இன்றைக்கு பாலிவுட் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரைப்பட ரசிகர்களும் மிஸ் செய்யும் முக்கிய நடிகர்களில் ஒருவர் இர்ஃபான் கான். அவரைப் பற்றிய 8 சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்…
-
1 கிரிக்கெட்தான் இர்ஃபானுக்கு புடிக்கும்!
படங்களில் நடிப்பது இர்ஃபான் கானின் திட்டமாக இல்லை. கிரிக்கெட் விளையாடுவதில்தான் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், அவருடைய பெற்றோருக்கு அவர் கிரிக்கெட் விளையாடுவதில் விருப்பம் இல்லை.
-
2 ஏ.சி மெக்கானிக்காக முதல் வேலை!
இர்ஃபான் கான் மும்பை வந்ததும் முதலில் ஏ.சி பழுதுபார்க்கும் வேலை செய்ய தொடங்கியுள்ளார். அவர் முதலில் ஏ.சி பழுது பார்த்தது பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணாவின் வீட்டில்!
-
3 சலாம் பாம்பே!
1988-ல் அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலாம் பாம்பே திரைப்படத்தின் மூலம் இர்ஃபான் அறிமுகமானார். அவரது உயரம் பிரச்னையாக இருந்ததால் படத்தில் அவரது பங்கு குறைக்கப்பட்டதாம்.
-
4 இர்ஃபானின் திருமணம்!
பிரபல எழுத்தாளர் மற்றும் சக என்.எஸ்.டி மாணவரான சுதாபா சிக்தர் என்பவரை 1995-ல் இர்ஃபான் கான் திருமணம் செய்து கொண்டார்.
-
5 தி வாரியர்!
தான் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறாததால் ஒரு தருணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகமாக செய்துகொண்டிருந்தார். எனினும், ஆசிப் கபாடியா இயக்கிய `தி வாரியர்’ திரைப்படம்தான் அவருடைய மனதை மாற்றியது. அதன்பின் சினிமா குறித்த அவரது அணுகுமுறை மாற, வேறொரு பரிணாமத்தில் வசீகரிக்கத் துவங்கினார்.
-
6 Iffran khan-ல் `R' எக்ஸ்ட்ராவாக இருப்பதன் ரகசியம்!
Irrfan khan பெயரில் கூடுதலாக ஒரு `R' இருப்பது நியூமராலஜி அடிப்படையில் இல்லை. எக்ஸ்ட்ரா ஒரு `R’-உடன் தன் பெயர் உச்சரிக்கப்படுவதை அவர் விரும்பியதால், 2012-ல் மாற்றிக் கொண்டார். அதே சமயம் இந்தப் பெயருக்காகவே அமெரிக்க விமான நிலையத்தில் ஒருமுறை தடுப்புக் காவல் விசாரணைக்கு ஆளாகினார்.
-
7 உயரமான மனிதர்!
சினிமா துறையினரில் உயரமான மனிதர்களில் இர்ஃபானும் ஒருவர். அவருடைய உயரம் 6.1 ft.
-
8 லஞ்ச் பாக்ஸ்தான் முக்கியம்!
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய `Interstellar’ படத்தில் மிகவும் முக்கியமான காதாபாத்திரம் ஒன்றை இர்ஃபான் கானுக்கு வழங்க அவர் முன் வந்துள்ளார். ஆனால், தான் ஏற்கெனவே ஒப்பந்தமான லஞ்ச் பாக்ஸ் மற்றும் டி டே ஆகிய திரைப்படங்களில் நடிப்பதில் உறுதியாக இருந்ததால் Interstellar படத்தில் நடிப்பதை மறுத்துவிட்டார் இர்ஃபான்.
ALSO READ : ஆண்கள் தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்! #ScientificallyProved
0 Comments