தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தோடு காமெடி களத்தில் முத்திரை பதித்தவர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களில் தொடங்கி வெள்ளித்திரையிலும் தனக்கென தனி பாணி படைத்தவர். தமிழ் சினிமா ரசிகர்கள் காமெடி கிங்காக அவரை ஏன் கொண்டாடினார்கள்.. அதற்கான 4 காரணங்களைத்தான் தெரிஞ்சுக்கப்போறோம்.
Say No to Double Meaning
பொதுவா கிரேஸி மோகன் படங்கள்ல டபுள் மீனிங் விஷயம் கொஞ்சம் கூட இருக்காது. ஏன் பஞ்சதந்திரம் படத்தோட ஒன்லைனை யோசிச்சுப் பார்த்தா அவ்வளவு வக்கிரமா இருக்கும். ஆனா, அது எதையுமே நம்மை யோசிக்க விடாம முழுக்க காமெடிகளால தெறிக்க விட்டிருப்பார். அந்தப் படம் மட்டுமில்லாம தொடர்ந்து அவரோட எந்தப் படத்துலேயும் டபுள் மினீங் இருக்காது. இவரை மாதிரி பாஸிட்டிவ்வான ஒரு ஆளை நம்ம இன்டஸ்ட்ரியில பார்க்கவே முடியாது. கொஞ்சம் கூட நெகடிவ்வா பேசாம, அந்த மாதிரி சிந்தனைகள் இல்லாம தமிழ் சினிமா இன்டஸ்ட்ரில வலம் வந்த ஆள். இவர்கிட்ட யார் எப்ப பேசினாலும் முழுக்க பாஸிட்டிவ் வைப் கிடைக்கிறது கியாரன்டி. இவரோட நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும் இவர் எந்த மாதிரி ஒரு குழந்தை மனசுக்காரர், பாஸிட்டிவிட்டி உள்ள ஒரு ஆள்னு. இதேதான் இவரோட படங்கள்லேயும் reflect ஆகிருக்கும். வார்த்தைகள் வழியா பேசுற காமெடிகள்ல ஆரம்பிச்சு, பாடி லாங்குவேஜ் வரைக்கும் எந்த இடத்தையும் மிஸ் பண்ணாம காமெடியை போட்டு விட்டிருவார்.
அபூர்வ சகோதரர்கள் படத்துல கமல் ஜெயிலுக்குள்ள குதர்க்கமா பேசி காமெடி பண்ணிட்டு இருந்தா, ஜெயிலுக்கு வெளில மனோரமா, `அய்யயோ அய்யோ’ங்கிற டயலாக்கை வெச்சு காமெடி பண்ணுவார். மைக்கேல், மதன், காமேஷ்வரன், ராஜுனு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஸ்லாங், பாடி லாங்குவேஜ் வசனங்களை எழுதுவார். காதலா காதலா படத்துல எம்.எஸ்.வி, வடிவேலு, ரம்பா, சௌந்தர்யா, பிரபுதேவா, கமல்னு எல்லாருமே ஒரே இடத்துல இருக்கும்போது டயலாக் காமெடி டிராக் ஒரு பக்கம் போயிட்டு இருந்தா, பிரபுதேவா ஒரு இடத்துல நிற்காம அங்கயும் இங்கயும் போயிட்டு சைகைலே காமெடி பண்ணிட்டு இருப்பார். எல்லாரும் பேசி முடிச்ச உடனே இவரோட திக்கு வாய்லேயும் ஒரு காமெடியைப் போட்டுவிட்டுப் போவார். அந்த சிச்சுவேஷனில் உருவ கேலியாகத் தெரியாம ரொம்ப ரசிக்கிற மாதிரிதான் எழுதியிருப்பார்.
கமல் – கிரேஸி மோகன் காம்போ
கவுண்டமணி – செந்தில், பார்த்திபன் – வடிவேலு, விவேக் – வடிவேலுனு தமிழ் சினிமாவுல ஜோடி சேர்ந்து நம்மள சிரிக்க வெச்சவங்க ஏராளம். இந்த வரிசையில கொண்டாடப்பட வேண்டிய மற்றுமொரு மொரட்டு ஜோடிதான் கமல் – கிரேஸி காம்போ. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அபூர்வ சகோதரர்கள் படத்துல ஆரம்பிச்சு மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, காதலா காதலா, வசூல் ராஜா, பஞ்சதந்திரம்னு பட்டாசான படங்களைக் கொடுத்தது இந்த காம்போதான். வசூல்ராஜா படத்தில் இவர் நடித்த மார்க்கபந்து கேரக்டர் அழியாப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம்.
கமல்ன்னாலே வெரைட்டிங்கிறதை உணர்த்துன ஆள் கிரேஸி. குணானு ஒரு படம் கமல் நடிச்சிருந்தா, அதுக்கு முன்னாடி மைக்கேல் மதன காமராஜன்னு ஒரு படம் பண்ணிருப்பாங்க. இந்தியன் நடிச்சிருந்தார்ன்னா அடுத்து அவ்வை சண்முகி பண்ணிருப்பார். ஹேராம்னு ஒரு படம் பண்ணிருந்தார்ன்னா அதுக்கு முன்னாடி காதலா காதலாவும், பின்னாடி தெனாலியும் பண்ணிருப்பார். அன்பே சிவம் நடிச்சா அதுக்கு முன்னாடி பஞ்சதந்திரம். விருமாண்டி நடிச்சா அடுத்து வசூல் ராஜா. இப்படிதான் இவங்களோட காம்போ இருந்துச்சு. இதுனாலதான் கமலோட தவிர்க்க முடியா நண்பரா கிரேஸி மோகன் இருக்கார்.
