடைபெற்று வருகின்றன. உலகின் மிகவும் நீண்ட மோதல்களில் ஒன்றாக இந்த மோதல் இருந்து வருகிறது. இதுவரைக்கும் எந்தவிதமான தீர்வும் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையில் காணப்படவில்லை.
- 1882 முதல் 1948 வரைஉலகம் முழுவதிலும் உள்ள யூதர்கள் பாலஸ்தீனத்தில் கூடினர். இந்த இயக்கம் அலியாஸ் என்று அறியப்பட்டது. 1917-ம் ஆண்டில் முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஓட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியது.
- பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென தனி இருப்படத்தை நிறுவும் நோக்கத்துடன் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் பால்ஃபோர் என்ற பிரகடனத்தைக் கைப்பற்றினர். எனினும், அந்த காலகட்டத்தில் அரேபியர்கள் பாலஸ்தீனப் பகுதியில் பெரும்பான்மையானவர்களாக இருந்தனர்.
- யூதர்கள் இந்தத் திட்டத்தை ஆதரித்த அதே வேளையில் பாலஸ்தீனியர்கள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுதொடர்பான போராட்டங்களில் சுமார் 6 மில்லியன் யூதர்கள் உயிரிழந்தனர். இதனால், யூதர்கள் மத்தியில் தனி நாடு கோரிக்கை வலுத்தது. யூதர்கள் பாலஸ்தீனத்தை தங்களுடைய சொந்த நிலம் என்று கூறிக்கொண்டனர். அதேநேரம் அரேபியர்களும் அந்த நிலத்தை விட்டு வெளியேறாமல் உரிமை கோரி வந்தனர். சர்வதேச சமூகம் யூதர்களை அதிகளவில் ஆதரித்தது.
- பிரிட்டன் இப்பகுதியின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதாக 1948-ம் ஆண்டு அறிவித்தது. இதனையடுத்து, பாலஸ்தீனத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதியைப் பிரித்து இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்த போதிலும் யூதர்கள் இதிலிருந்து பின்வாங்கவில்லை. இந்த சம்பவம் ஆயுத மோதலுக்கு வழிவகுத்தது. அரேபியர்கள் இஸ்ரேல் மீது படையெடுத்து தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதல் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை வீட்டை விட்டு வெளியேறச் செய்தது. இஸ்ரேல் அதிகப்படியான பகுதிகளைக் கைப்பற்றியது.
- ஜோர்டான் இஸ்ரேலுடன் போரிட்டு மேற்குக்கரை என்று அழைக்கப்படும் நிலத்தைக் கைப்பற்றியது. எகிப்து காஸாவைக் கைப்பற்றியது. பின்னர், ஜெருசலேமின் மேற்கில் இஸ்ரேலுக்கும் கிழக்கில் ஜோர்டனுக்கும் பிரிக்கப்பட்டது. எனினும், முறையான உடன்படிக்கைகள் எதுவும் கையெழுத்து ஆகவில்லை. இப்பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர். அதிகமாக போர்களும் இப்பகுதியில் காணப்பட்டன.
- 1967-ம் ஆண்டில் இஸ்ரேலானது கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரை, சிரியன் கோலன் ஹைட்ஸ், காஸா மற்றும் எகிப்திய சினாய் பெனின்சுலாவைக் கைப்பற்றியது. அந்த நேரத்தில் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக காஸா, மேற்குக் கரை மற்றும் அண்டை நாடான ஜோர்டன், சிரியா மற்றும் லெபனானின் எல்லைப் பகுதிகளில் வாழ்ந்தன. இஸ்ரேலியப் படைகள் அவர்களை திரும்பி வர அனுமதிக்கவில்லை. 1980-ம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமை தங்களுடன் இணைத்துக்கொண்டது.
- ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என இஸ்ரேல் நாடு கருதி வருகிறது. கிழக்கு ஜெருசலேம்தான் எங்களுடைய தலைநகராக எதிர்காலத்தில் அமையும் என பாலஸ்தீனியர்கள் கூறி வருகின்றனர். கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை இஸ்லாமியர்கள் தங்களது மூன்றாவது புனித தளமாக கருது வருகின்றனர். யூதர்களும் இதனைத் தங்களது புனித தலமாக கருதி வருகின்றனர்.
- யூதர்களுக்கென தனி நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அந்நாட்டு ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் இதனால் இஸ்லாமிய மக்களை ஒடுக்குவதாகவும் மத்திய கிழக்கில் அமைந்துள்ள இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக இருந்து வருகின்றன.
- இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்னையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணை நின்று வருவதாக பரவலாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டும் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மிகவும் தீவுரமாக நடைபெற தொடங்கியது.
- பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது. இதனால், இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பு என்றும் குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக ரம்ஜான் நேரங்களில் கிழக்கு ஜெருசலேமில் வன்முறைகள் வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
- ரம்ஜான் மாதத்தை ஒட்டி பாலஸ்தீன இஸ்லாமியர்கள் அல்-அக்சா மசூதியில் தொழுகைக்காக கூடியுள்ளனர். அப்போது இங்கிருந்த இஸ்லாமியர்களுக்கும் இஸ்ரேலிய காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வன்முறை வெடித்துள்ளது. பாலஸ்தீனியர்களை காவல்துறையினர்கள் கட்டாயமாக வெளியேற்ற முயன்றதால்தான் இந்த வன்முறை ஏற்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நாட்டினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டிலும் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. மாறி மாறி தாக்குதல்கள் நடத்தி வருவதால் இருநாடுகளும் கலவர பூமியாக காட்சியளிக்கின்றன.
- இந்த தாக்குதல்கள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இருநாட்டுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
Also Read – மார்க் ஜக்கர்பெர்க் – கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்… கடைபிடிக்கக் கூடாத 2 விஷயங்கள்!
tvqailutgyacikbmgczzlnhbhbxenf https://autocadhelp.net/wp-content/uploads/casino_rng_secrets.html