சிப்ஸ் பாக்கெட்

சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் காத்து அடைக்கிறாங்க? – Chips கண்டுபிடிச்ச கதை!

தற்செயலா சில விஷயங்கள் கண்டுபிடிச்சு உலக ஹிட் ஆன வரலாறெல்லாம் எக்கச்சக்கமா இருக்கு… அந்த வரிசையில் ஹிட்டடிச்ச பல தற்செயல் கண்டுபிடிப்புகளை இந்த வீடியோ சீரிஸில் பாக்கப்போறோம். அந்த வகையில் நம்ம எல்லாருக்கும் ரொம்ப விருப்பமான ஓர் உணவுப்பொருள், தற்செயலா திட்டமிடாம கண்டுபிடிக்கப்பட்ட “உருளைக்கிழங்கு சிப்ஸ்” பற்றி பாப்போம். 

ரொம்பவே எளிமையான உணவுப்பொருள், பெரிய ரெசிப்பி எல்லாம் தேவைப்படாது, பார்த்து பார்த்து சமைக்கனும்னுலாம் கட்டாயம் இல்லை. லேசா தீஞ்சு போயிருச்சேனு கவலைப்படத் தேவையில்லை. மொருகலா போயிருச்சேனும் யோசிக்கத் தேவையில்லை… எப்படி வேனாலும் சமைக்கலாம், சாப்பிடலாம் மாதிரியான ஒரு சிம்பிளான சிப்ஸ். அதேமாதிரி, அந்த ரெசிப்பியைக் கண்டுபிடிக்கவும் பெருசா எல்லாம் மெனக்கெடவே இல்லை. உருளைகிழங்கு சிப்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதையைப் பார்ப்போம் வாங்க.

ஏன் சிப்ஸ் பாக்கெட்களில் இவ்ளோ காற்று அடைக்கப்பட்டிருக்குனு தெரியுமா? அதுக்கான பதிலை கடைசியில் பார்ப்போம்.

1853-ம் வருடம் நியுயார்க்கின் Saratoga பகுதியில் இருந்த Moon’s Lake House என்ற ஹோட்டலுக்கு ஒரு கஸ்டமர் வர்றாரு. அவர் பேர் முக்கியமில்லை, அடுத்து வரலாறுல அவர் பெயர் பதிவாகலை, அதனால அவர் பெயரை டீல்ல விட்டுடுவோம். வந்தவரு முதல்ல ஒரு ஸ்டார்ட்டர் ஆர்டர் பண்ணுவோம்னு french fries வேணும்னு சொல்றாரு. அப்போ கிச்சன்ல நம்ம குக் George Crum தான் இருக்கார். அவரும் வழக்கம் போல ஃப்ரைஸ் போட்டுத்தராறு, அதைச் சாப்பிட்ட கஸ்டமர் ரொம்ப தடிமான மொத் மொத்துனு இருக்கு, வேற ஃப்ரைஸ் கொண்டு வாங்கன்னு சொல்லி இருக்காரு. நம்ப குக் லேசா கடுப்பாகி இருக்காரு, இன்னும் கொஞ்சம் மெலிசா கட் பண்ணி திரும்ப ப்ரைஸ் போட்டு அனுப்பி இருக்காரு. திரும்பவும் இந்த ஃப்ரைஸ்ல துளசி இல்லை, இஞ்சி இல்லை, அஸ்வகந்தா இல்லை, அதிமதுரம் இல்லைன்னு ஆயிரத்தெட்டு ஆயுர்வேத மூலிகைகள் இல்லைனு குறை சொல்லி இருக்காரு. 

ரொம்பவே கடுப்பான நம்ம செஃப் George Crum, அவருக்கு இன்னொரு பேரும் இருக்கு அது  George Speck. இந்த கஸ்டமருக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுத்தே ஆகனும்னு முடிவு பண்ணிருக்காரு. கிச்சன்ல இருந்ததுலயே பெரிய உருளைக்கிழங்குகளை எடுத்து ரொம்ப மெல்லிசா சீவியெடுத்து எண்ணையில் போட்டு முறுகலா வறுத்தெடுத்திருக்காரு. அதுக்குப்பிறகு அது மேல உப்பையும் காரப்பொடியவும் அள்ளித் தெளிச்சிருக்காரு. சாவுடா மகனேன்னு கொண்டு போய் வச்சா, அந்த கஸ்டமர் சாப்பிட்டுட்டு “ஐ… நல்லாருக்கே… இன்னும் ஒரு பிளேட் கிடைக்குமான்னு கேட்டிருக்காரு… நம்ம செஃப்புக்கு ஆச்சர்யம் தாங்கல.அவரும் ரெண்டு துண்டை எடுத்து சாப்பிட்டிருக்காரு… நல்லா இருக்கே அப்படினு யோசிச்சிருக்காரு. 

