லோகி யூனிவர்ஸ்லாம் இப்போதான்… வெங்கட் பிரபு, தியாகராஜான் குமாரராஜா, கே.வி.ஆனந்த் யூனிவர்ஸ்லாம் தெரியுமா?

விக்ரம் படம் வந்து பல நாள்கள் ஆகுது. இருந்தாலும் அந்த ஆண்டவர் ஃபீவர் கொஞ்சம்கூட குறையல. ‘சக்கு சக்கு வத்திக்குச்சி, நாயகன் மீண்டும் வரான், போர்கண்ட சிங்கம்’னு ஃபுல் வைபஸ்ல எல்லாரும் இருக்காங்க. மக்கள்தான் ஒரு பக்கம் வேறலெவல்ல படத்தைக் கொண்டாடிட்டு இருக்காங்கனு பார்த்தா. ஆண்டவரும் பிரஸ் மீட், சக்ஸஸ் மீட், சக்ஸஸ் மீட்க்கு சக்ஸஸ் மீட்னு ஒருபக்கம் அளவற்ற ஆனந்தத்துல துள்ளி குதிச்சுட்டு இருக்காரு. இன்னொருபக்கம் லோகேஷ் ‘எல்.சி.யு’ அதாங்க, லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்னு அனௌன்ஸ் பண்ணி மஜா பண்ணிட்டு இருக்காரு. கைதில வந்த பல கேரக்டர்களை விக்ரம்லையும் கொண்டுவந்து இந்த சினிமாட்டிக் யூனிவர்ஸ் டாப்பிக்கை லோகேஷ் ஓப்பன் பண்ணிவிட்டாரு. ஆனால், இதுக்கு முன்னாடியே பல படங்கள்ல இந்த மல்டி யூனிவர்ஸை கான்செப்டை சில காட்சிகள்ல டைரக்டர்ஸ் யூஸ் பண்ணியிருப்பாங்க. அந்தப் படங்களைப் பத்திதான் இப்போ பார்க்கப்போறோம்.

ஆரண்யகாண்டம்

ஆரண்யகாண்டம்
ஆரண்யகாண்டம்

ஒரு இண்டர்வியூல இந்த மல்டியூனிவர்ஸ் பத்தி லோகேஷ்கிட்ட கேள்வி கேட்பாங்க. அதுக்கு அவருக்கு இன்ஸ்பைரா இருந்த சீன்களை சொல்லும்போது தியாகராஜன் குமாரராஜா எடுத்த ஆரண்யகாண்டம் படத்தைதான் குறிப்பிட்டு சொல்லுவாரு. ஆர்யாவோட நடிப்புல 2007-ல புஷ்கர் காயத்ரி இயக்கத்துல வெளிவந்த படம்தான் ஓரம்போ. இந்தப் படத்துல தியாகராஜன் குமாரராஜாவும் வொர்க் பண்ணியிருப்பாரு. ஓரம்போ படத்தோட ஒரு ஹீரோ ஆட்டோனே சொல்லலாம். அந்த ஆட்டோக்கு பின்னாடி ‘பிகிலே’ அப்டினு எழுதியிருக்கும். ஆட்டோவை சுத்தி டிராகன், ஃபயர்னு செமயா இருக்கும். அதே ஆட்டோவை 2010-ல வந்த ஆரண்ய காண்டம் படத்துல தியாகராஜன் குமாரராஜா யூஸ் பண்ணியிருப்பாரு. சுப்புவும் சப்பையும் ரோடு கிராஸ் பண்ணும்போது அந்த ஆட்டோ கிராஸ் ஆகும். கிளாஸால?!

பாபா

பாபா
பாபா

ரஜினிகாந்த நடிப்புல கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்துல 1999-ல வெளிவந்த படம்தான், படையப்பா. இன்னைக்கும் டி.வில இந்தப் படத்தைப் போட்டா ஸ்நேக்ஸோட டி.வி முன்னாடி உட்கார்ந்து பார்க்குறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவ்வளவு மாஸா இருக்கும் படம். ரஜினி காலா ஆடியோ லாஞ்ச்ல சொல்லுவாரு “எனக்கு சவாலா இருந்த வில்லன் கேரக்டர்கள்ல ஒண்ணு படையப்பா நீலாம்பரி”னு. அந்த கேரக்டரை 2002-ல பாபா படத்துல சுரேஷ் கிருஷ்ணா கொண்டுவந்துருப்பாரு. மார்க்கெட்ல வந்த நீலாம்பரி, என்கிட்ட வந்து டைம் கேக்கணும்னு பாபா தனக்கு கிடைச்ச மந்திரத்தை யூஸ் பண்ணுவாரு. அப்போ, கரெக்டா நீலாம்பரி வந்து டைம் கேப்பாங்க. நீலாம்பரியோட பார்வையில பாபா, படையப்பாவா தெரிவாரு. மாஸ்ல?!

