மல்டி-டாஸ்கிங் நமது மன ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
மல்டி-டாஸ்கிங்
இன்றைய நகர்ப்புற வாழ்வியல் சூழலில் மல்டி-டாஸ்கிங் எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது கட்டாயம் என்ற நிலையில் இருக்கிறோம். முழு ஈடுபாட்டுடன் வேலையைச் செய்வதிலும், அதைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவும் மல்டி-டாஸ்கிங் அவசியம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதனால், புரடக்விட்டி அதிகரிக்கும் என்று பொதுவாக நம்பப்படும் நிலையில், நல்லதை விட கெட்டதே அதிகம் நடக்கிறது என்கின்றன ஆய்வுகள்.
ஸ்டான்ஃபோர்டு பல்கழைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்வது, மன ஆரோக்கியம் எனப்படும் மென்டல் ஹெல்த்தைக் கடுமையாகப் பாதிப்பதோடு, உங்கள் அன்றாட வாழ்வில் ஸ்ட்ரெஸ்ஸையும் அதிகப்படுத்தும் என்று தெரியவந்திருக்கிறது. உங்களின் மகிழ்ச்சிகரமான மனநிலைக்கு வேட்டு வைப்பதோடு, புரடக்டிவிட்டியையும் குறைத்து விடும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

மல்டி-டாஸ்கிங்கின் தீமைகள் என்னென்ன?
ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்யும்போது குறிப்பிட்ட வேலையில் முறையாகக் கவனத்துடன் செய்ய முடியாமல் போகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால், வேலை சரியாக முடியாமல் போகவே, அதனால் மன அழுத்தமும் அதிகமாவதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஏன் நீங்கள் அதைக் கைவிட வேண்டும்?
வேலையின் தரம்
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது, அவற்றை முடித்தால் போதும் என்கிற மனநிலைக்கு ஒரு கட்டத்தில் வந்துவிடுவீர்கள். இதனால், அந்த வேலையின் தரத்தைப் பற்றி சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
மன அழுத்தம்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்யும்போது, உங்களின் கவனம் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருக்கும். இதனால், அந்த வேலையின் தரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மன அழுத்தமும் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புரடக்டிவிட்டி
மல்டி டாஸ்கிங் புரடக்விட்டியை அதிகரிக்கும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், உண்மை என்னவோ, அதற்கு நேரெதிர். இதனால், பல நேரங்களில் சின்ன சின்ன வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போய்விடும். முழுமையான ஈடுபாடு காட்ட முடியாமல் போவதால், ஒரு வேலையை நமது வழக்கமான வேகத்துடன் செய்ய முடியாமல் போய்விடும். இதனால், தாமதம் ஏற்படுவதுடன் அதுதொடர்பான பல்வேறு சிக்கல்களையும் எதிர்க்கொள்ள நேரிடும்.

கவனச் சிதறல்
பல்வேறு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், உங்களால் ஒரு வேலையில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது. இப்படியான சூழலில், உங்களால் புதிதாக ஒரு தீர்வைக் கண்டடைவது கடினமாக இருக்கும். ஒரு விஷயத்தில் போதுமான கவனம் செலுத்த முடியாமல் போவதால், உங்களுடைய கிரியேட்டிவ் திங்கிங்கும் தடைபடும்.
மறதி
தொடர்ச்சியாக மல்டி-டாஸ்கிங் செய்வது ஒரு கட்டத்தில் உங்களின் நினைவுத் திறனைப் பாதிக்கும். இதனால், எந்த வேலையை முக்கியத்துவம் கொடுத்து முதலில் செய்வது என்கிற குழப்பத்துக்கு வித்திட்டு, மறதியை நோக்கிச் செல்வீர்கள். கலிஃபோர்னியா சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் (UCSF) நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் நினைவுத் திறன் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துவதாகச் சொல்கிறது.
Also Read – எப்போதும் டயர்ட் ஆக உணர்கிறீர்களா… இந்த 5 காரணங்களாக இருக்கலாம்!
0 Comments