அதுக்குப்பிறக்கு, அவர் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிப்ஸை டெஸ்ட் பண்ணி பார்க்க எல்லாருக்கும் புடிச்சிருக்கு. Saratoga Chips அல்லது Potato Crunches அப்படிங்குற பெயர்ல அங்க ஆரம்பிச்சதுதான் இன்னைக்கு உலகம் முழுக்கவே உருளைக்கிழங்கு சிப்ஸா உலகத்தோட ஃபேவரைட் நொறுக்குத்தீணியாகி இருக்கு.  

இந்த சம்பவத்துக்கு முன்னாடியே சிலர் ஏறக்குறைய உருளைக்கிழங்கு சிப்ஸ்க்கான ரெசிப்பியை எழுதியிருக்காங்க. ஆனா, அந்த ரெசிப்பி எல்லாம் புராடக்டா மாறலை. நம்ம George Crum தான் அதை ஒரு பிரபலமான நொறுக்குத்தீணியா மாத்துறாரு.

Also Read : ஷவர்மா சாப்பிடலாமா.. அதிலிருக்கும் ஆபத்து என்ன?!

ஆனா, சிப்ஸ்களை ஹோட்டல்களில் மட்டுமே விற்க முடியும் என்கிற நிலை தான் அப்போ இருந்தது. அதை சுலபமா பாக்கெட்களில் அடைச்சு விற்க முடியாத நிலைதான் ஒரு அரை நூற்றாண்டுகாலம் இருந்தது.

மெழுகு காகிதத்தால் தயாரிக்கப்பட்ட காகிதப்பைகளில் உருளை சிப்ஸ்களை “Potato Chips Queen” என்று அழைக்கப்படும் Laura Scudder அடைத்து விற்க ஆரம்பிக்குறாங்க.

இன்னொரு பக்கம் 1932-ம் ஆண்டு ஒருத்தர் கார் டிரங்கில் வைத்து இந்த உருளை சிப்ஸ்களை ஊர் ஊராக் கொண்டு போய் விற்கிறார், அப்படியே சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளில் அடைச்சு இந்த சிப்ஸ்களை விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார். இவரோட பெயரை நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க…  அவர் பேர் Herman Lay. இவர் ஆரம்பிச்ச நிறுவனம் பேரை நான் சொல்லனுமா? 

சிப்ஸ் பாக்கெட்டுகளில் அடைச்சு விற்பனை செய்யும் போது அதனுடைய Crispiness & freshness-ம் குறைஞ்சிடுங்குறதுனால, அந்தக் கவர்களில் நைட்ரஜன் வாயுவை அதிகமாக நிரப்பி வைக்குறாங்க. இதனாலதான் நாம வாங்குற சிப்ஸ் பாக்கெட்டுகளில் காற்று அதிகமா இருக்கு. உருளை சிப்ஸ்ல ஆரம்பிச்சு வாழக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், குடைமிளகாய்னு எக்கச்சக்கமான சிப்ஸ்கள் இப்போ வந்திருச்சு… உங்களுடைய ஃபேவரைட் சிப்ஸ் என்னனு கமெண்ட் பண்ணுங்க. 

Also Read – சீரியஸ் வெங்கடேஷ் பட் சிரிக்க வைக்க… குக் வித் கோமாளி ஹிட் ஆன கதை!

4 thoughts on “சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் காத்து அடைக்கிறாங்க? – Chips கண்டுபிடிச்ச கதை!”

  1. you are in reality a good webmaster The website loading velocity is amazing It sort of feels that youre doing any distinctive trick Also The contents are masterwork you have done a fantastic job in this topic

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top