வெங்கல் ராவ்

`வடிவேலு இல்லைனா நான் இல்லை’ – நெகிழ்ந்த வெங்கல் ராவ்!

ஃபைட்டராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த் தொடங்கி பல ஹீரோக்களோடும் சண்டை செஞ்ச வெங்கல் ராவ், காமெடி அவதாரத்தில் விஸ்வரூபம் எடுத்தவர். வடிவேலு கேங்கின் முக்கியமான மெம்பரான வெங்கல் ராவுக்கு Tamilnadu Now Golden Carpet விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் குணச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடும் விதமாக `Tamilnadu Now Golden Carpet’  விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

வெங்கல் ராவ்
வெங்கல் ராவ்

வெங்கல் ராவ் – அசால்ட் ஆல்ரவுண்டர்

திரை அனுபவம்: 40 வருடங்களுக்கு மேல்
ஹிட் ஹிஸ்டரி: தகராறு தமிழில் களேபரம் செய்யும் காமெடியன்

தெலுங்கு கலந்த தமிழில் வடிவேலுவுடன் இவர் பேரம் பேசியதை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது.  விஜயவாடாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்த வெங்கல்ராவ், திருவிழாக்களில் சிலம்பம் சுற்றுவதை தொழிலாகக் கொண்டிருந்தார். ஃபைட்டர் ஆகும் ஆசையில் சென்னை வந்தவருக்கு தமிழ் தெரியாததால் யூனியன் மெம்பராகவே 9 வருடங்கள் ஆனது.

பல ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் 20 வருடங்களுக்கும் மேலாக ஸ்டண்ட்மேனாகப் பணியாற்றியவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என அனைவருடனும் சண்டை செய்திருக்கிறார். ‘பணக்காரன்’, ‘ராஜாதி ராஜா’ படங்களில் ரஜினிக்கு டூப் போட்டவர், பின் காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தகராறான தமிழையே தனக்குச் சாதகமாக மாற்றி எக்ஸ்பிரஷன்களை அள்ளித் தெளித்து ரகளை செய்தார்.

வில்லனுக்கு உண்டான தோற்றத்தில் இருந்தாலும் குழந்தைகளுக்கும் பிடித்த காமெடியனான வெங்கல் ராவுக்கு. தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது Tamilnadu Now Golden Carpet Awards. வெங்கல் ராவுக்கு Tamilnadu Now சார்பாக best character artist விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வெங்கல் ராவ்
வெங்கல் ராவ்

வெங்கல் ராவுக்கான விருதை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி கொடுத்து கௌரவித்தார். மேடையில் ஏறி மைக் பிடித்த வெங்கல்ராவ், `வடிவேலு இல்லைனா இங்க நான் இல்லவே இல்லை. எத்தனையோ படங்கள்ல ஃபைட்டரா நான் வேலை பார்த்திருந்தாலும், காமெடிதான் எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. வடிவேலுவாலதான் நான் இந்த இடத்துக்கு வந்து, அவார்ட் வாங்குற அளவுக்கு வந்திருக்கேன். ஆரம்பத்துல எனக்குத் தமிழ் சுத்தமா பேச வராது. அப்புறம் வடிவேல் சார்தான், `இவர் மொட்டை நல்லாயிருக்கு’னு சொல்லி சின்ன சின்ன காமெடி ரோல்கள் கொடுத்து, என்னை உருவாக்கி இந்த ஸ்டேஜூக்குக் கொண்டுவந்த அவருக்கு நன்றி. எனக்குத் தமிழ் பேசத் தெரியுமான்னா அது டவுட்டு… ஆனா பாடத் தெரியும்’ என்று சொல்லி எம்.ஜி.ஆரின் `விவசாயி… விவசாயி’, `ஆண்டாளு’ போன்ற பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Also Read – `பொண்டாட்டி பஞ்சாயத்து காமெடி சீன் நடிச்சுட்டு அழுதுட்டேன்!’ – பிரியங்கா ஷேரிங்ஸ்!

தனது ஐகானிக் காமெடியான தலைமேல் கை வைக்கும் காமெடியை தொகுப்பாளர் குரேஷியுடன் விளையாடிக் காட்டினார். அதேபோல், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் டயலாக்குகளான, `நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி, ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ போன்ற டயலாக்குகளை தெலுங்கில் மொழிபெயர்த்து அவர் பேச அரங்கம் அதிர்ந்தது. இதுபோல் நடிகர் வெங்கல் ராவ் மேடையில் செய்த இன்னும் பல சேட்டை மொமண்டுகளை முழுமையாகப் பார்க்க Tamilnadu Now யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் விருது விழா முழு எபிசோடை மறக்காமப் பாருங்க.

32 thoughts on “`வடிவேலு இல்லைனா நான் இல்லை’ – நெகிழ்ந்த வெங்கல் ராவ்!”

  1. Your commitment to sustainability is commendable. The eco-friendly practices you share are small steps that collectively make a big difference. Let’s save the planet together!

  2. Your dedication to continuous learning is admirable! Your insights into various topics reflect a curious mind. Thanks for being a source of intellectual stimulation.

  3. Your commitment to sustainable living is admirable! The eco-friendly choices you make inspire others to make positive changes. Let’s all be mindful of our impact on the planet.

  4. Your words of encouragement couldn’t have come at a better time. It’s like you knew what I needed to hear. Thank you for being a source of positivity.

  5. Your dedication to self-improvement is inspiring! The progress you’ve made is evident, and your journey motivates others to embark on their own paths of growth.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top