உலகின் மிகவும் பிரபலமான சமூக தளங்களில் யூ டியூபும் ஒன்று. ஒவ்வொரு நாளைக்கும் யூ டியூபிற்கு என மக்கள் தனியாக தங்களது நேரங்களை செலவிட்டு வருகின்றனர். ஃபுட், டிராவல், லைஃப் ஸ்டைல் என யூ டியூபில் கன்டென்டுகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் நமக்கு தேவையானவற்றை நாம் தேடி சென்று பார்க்கிறோம். இன்ட்ரஸ்டிங்கான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து கொள்கிறோம். அவ்வகையில் நீங்கள் தவறவிட்ட சில இன்ட்ரஸ்டிங்கான வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் யூ டியூப் சேனல்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
VelBros Tamil
வெற்றிவேல் மற்றும் வஜ்ர வேல் என்ற இரண்டு சகோதரர்கள் சேர்ந்து வச்சிருக்குற யூ டியூப் சேனல்தான் இது. கனடால இருக்குற இவங்க பல கேட்டகிரிலையும் வீடியோக்களை அப்லோட் பண்ணுவாங்க. பனி வீடு செய்றது, ப்ராங்க் பண்றதுனு வேல் ப்ரதர்ஸ் பண்ற அட்டகாசங்கள் ரொம்பவே அதிகம். இதுவரைக்கும் ஆறு லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இவங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிருக்காங்க. ரொம்பவே எனர்ஜியான, கலாட்டாவான வீடியோக்களைப் போட்டு கனடாவையும் நமக்கு சுத்தி காமிப்பாங்க. கனடாவை சுத்தி பார்க்கனும்னு ஆசைப் பட்டா இவங்க சேனலை நீங்க ஃபாலோ பண்ணலாம். இவங்க போட்ட பல வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
Way 2 go
அமெரிக்காவை சுற்றிக்காட்டுற நிறைய யூ டியூப் சேனல்கள் இருக்கு. அதுல ரொம்பவே தனித்துவம் வாய்ந்த இன்ட்ரஸ்டிங்கான சேனல்னா அது வே டு கோ தான். அமெரிக்காவை சுத்திக் காட்டுறதுல மாதவன அடிச்சுக்க ஆளே இல்லனு சொல்லலாம். சுத்திக் காட்டுறது மட்டுமில்ல நிறைய தகவல்களையும் தன்னுடைய வீடியோக்களின் வழியா சொல்லுவாரு. “உலகப் பயணம், தொழில்நுட்பம், விண்வெளி, அறிவியல் மற்றும் பல பிரத்தியேக காட்சிகளுடன் தமிழில்” – என்பதுதான் அவரோட டிஸ்கிரிப்ஷன் லைனே. சொன்ன நேரத்துல சொன்ன வீடியோவ சொன்னபடி போட்டு மாஸ் காட்டிருவாரு. இவரோட டிராவல் வீடியோக்கள பாக்கும்போது கூடவே நம்மளும் டிராவல் பண்ண ஃபீல் வரும். வீடியோக்களின் நடுவுல அவர் பயன்படுத்துற மியூசிக்கும் ரொம்பவே நல்லாருக்கும். இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் அவருக்கு இருக்காங்க.
Anitha anand
“லண்டன் தமிழ் பெண். லண்டனில் சுவையான தமிழுடன் உலகம் முழுக்க சுற்றலாம் சுவைக்கலாம் சமைக்கலாம்”- என்று அனிதா ஆனந்த் அவங்க சேனலுக்கு நம்மை வெல்கம் பண்ணுவாங்க. ஷாப்பிங் வீடியோ, ஊர் சுத்துற வீடியோ, ஃபுட் வீடியோனு நிறைய வீடியோக்களை அப்டேட் பண்ணுவாங்க. தனக்கென தனியா ஃபேன்ஸையும் சம்பாதிச்சு வச்சிருக்காங்க. இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இவங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிருக்காங்க.
Life in JAPAN – தமிழ்
சிவா என்பவர்தான் இந்த சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலின் வழியாக ஜப்பானின் கலாச்சாரம், உணவு வகைகள், பிரபல இடங்கள் போன்றவற்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஷாட்டா சொல்லனும்னா, ஜப்பானில் வாழ்க்கை எப்படி இருக்குனு சிம்பிளா தமிழ்ல சொல்றாரு. இதுவரைக்கும் 63,000 சப்ஸ்கிரைபர்கள் இவருக்கு இருக்காங்க. இவர் போடுற வீடியோக்கள் எல்லாமே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கானதா இருக்கும்.
Nadhira vlog tamil
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் விளாக்கர்தான் நாதிரா. டிராவல், ஃபுட்னு கலவையான டாபிக்ல வீடியோ போடுவாங்க. இவங்களோட வெகுளியான பேச்சுக்கும் அவங்க வாய்ஸ்க்கும் நிறையவே ஃபேன்ஸ் இருக்காங்க. இவங்க போட்ட ஆஸ்திரேலியா ஹோம் டூர் வீடியோ மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. இதுவரை 50,000-க்கும் மேற்பட்டவர்கள் இவங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்க.
Happy feed
ரொம்பவும் குறைவான சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலும் இண்ட்ரஸ்டிங்கான வீடியோக்களை தொடர்ந்து போட்டுட்டு வர்றாங்க இந்த ஹேப்பி ஃபீட். ஆரம்பத்தில் பேபி ஃபுட், டயட் சார்ந்த அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்தாங்க. அப்புறம் தங்களுடைய லைஃப் ஸ்டைல்ல இருந்து விளாக் வீடியோஸ்களை போட ஸ்டார்ட் பண்ணாங்க. சுமார் ஒரு வருடத்துக்கும் மேல இந்த யூ டியூப் சேனல் இருந்துட்டு வருது. அனிதா பொன்னையா என்பவர்தான் இந்த சேனலை நடத்துறாங்க. நார்வேல வசிக்கிற இவங்க பண்ண ஹோம் டூர் வீடியோ அதிக வியூஸ்களைப் பெற்றது. நார்வே நாடு சார்ந்து பல தகவல்களையும் தங்களுடைய வீடியோக்களின் வழியா தெரியப்படுத்திட்டு இருக்காங்க.
Also Read : யூ டியூபில் ஆடியன்ஸை சென்றடைய 6 ஐடியாக்கள்!