மாற்றான்

மாற்றான்
மாற்றான்

சூர்யா நடிப்புல கே.வி.ஆனந்த் இயக்கத்துல 2012-ல வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம், மாற்றான். இதுல சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேஷத்துல நடிச்சு தூள் கிளப்பியிருப்பாரு. கே.வி.ஆனந்த் எல்லா படத்துலயும் எதாவது ஒரு மெசேஜ் சொல்லுவாரு. அப்படி, இந்தப் படத்துல உணவு சம்பந்தமா நடக்குற கலப்படங்கள் பத்தி பேசியிருப்பாரு. ஒரு சூர்யா புரட்சியாவே ஆரம்பத்துல இருந்து இருப்பாரு. இன்னொரு சூர்யா ஜாலியா இருந்து பின்னாடி புரட்சியா மாறுவாரு. இந்தப் படத்துல வந்த ரெட்டைக் கதிரே பாட்டுல, பகத் சிங், பாரதியார் இவங்க போஸ்டர்லாம் ஒட்டியிருப்பாங்க. அதுக்கூட, கே.வி.ஆனந்த் 2011-ல எடுத்த கோ படத்துல சிறகுகள் லீடரா வந்த அஜ்மலோட ஃபோட்டோவும் இருக்கும். கே.வி டச் செமல்ல!

பானா காத்தாடி

பானா காத்தாடி
பானா காத்தாடி

இதயம் முரளி… இந்தப் பேரை ஒன்சைடா லவ் பண்ற எந்தப் பையனும் மறக்கமாட்டான். மறக்கவும் விட மாட்டாங்க. சிவாஜி அமெரிக்காவுக்கு போய்ட்டு திரும்ப வந்தாலும் மாறாத ஒண்ணுல இந்த இதயம் முரளி பேரும் ஒண்ணு. 1991-ல வந்த இந்தப் படத்துல முரளி, ராஜாவா நடிச்சு கடைசி வரைக்கும் தன்னோட காதல சொல்ல மாட்டாரு. இதயம் ராஜாவாவே 2010-ல வந்த பானா காத்தாடி படத்துல கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுப்பாரு. அதர்வா பிறந்தநாள் கொண்டாடுவாரு. கொண்டாடிட்டு வெளிய போகும்போது முரளி விஷ் பண்ணுவாரு. “காதல் இருந்தா சீக்கிரம் சொல்லுங்க. இல்லைனா அது காயமாவே இருக்கும்”னு டயலாக்லாம் பேசி அதர்வாக்கு அட்வைஸ் பண்ணுவாரு. ரொம்ப கியூட்ல?!

மாஸ்

மாஸ்
மாஸ்

வெங்கட்பிரபு இயக்கத்துல சூர்யா நடிப்புல 2015-ல வந்தப் படம் மாஸ். படம் பெருசா மக்கள் மத்தியில் வரவேற்பு பெறலை. சூர்யா இந்தப் படத்துல ஆசைகள் நிறைவேறாமல் ஆவியா சுத்துறவங்களோட ஆசையை நிறைவேற்றுவாரு. அப்போ, 2011-ல வந்த எங்கேயும் எப்போதும் படத்தோட ரெஃபரன்ஸ் வரும். எங்கேயும் எப்போதும்ல கிளைமேக்ஸ்ல ஜெய் இறந்துருவாரு. அவரோட கண்ணை இன்னொருத்தருக்கு வைப்பாங்க. அதை மணிமேகலைக்கிட்ட சொல்ற பொறுப்பை ஜெய் சூர்யாக்கிட்ட கொடுப்பாரு. செம டச்சிங்கா இருக்கும் இந்த சீன். அப்புறம் அந்தப் பாட்டும் செமயா இருக்கும். அதேமாதிரி வெங்கட் பிரபுவோட கோவா படத்தோட கிளைமேக்ஸ்ல மன்மதன் சிம்பு வருவாரு.

ரஜினி முருகன்

ரஜினி முருகன்
ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் நடிப்புல 2016-ல வந்து மாஸ் ஹிட்டான படம், ரஜினி முருகன். இந்தப் படத்தோட கிளைமேக்ஸ்ல 2013-ல வந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தலைவர் போஸ் பாண்டி வருவாரு. அதாவது, தாத்தாவோட இன்னொரு பேரனா வருவாரு. ஃபன்னியா இருக்கும்.

வை ராஜா வை

வை ராஜா வை
வை ராஜா வை

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்துல கௌதம் கார்த்திக் நடிப்புல 2015-ல வெளிவந்த படம், வை ராஜா வை. மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துல 2006-ல வந்த புதுப்பேட்டை படத்தோட கொக்கி குமார் மாஸா எண்ட்ரி கொடுப்பாரு. புதுப்பேட்டைல தனுஷ் அரசியலுக்கு வந்துட்டதா கிளைமேக்ஸ்ல காமிப்பாங்க. வை ராஜா வைல எம்.எல்.ஏ ஆயிட்டதா காமிப்பாங்க. புதுப்பேட்டை பி.ஜி.எம்ல ரோல்ஸ் ராய்ஸ் கார்ல இருந்து தனுஷ் இறங்கி வந்து கத்தி புடிச்சிட்டு நிக்கும்போது அப்படியே கூஸ்பம்ப்ஸ் வரும்.

தமிழ் சினிமால இதுமட்டும் இல்லப்பா… இன்னும் சில படங்கள்லகூட இதேமாதிரி சீன்லாம் வந்துருக்குனு உங்களுக்கு தெரிஞ்சா… அதை கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – ஸ்டைல் ஐகான்… விஜய்யோட ஃபேவரைட் காஸ்டியூம் என்ன தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top