உலக புகையிலை ஒழிப்பு நாள் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் ஏன் கடைபிடிக்கப்படுகிறது… புகையிலை விஷயத்தில் Quitters ஏன் வின்னர்ஸ் என்றழைக்கப்படுகிறார்கள் தெரியுமா?
புகையிலை எதிர்ப்பு நாள் அல்லது புகையிலை ஒழிப்பு நாள் 1987ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புகையிலை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. புகைபிடிப்பதால், புற்றுநோய், நீரிழிவு நோய், சுவாசப் பிரச்னைகள் போன்றவை ஏற்படலாம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அந்த அமைப்பின் தரவுகளின்படி உலக அளவில் இருக்கும் 1.30 கோடி புகையிலை பயன்படுத்துவோரில் 70% பேருக்கு அதிலிருந்து மீளுவதற்கான உதவிகள் கிட்டுவதில்லை என்கிறது.
Smoking Quit பண்ண 7 வழிகள்!
திட்டமிடுங்கள்
புகையிலையின் பிடியிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தை, நடைமுறைப்படுத்தத் திட்டமிடுங்கள். நிகோடின் அடிக்ஷன் பற்றி தெரிந்துகொண்டு, அதிலிருந்து மீளும் வழிகள் குறித்து சிந்தியுங்கள்.
பொறுமை அவசியம்
புகை பிடிப்பதை நிறுத்தி ஒரு மாதத்தில் மீண்டும் அந்த பழக்கத்துக்கு ஆளாவது நடப்பதுண்டு. அதனால், பொறுமை ரொம்பவே முக்கியம். புகை பிடிப்பதில் இருந்து மீள்வது என்பது ஒருமுறை நடக்கும் நிகழ்வல்ல; தினசரி நாம் கடைபிடிக்க வேண்டிய வழக்கம்.
பிரசன்ட்தான் முக்கியம்
புகை பிடிப்பதை நிறுத்திய ஆரம்பகாலங்களில் நிகோடின் அடிக்ஷன் உங்கள் மூளையில் மைண்ட் கேம்களை ஆடும். மீண்டும் ஒருமுறையாவது புகைபிடித்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு. நிகழ்காலம் குறித்த சிந்தனைகள் மூலம் அதிலிருந்து நீங்கள் ஓவர்கம் பண்ணி வரலாம்.
ஸ்டே பாசிட்டிவ்
என்னால் புகை பிடிப்பதை நிறுத்தி முழுமையாக அதிலிருந்து வெளிவர முடியும் என பாசிட்டிவ்வாக உங்கள் புராக்ரஸை மதிப்பிடுங்கள். உங்கள் வேலையோ, குடும்பத்திலோ வரும் ஏற்ற, இறக்கங்கள் அந்த முடிவைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆல்கஹால் வேண்டாம்
புகைபிடிப்பதில் இருந்து மீள நினைக்கும் காலங்களில், ஆல்கஹாலை அறவே தவிர்த்து விடுவது நல்லது. ஆல்கஹாலும் புகைபிடித்தலும் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் போல் ஒன்றாகவே இருப்பார்கள் என்கின்றன ஆய்வுகள். அதேபோல், புகைபிடித்தலில் இருந்து மீண்ட நபர், ஆல்கஹால் டிசாடரால் பாதிக்கப்பட்டிருந்தால், மீண்டும் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
மனஅழுத்தம்
வேலை, குடும்பப் பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தைக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். புகையிலை அடிக்ஷனிலிருந்து மீளுகையில் உடல்நலன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மனநலனும் ரொம்பவே முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உதவி கேட்கத் தயங்காதீர்கள்
புகையிலைப் பழக்கத்தில் இருந்து மீள அரசு, தனியார் சார்பில் உதவி மையங்கள் நிறையவே இருக்கின்றன. அதேபோல், நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரிடம் இதுகுறித்து மனம்விட்டுப் பேசத் தயங்காதீர்கள்.
Also Read – உங்க ஃபேவரிட் செல்ஃபி நீங்க யாருனு சொல்லிடும் – செக் பண்ணிக்கோங்க!