நண்பர்களோடு நீங்க நேரம் செலவழிக்குறது மனநலனுக்கு ரொம்பவே முக்கியம்னு சொல்றாங்க.. அப்படி சொல்றது ஏன்… 4 காரணங்கள் மூலமா தெரிஞ்சுக்கலாம் வாங்க…
நண்பர்கள்
நட்பு என்பது எத்தனையோ விஷயங்களில் நம்மைத் தாங்கிப் பிடிப்பது. நல்ல ரிலேஷன்ஷிப்பை மெயிண்டெய்ன் செய்வது மட்டுமல்ல, உடல்நலன் தொடங்கி குடும்பம், அலுவலக விஷயங்கள் என எல்லாவற்றிலும் நம் மேல் அக்கறை கொண்டவர்கள் நண்பர்கள். நண்பர்களுடன் நீங்கள் நேரம் செலவழிப்பது என்ஜாய்மெண்டாக மட்டுமே அல்ல; அது நீண்டகால நோக்கில் உடல், மன நலன்கள் விஷயத்திலும் நன்மை பயக்கக் கூடியது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். சொந்த, பந்தங்கள் இருந்தாலும் நண்பர்கள் தரும் ஆறுதல் என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாதது…
நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது ஏன் மனநலனுக்கு முக்கியம் – 4 காரணங்கள்!
மனஅழுத்தம்
மனஅழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் அல்லது நிகழ்வுகளை நாம் எல்லோருமே ஏதாவது ஒரு கட்டத்தில் கடந்து வந்திருப்போம். அப்படியான சூழலில், நமது பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அக்கறையோடு ஆறுதல் சொல்லும் நண்பன் அருகே இருந்தால், அதைக் கடந்து வருவது எளிது. அதற்கு முன்பாக எந்த சூழலில் நீங்கள் மன அழுத்தத்தை அதிகமாக உணர்ந்தீர்கள் அல்லது வருத்தமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசி, அதிலிருந்து மீளுவதற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளையும் அவர்கள் உங்களுக்கு அளிக்கையில் அது கொடுக்கும் தெம்பே தனிதான். உங்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டு உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நண்பர்கள் வட்டம் இல்லையென்றால், இதுபோன்ற கடினமான சூழல்களில் இருந்து நீங்கள் வெளிவருவது கடினமான காரியம்தான்.
தன்னம்பிக்கையின் பூஸ்ட்
ஒரு நல்ல நண்பன் எப்போதுமே உங்கள் கான்பிடன்ஸ் லெவலையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் அச்சாணியாக இருப்பான். உங்கள் சந்தோஷங்களில் பங்கெடுத்து, கொண்டாடும் பெஸ்ட் Cheer Leader உங்கள் நண்பன்தான். உங்களின் வெற்றிகளில் பங்கெடுத்து, அதன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள்தான் உங்களுக்கு வேண்டும். ஃபீலிங் டவுனாக நீங்கள் உணரும் தருணங்களிலும், பாதுகாப்பிலாத உணர்வு உங்களை ஆட்டுவிக்கும் சூழலிலும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகத் தோள் கொடுப்பார்கள். நம்பிக்கையை மீட்டெடுக்க அவர்கள் கைகொடுப்பார்கள். நீங்கள் எவ்வளவு ஸ்பெஷலானவர் என்றும் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு வாய்ப்புகளை வழங்க முடியும் என்பதையும் உணர வைத்து, நீங்கள் நீங்களாக இருக்க உதவி செய்வார்கள்.
எமோஷனல் சப்போர்ட்
வாழ்க்கையையே வெறுத்து ஒரு விரக்தியான மனநிலையில் நீங்கள் இருக்கையில், நண்பர்கள் நிச்சயம் அந்த சூழலில் இருந்து வெளிவர உதவுவார்கள். உணர்வுரீதியாக அவர்கள் கொடுக்கும் சப்போர்ட், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை உங்களுக்குக் கொடுக்கும். இது உளவியல்ரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முக்கியமானது. இப்படியான ஃபீல் டவுன் மொமண்ட்களில் நண்பர்கள், குடும்பத்தினர் உதவியை நாடுபவர்கள் உடல், மனநலன் சார்ந்து ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்கின்றன பல ஆய்வுகள்.
Best out of You
நண்பர்கள் என்றாலே ஸ்பெஷல்தானே… அவர்கள் எப்போதும் நேர்மறையான தாக்கத்தை நம்முள் விதைத்துக் கொண்டே இருப்பார்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை, குடும்ப நலன் மற்றும் சமூக சிந்தனைகள் சார்ந்த பாசிட்டிவ் வைப் கொண்டவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கையில், நிச்சயம் அது உங்களையும் சிறந்தவர்களாக ஆக்கும். அத்தோடு, நண்பர்கள் கொடுக்கும் ஊக்கம், ஒவ்வொரு விஷயத்திலும் உங்களிடமிருக்கும் பெஸ்டை வெளிக்கொண்டுவரும் வல்லமை பெற்றது. நல்ல நண்பர்கள் வாழ்வின் முக்கியமான அங்கமாக இருப்பவர்கள்.
Also Read – வெட்டிங் கார்டோட என்ன கிஃப்ட் கொடுக்கலாம்… 5 அசத்தல் டிப்ஸ்!