நம்ம மனசுக்குப் பிடிச்ச இடத்துக்கு Solo Trip போற சுகமே அலாதியானதுதான்… அப்படியான ஒரு டிரிப்பை நீங்க பிளான் பண்ணும்போதும், அந்த இடத்துக்குப் போன பிறகும் என்னவெல்லாம் நோட் பண்ணனும்னு இந்த கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.
Solo Trip
டிராவல் பண்றதுல ஆர்வம் அதிகம் இருக்கவங்க, தங்களோட முதல் Solo Trip-ஐ ஆன்மிகப் பயணமாகவே மேற்கொள்வதாகச் சொல்கிறார்கள். சோலோ டிரிப் மூலமா ஒருத்தர், அவரைப் பத்தியே அதிகம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறதாவும் சொல்றாங்க.. சுதந்திரம், சுய பரிசோதனை, புதிய முயற்சி, அலாதி அனுபவம் என சோலோ டிரிப்புக்கு எத்தனையோ காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன.
ஏன் Solo Trip முக்கியம்?
உங்கள் மனதுக்கு நெருக்கமான அல்லது மிகவும் பிடித்தமான இடத்துக்கு நீங்கள் தனியாகப் பயணிக்கும்போது, அதில் எத்தனையோ சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. நீங்கள் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்குச் செல்ல முடியும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய முடியும் என்பதோடு, உங்களுக்கான ஆக்டிவிட்டிகளையும் சேலஞ்ச்களையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். தவறுகள் செய்து, அதன் படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக சோலோ டிரிப்பில் நீங்கள் சுதந்திர உணர்வை முழுமையாக அனுபவிக்க முடியும். அந்த ஃபீலிங் கொடுக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும்…
இப்படியான Solo Trip பிளான் பண்ணும்போது பாதுகாப்பு நடைமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். சோலோ டிரிப்புக்கான 11 டிப்ஸ்களைப் பற்றிதான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
டெஸ்டினேஷன்
தனியாக ஒரு டிரிப் பிளான் பண்ணும்போது, நீங்கள் போற இடத்தைப் பத்தின தகவல்களை முழுமையாகப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க. உள்ளூர் மக்கள், உணவு, போக்குவரத்து, தங்குமிடம், பார்க்க வேண்டிய இடங்கள், அதற்கான வழிமுறைகள் என அந்த இடத்தைப் பற்றி முடிந்தவரை எல்லா தகவல்களையும் தெரிஞ்சுக்கிட்டு டிரிப்பை பிளான் பண்றது ரொம்ப முக்கியம்.
தங்குமிடம்
தனியாகச் செல்லும்போது, நீங்கள் தங்குவதற்கு சரியான மற்றும் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்வது அவசியம். அந்த இடத்தில் 24 மணி நேர Front Desk இருக்கிறதா, பாதுகாப்பு நடவடிக்கைகள் என முக்கியமான காரணிகளை அலசி ஆராய்ந்து, தங்குமிடத்தைத் தேர்வு செய்யுங்கள். தனியாகப் பயணிக்கும்போது இரவு நேரங்களில் அந்த ஹோட்டலுக்கு வெளியே, அவர்கள் கதவைத் திறப்பதற்காகக் காத்திருக்கும் நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும். அதேபோல், அந்த இடத்தில் இருக்கும் வசதிகள் பற்றிய தகவல்களையும் விசாரித்து விட்டு புக் செய்வது முக்கியம்.
கான்ஃபிடன்ட்
சோலோ டிராவலர்களுக்கு வழித்துணை நம்பிக்கைதான் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். குழப்பான நிலையில் இருந்தால், அது உங்களைத் தனித்துக் காட்டும். இதனால், தேவையில்லாத கவனம் உங்கள் மீது விழ வாய்ப்பிருக்கிறது. இதனால், திருட்டுல் ஈடுபடுவோர் அந்த ஊரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை பரிசோதிக்கும் பொருட்டு பேச்சுக்கொடுக்க வாய்ப்பிருக்கிறது. நம்ப வைத்து உங்களிடமிருக்கும் பொருட்களை திருடும் அபாயமும் இருக்கிறது. அதனால், உங்கள் பயணத்தின்போது எப்போதும் நம்பிக்கையோடு செயல்படுங்கள். இது தேவையில்லாத அச்சத்தில் இருந்தும் பிரச்னைகளில் இருந்தும் உங்களைக் காப்பாற்றும்.
