திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தமிழக அமைச்சராக முதல்முறையாக டிசம்பர் 14-ம் தேதி பொறுப்பேற்றார். அவருக்கு காலை 9.30 மணிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன ஓராண்டிலேயே அமைச்சர் பதவி ஏற்றிருக்கிறார் உதயநிதி. இது அவரது தாத்தா கருணாநிதி, தந்தை ஸ்டாலின் ஆகியோருக்குக் கிடைக்காத வாய்ப்பு… அரசியலுக்கே வர வேண்டாம் என்றிருந்த உதயநிதி அரசியலுக்கு வர காரணம் என்ன… ஒரு சில அதிருப்திக் குரல்களைத் தாண்டி அவர் அமைச்சராக முக்கியமான காரணமாக இருந்த ஒருவர் யார்.. இப்படியான பிண்ணனித் தகவல்கள் பத்திதான் இந்த வீடியோவில் நாம பார்க்கப் போறோம்.
கருணாநிதியைப் பொறுத்தவரை திமுக முதல்முதலில் போட்டியிட்ட தேர்தலில் வென்று குளித்தலை எம்.எல்.ஏவானார். இரண்டாவது முறையாக தி.மு.க தேர்தலில் போட்டியிட்டு வென்ற 1967 தேர்தல் அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சரானார். அதேபோல், மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை சிறுவயது முதலே அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திமுக இளைஞரணிப் பொறுப்பு தொடங்கி பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என படிப்படியாக வளர்ச்சி கண்டவர். அவர் போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்தார். இரண்டாவது முறை எம்.எல்.ஏவான போது அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அதன்பின்னர், சென்னை மேயர் – அமைச்சர் என இரண்டு பொறுப்புகளை வகித்தார். அந்த சூழலில் கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் என்று பேச வைத்தார்கள்.
முதல்முறையாக தி.மு.க ஆட்சி அமைத்தபோது அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றாரோ, அதேபோல் உதயநிதியையும் அமைச்சராக்க நினைத்தார்கள். ஆனால், தனது தாத்தா போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முதல் முறையாக அவருக்கு 2021 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் வென்று அவர் எம்.எல்.ஏவான போதும், திமுக ஆட்சியில் இருந்தும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாமல் இருந்தது. காரணம், உதயநிதி அமைச்சராகலாம் என்கிற டாக்கை பொதுமக்கள், கட்சியினர் மத்தியில் ஏற்படுத்துவதற்கான கால அவகாசமாகத்தான் இதைப் பார்க்கிறார்கள். இறுதியில் அமைச்சராக அவர் பொறுப்பேற்கிறார். சட்டமன்றத்தில் அவருக்கென தயாராகி வரும் அறையை டிசம்பர் 13-ம் தேதி பார்வையிட இருக்கிறார்.
முதல் தேர்தலிலேயே வென்று அமைச்சர் பொறுப்பேற்க இருக்கிறார் உதயநிதி. இதன் பின்னணியில் இருந்த ஒரு முக்கியமான நபர் யார் தெரியுமா…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி எம்.எல்.ஏவானதுமே, அவர் அமைச்சராக வேண்டும் என்கிற பேச்சு எழுந்தது. இந்த டிரெண்டும் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உருவாக்கப்பட்டது. திமுக தரப்பில் இதுபற்றி முதன்முதலில் பேசியது உதயநிதியின் ஆத்ம நண்பரும், அவரது ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்தவரும் தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்தான் இதைப் பற்றி பொதுவெளியில் முதல்முறையாகக் கருத்துத் தெரிவித்தார். உதயநிதி அமைச்சர் பொறுப்பேற்பது மு.க.ஸ்டாலினுக்குக் கிடைத்த வெற்றியா அல்லது கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினருக்குக் கிடைத்த வெற்றியா அல்லது உதயநிதியின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த வெற்றியா என்பதையெல்லாம் விட இது முழுக்க முழுக்க அவரது அம்மா துர்கா ஸ்டாலினுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக, அவரைக் கட்சிக்குள் கொண்டு வந்து, கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்த இடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் மற்ற அனைவரையும் விட துர்கா ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அவர் கட்சிக்குள் வந்ததும், இளைஞரணிப் பொறுப்பு வழங்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். அதன்பின்னர், அவரை அமைச்சராக்க வேண்டும் என்கிற பேச்சு வலுத்து வந்தது.
Also Read – அடிவாங்குறதுக்குனே பா.ஜ.க-ல இருக்கவங்க இவங்கதான்!
துர்கா ஸ்டாலின் தரப்பு வாதம் என்னவென்றால், உங்க அப்பா உங்களுக்குத் தாமதம் பண்ணியதால்தான், நீங்க முதல்வராக இவ்வளவு தாமதம் ஆச்சு. அதே தவறை நீங்களும் பண்ணக் கூடாது. உதயநிதிக்கு இப்பவே 45 வயதாகிவிட்டது. அடுத்த தேர்தலில் என்ன நடக்கும்னு இப்போ கணிக்க முடியாது. அதனால அவரைக் கட்சிக்குள் கொண்டுவந்து, அடுத்தடுத்த பொறுப்புகளுக்குக் கொண்டு வர வேண்டும் என துர்கா ஸ்டாலின்தான் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் தனது மகனுக்காக அம்மாவுக்குக் கிடைத்த வெற்றிதான் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. மகனை எப்படியாவது முதலமைச்சராக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. அமைச்சரான பிறகு அவரின் செயல்பாடுகள் பற்றிய பாராட்டுகள் விமர்சனங்கள் எழும். அது அவரின் அரசியல் பயணத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும் என்று கணிக்கிறார் அவர்.
உதயநிதி அமைச்சராகக் கட்சிக்குள் 90 முதல் 95% ஆதரவு இருக்கிறது என்றாலும், கட்சிக்குள் அதிருப்தி இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதிலாக இருக்கிறது. குறிப்பாக கனிமொழி, ஆ.ராசா தரப்பில் இதற்கு அதிருப்தி இருப்பதாகத்தான் சொல்கின்றன திமுக வட்டாரங்கள். இருந்தாலும், பொதுவெளியில் அவர்கள் இதை வெளிப்படுத்த மாட்டார்கள்.
உதயநிதி அமைச்சராவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க… உங்க கருத்துகளை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!