Beauty Standards
பொதுவாக ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று ஒருதரப்பினர் சொல்வார்கள். காரணம், எல்லா விஷயங்களிலும் தங்களை பெஸ்டாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற வரையறைக்குள் பெண்கள் சிக்கித் தவிப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு பெண்ணும் வீட்டிலும், வேலையிலும் சரி மாறிவரும் உலகின் பேஷன் டிரெண்டுக்கு ஏற்றபடியும், தங்களை வெற்றிகரமான ஒரு பெர்சனாலிட்டியாக முன்னிறுத்திக் கொள்ள முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டி பெண்களாகிய நீங்கள், உங்கள் சுயத்தை மதித்து நீங்கள் நீங்களாகவே இருத்தல்தான் நலம் என்கிறது உளவியல்.
ஒரு பெண் என்றால் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று வரையறைக்குள் அடைந்துவிடாமல், ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையோடு இருத்தல்தான் உண்மையான பலம். அப்படி பெண்கள் அடித்து உடைக்க வேண்டிய 7 Beauty Standards பத்திதான் நாம இப்போ பார்க்கப் போறோம்.
மெல்லிய இடை
பெண்களை மெல்லிடையாள் என்றெல்லாம் வர்ணித்துப் பாடியிருக்கிறார்கள் கவிஞர்கள். வயிற்றுப் பகுதியில் கொஞ்சமே கொஞ்சூண்டு சதை இருந்தாலும் எப்படியாவது, அதைக் குறைத்துவிட வேண்டும் என்று டயட்டுகளால் தங்களை வருத்திக் கொள்ளும் எத்தனையோ இளம்பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், இயல்பாக இருப்பதுதான் உங்க கெத்தே..!
Plump lips
பியூட்டி ஸ்டாண்டர்ஸைப் பொறுத்தவரை லிப்ஸுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பாங்க. உடல்வாகுக்கு ஏற்ற மாதிரிய பெரிய உதடுகள் இருக்கணும்னு ஒரு வரையறை வைச்சிருக்காங்க… தங்களது உதடுகள் அழகாகத் தெரியணும்னு பெண்கள் நிறைய ரிஸ்குகளையும் எடுப்பாங்க.. ஆனா, மருத்துவர்கள் என்ன சொல்றாங்கனா, நீங்க இப்படி எடுக்கும் ரிஸ்குகளால் உதடுகளின் மேல்சதை டேமேஜாக நிறையவே வாய்ப்பிருக்குனு சொல்றாங்க..
Ideal Shape
அதேபோல், பெண்கள் உடல்வாகு இப்படித்தான் இருக்கணும்னும் சிலர் சொல்வாங்க… இதுக்காக அதீத முயற்சிகளையும் சிலர் எடுக்குறதுண்டு. காரணம், அந்த ஸ்டாண்டர்டு. ஒல்லியான இடை, அதற்கேற்றபடியான தோள்பட்டை அளவுகள் இப்படினு இதுக்காக ரெஃபரென்ஸும் நிறையவே கொடுப்பாங்க… Hourglass Body என்று இதைச் சொல்வார்கள். அந்தமாதிரியான எண்ணங்கள்ல போய் சிக்கிக்காதீங்க. உடல்வாகு என்பது, மரபுரீதியாக, இனரீதியாக வர்றது. அப்படி இயற்கையா வாய்க்கப்பெற்றிருக்கும் உடல்வாகுக்கு ஏற்றபடி உங்கள் பேஷன் ஸ்டைலை மாற்றி கெத்து காட்டுங்க. தேவையில்லாமல், சைஸ் ஜீரோ போன்ற கான்செப்டுகளால் மன உளைச்சலை ஏற்படுத்திக்க வேண்டாம் என்பது மருத்துவர்களின் அட்வைஸ்.
பேஷியல் எக்ஸ்பிரஷன்ஸ்
பெண்கள் பேஷன் உலகில் ரொம்ப முக்கியமான வார்த்தை இது. பொதுவா, ஒவ்வொருத்தரும் சிரிப்பு, கோபம், அழுகைனு உணர்ச்சிகளை ஒவ்வொருவிதமா வெளிப்படுத்துவாங்க. ஆனால், பேஷன் துறையில் இதுக்கும் தனியா கிளாஸ் எடுக்கிறாங்க. சிரிப்பையும் அளந்துதான் சிரிக்கணும், பற்கள் இவ்வளவுதான் தெரியணும்னு இதுக்காக அவங்க தனி டிக்ஷனரியையே போட்டு வைச்சிருக்காங்கன்றதுதான் நிதர்சனம். உண்மையில் பார்த்தீங்க… இயல்பா உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரிஞ்சவங்கதான் எத்தனையோ இடங்கள்ல ஸ்பாட்லைட்டாவே மின்னிருப்பாங்க.. இதுக்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கு. அதனால, நீங்க நீங்களாவே இருங்க.. உங்க சிரிப்புதான் உங்க அடையாளம்ன்றதை எப்போதும் மறந்துடாதீங்க கேர்ள்ஸ்.
Slow down Aging
வயதுக்கு ஏற்ற சுருக்கங்கள்தான் பேரழகு. ஆனால், பெண்கள் சிலரோ அந்த சுருக்கங்களை மறைக்க மேக்-அப் உதவியை மட்டுமல்ல, சில நேரங்களில் அறுவைச் சிகிச்சை உதவியைக் கூட நாடுவதுண்டு. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பயோலாஜிக்கல் கிளாக்கை நீங்கள் மாற்ற முடியாது. அதேநேரம், இந்த மாற்றங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையோடு பயணிக்கத் தொடங்குங்கள்.
Thick brows
அடர்த்தியான கண்புருவங்கள்தான் அழகு என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதற்காகத் தங்கள் புருவங்களை அழகுபடுத்த ரொம்பவே மெனக்கெடுவார்கள். புருவங்கள் அடர்த்தியாக அமையப் பெறாதவர்கள், கண் மை போன்றவற்றைக் கொண்டு புருவங்கள் வரைவது போன்றவற்றையும் ஃபாலோ பண்ணுவார்கள். உண்மையில், ஒவ்வொருவரின் முக அமைப்புக்கு ஏற்றபடியே புருவங்கள் அமைந்திருக்கும். இதனால், உங்கள் புருவம் எப்பவுமே பெஸ்ட்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Wrinkle-free face
கண்களுக்குக் கீழ் வரும் சுருக்கம், முதல் நரைமுடி போன்றவை பெண்கள் பலரின் தூக்கத்தையே கெடுத்துவிடும். இதிலிருந்து மீள Botox ஊசிகள், Fillers போன்றவைகளைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இயற்கை பெண்களுக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதத்தின் மேல் பூசப்படும் பூச்சுகள் இவை என்பதை மறந்துவிடாதீர்கள். அதுதான், தனித்தன்மை எனும் பேரழகு. உங்க Uniquenesss தான் உங்க அடையாளம்.
Also Read – உங்க ஃபேவரிட் செல்ஃபி நீங்க யாருனு சொல்லிடும் – செக் பண்ணிக்கோங்க!
I’m always inspired by your posts. Thanks for sharing this great content!