கிரேஸி மோகன் – வார்த்தை விளையாட்டு
கிரேஸியோட உச்சக்கட்டமான அண்ட் எளிமையான டேலன்ட்னே இதை சொல்லலாம். அவரோட நாடக காலத்துல இருந்தே இந்த வார்த்தை விளையாட்டை பண்ணிட்டுதான் இருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்துல அப்பு கமலை நாகேஷ்கிட்ட கொண்டு வரும்போது அவர் ‘என்னயா பாதிதான் கொண்டு வந்திருக்க’னு கேட்டதுக்கு இவ்வளோதான்யா கிடைச்சது’னு அடியாள் சொல்லுவார். அவ்வை சண்முகி படத்துல, நான் மானகி ஜம்பா வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்’னு சொல்றது, அதே பயங்கர ஷாக் முதலியார்னு கமல் சொல்வார். நடுவுல வாட்’ அப்டினு ஹீரா கேட்பாங்க. அதுக்கு இவர் ஒரு 440 watt இருக்கும்னு சொல்றது, காதலா காதலா படத்துல, யூ லைக் பிக்காஸோ’னு சௌந்தர்யா கேட்பாங்க. ஒண்ணும் தெரியாத நம்ம ஆள், வேண்டாம்ங்க ஃபலூடாவே புல்லாகிடுச்சு’னு சிரித்துக்கொண்டே சொல்வார்.
பம்மல் கே சம்பந்தம் படத்தின் ஒரு சீனில், ஆனந்த் பையனை சாவடிச்சிட்டாங்கன்னே’னு வையாபுரி சொல்வார் வேகமா ப்ரேக்கைப் போட்டுட்டு, ஏன்டா மெய்யாலுமே சாவடிச்சிட்டாங்களா’டானு கமல் கேட்பார். அதுக்கு வையாபுரி,சாவடிக்கலனே, சாவடி அடிச்சிட்டாங்கனு சொன்னேன்’னு சொல்வார். இப்படி வரிசையா அடுக்கிக் கொண்டே போகலாம். கிரேஸி மோகனுக்கு சாவி, மௌலி, பிஜி.வுட்ஹவுஸ்னு பல இன்ஸிபிரேஷன்கள் இருந்தாலும் அவருக்கு இன்ஸ்பிரேஷன் அவரேதான். அன்றாட வாழ்க்கையில நடக்குற சம்பவங்கள்தான் கிரேஸி மோகன் காமெடிகள்ல நடக்கும். ஒரு முறை கிரேஸி மோகன் கார்ல வெளியில் கிளம்பிட்டு இருக்கும்போது அவரோட அசிஸ்டென்ட் கார் முன்னாடி நின்னு எதையோ யோசிச்சுகிட்டு இருந்திருக்கார். அப்ப இவர், `ஏன்டா எலுமிச்சம்பழம் மாதிரி முன்னாடி நிற்குற, பின்னாடி கார் நிக்கிறது தெரியில, போடா பின்னாடி’னு சொல்லிருக்கார். இதோட extended version of காமெடியைத்தான் நம்ம பஞ்சதந்திரம் படத்துல பார்த்தோம்.
ஜானகி டச்
அபூர்வ சகோதரர்கள் கௌதமி, மகளிர் மட்டும் ஊர்வசி, அவ்வை சண்முகி மீனா, காதலா காதலா ரம்பா, பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா, வசூல் ராஜா சினேகா, பம்மல் கே சம்பந்தம் சிம்ரன்னு முக்கால்வாசி ஹீரோயின்களோட பேரு ஜானகிதான். இவர் ஒர்க் பண்ற எல்லா படங்களுக்கும் டைரக்டர்கிட்ட சண்டை போட்டு இந்தப் பெயரை வைக்க சொல்லுவாராம். சில படங்களுக்கு அப்டினாதான் நான் அட்வான்ஸே வாங்குவேன்னு கூட சொல்லிருக்கார். அதுமட்டுமில்லாம இவர் அரங்கேற்றிய முதல் நாடகத்தோட நாயகி பெயரே ஜானகிதான். அந்தளவுக்கு அந்த பெயர் மேல ரொம்ப மரியாதையும் பாசமும் வெச்சிருப்பார். அதுக்கு என்ன காரணம்ன்னா ஸ்கூல் படிக்கும்போது முதன்முதல்ல இவர் நாடகத்துல நடிக்க இருக்கப்ப, இவருக்கு மேக்அப் போட்டுவிட்ட டீச்சர் பேரு ஜானகி. அதனாலதான் அந்தப் பெயரை இவரோட எல்லா படங்கள்லேயும் பார்க்க முடியும்.