அடையாள ஆவணங்கள்
உங்களது முகவரி, அடையாளச் சான்றுகளை எப்போதும் உங்களுடன் வைத்திருப்பது அவசியம். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் வழங்கப்படும் அடையாள அட்டைகளை, லோக்கல் அதிகாரிகள் கேட்கும்போது மறக்காமல் எடுத்துக் காட்டுங்கள்.
Blend the Crowd
ஒரு ஊருக்குப் பயணிக்கும்போது, அங்கிருக்கும் மக்களோடு மக்களாகக் கலந்துவிடுவது நல்லது. அங்கிருக்கும் மக்கள் உடுத்தும் உடைகள் பற்றி விவரங்களை சேகரிப்பதோடு, ஒரு டூரிஸ்டாகத் தெரியாமல் இருக்க என்ன மாதிரியான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு, அதை நடைமுறைப்படுத்த முயற்சியுங்கள். இது பலவகைகளிலும் உங்களுக்குக் கைகொடுக்கும்.
அப்டேட்
சோலோ டிரிப் போக வேண்டும் என நீங்கள் முடிவெடுத்தாலும், உங்களின் டிராவல் பிளான் தொடங்கி நீங்கள் பயணிக்கும் முறை போன்ற சில அடிப்படையான தகவல்களை உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமாவது அவ்வப்போது பகிர்ந்துகொள்ளுங்கள்.
பணம்
என்னதான் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் பெரும்பாலான இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றாலும், குறிப்பிட்ட அளவு பணத்தை எப்போதும் உங்களோடு வைத்திருங்கள்.
லக்கேஜ்
இப்படியான பயணங்களின்போது விலை மதிப்புமிக்க பொருட்களை உங்களோடு எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் உள்ளிட்டவைகள் முற்றிலும் தவிர்த்துவிடுவது நலம்.
எச்சரிக்கை உணர்வு
சோலோ டிரிப்பின்போது உங்களைச் சுற்றியிருக்கும் சூழல் குறித்து எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு இருப்பது அவசியம். அசாதார சூழல் ஏற்படுவதாக உணர்ந்தால், முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இது வழிவகுக்கும். `Always trust your insticts’.
டைட் ஷெட்யூல் வேண்டாமே!
சோலோ டிரிப்பில் ஓய்வெடுக்கவும், உங்க மைண்ட் ரீ-சார்ஜ் ஆகவும் சரியான அளவு ஓய்வு நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். பயணத்தின்போது ஓரிடத்தில் இருந்து அடுத்த இடம், அங்கிருந்து இன்னொரு இடம் என டைட்டான ஷெட்யூல் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள். அப்படியான பிளானிங் சோலோ டிரிப்புக்கான மகிழ்ச்சியையே குலைத்துவிடும் அபாயம் இருக்கிறது.
Plan B
எப்போதும் பிளான் பி ஒன்றை வைத்துக் கொண்டே இருங்கள். ஒரு புதிய இடத்துக்குச் செல்கையில், அங்கு நீங்கள் திட்டமிட்டபடியே எல்லாம் நடக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இப்படி இல்லையென்றால், அப்படி… அது இல்லையென்றால் இது என இரண்டு, மூன்று திட்டங்களை முன்யோசனையாக வைத்துக் கொண்டே பயணிப்பது தேவையற்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவும்.
Happy Solo Trip மக்களே!
Also Read – தமிழ்நாட்டின் பெஸ்ட் ரோட் ட்ரிப் பிளேசஸ்… இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க ரைடர்ஸ்!
0 Comments