முந்தியெல்லாம் நம்ம அக்காக்கள் அம்மாகிட்ட ரெசிப்பி கேட்டு நோட்டுல எழுதி வச்சி சமைப்பாங்க. இப்போ என்ன டிஷ் பண்ணனுமோ யூடியூபை தட்டினால் வீடியோவாக வந்து விழுகிறது. ருசியா சமைக்கிறதைவிட இப்போ வெரைட்டி காட்டுறதுதான் ரொம்ப முக்கியம். வகை வகையா சமைக்கணும்னு உங்களுக்கும் ஆசை இருக்கா? இந்த 7 சேனல்களை சப்ஸ்கிரைப் பண்ணி பார்த்தா போதும். நீங்களும் ஆகலாம் கிச்சன் சூப்பர் ஸ்டார்.
-
1 Madras Samayal
ஊரில் எந்த உணவாக இருந்தாலும் அட்டகாசமாக செய்து அசத்தும் ஒரு அக்கா இருக்குமே. அந்த அக்காதான் 'மெட்ராஸ் சமையல்' ஸ்டெஃபி. யூடியூபில் 40 லட்சம் பேர் இவருடைய சேனலை பின்தொடர்கிறார்கள். இதில் குடும்பத்தலைவிகள் மட்டுமில்லை நிறைய பேச்சிலர் பசங்களும் உண்டு. காரணம், மிருதுவாக இட்லி சுடுவதில் தொடங்கி மட்டன் பிரியாணி வரை எல்லா ரெசிப்பிகளையும் சிம்பிளாக சொல்லித் தருவதில் இவர் கில்லி. இவருடைய முட்டை குழம்பு ரெசிப்பிக்கு மட்டும் ஒரு கோடியே 20 லட்சம் வியூஸ்.
-
2 Venkatesh bhat's idhayam thotta samayal
சச்சினடமிருந்தே கிரிக்கெட் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும். இணைய உலகத்தில் அதுவும் சாத்தியமே. குக் வித் கோமாளி ஜட்ஜ், அக்கார்டு ஹோட்டலின் சி.இ.ஓ, மாஸ்டர் செஃப் வெங்கடேஷ் பட் ஒரு யூ-டியூப் சேனல் வைத்திருக்கிறார் (லாக்டவுனுக்கு ஜே!). ஒவ்வொரு டிஷ் கற்றுத் தரும்போதும் இவர் சொல்லும் நுணுக்கங்கள் அவரது இத்தனை ஆண்டுகால அனுபவத்தைச் சொல்கிறது. ப்யூர் வெஜிடேரியன் சேனல். எந்த ரெசிப்பி சொன்னாலும் அதில் ஒரு குட்டி சீக்ரெட் வைத்திருப்பது இவரது ஸ்பெஷல். அதனால்தான் 5 நிமிடத்தில் செய்யும் சட்னி ரெசிப்பியையே 50 லட்சம் பேர் பார்த்தார்கள்.
-
3 Home Cooking Tamil
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்கும் டிஷ்களை வீட்டிலேயே செய்ய முடிஞ்சா எப்படி இருக்கும். அதற்கான சேனல்தான் இது. Home Cooking Show (ஆங்கிலம்), Home Cooking Tamil என இரண்டு குக்கிங் சேனல்களை நடத்துகிறார் ஹேமா சுப்ரமணியன். மதுரை பன் பரோட்டாவில் தொடங்கி, வட இந்திய ஆலு பராத்தா, இத்தாலியா பாஸ்தா வரை எல்லா ஏரியாவும் இவருக்கு அத்துப்படி. வெஜ், நான் வெஜ், ஸ்டார்ட்டர், டெசர்ட் என அனைத்தும் கத்துக்கலாம் இந்த சேனலில்.
-
4 Gomathi's Kitchen
காய்கறியே இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? பருப்பே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி? என கோமதியின் சமையலறையே வித்தியாசமாக இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஶ்ரீரங்கத்து கோமதி எம்.பி.ஏ முடித்தவர். நேந்திரம் சிப்ஸில் தொடங்கி தீபாவளி விருந்து வரை 200 வகையான ஸ்னாக்ஸ், 100க்கும் மேல் பிரேக் பாஸ்ட் ரெசிப்பி, 50க்கும் மேல் நான்-வெஜ் குழம்பு என கலந்துகட்டி இருக்கிறது இவருடைய வீடியோக்கள். 1.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளது இந்த சேனல்.
-
5 Amma samayal Videos
'பாத்திரம் வச்சிக்கோங்கம்மா', ' எண்ணெய் 4 ஸ்பூன் ஊத்திக்கோமா' என்று ஜெயந்தி அம்மா சொல்லும் மாடுலேசன், நம் அம்மாவே பக்கத்தில் நின்று சொல்லித் தருவதுபோல் இருப்பதுதான் இந்த சேனலின் அழகு. இவர் சொல்லும் ரெசிப்பிகளை முயற்சித்தவர்களும் கமெண்டில் அம்மா அம்மா என்று உருகுகிறார்கள். மூன்று வருடங்களில் 700 ரெசிப்பிகளை பதிவேற்றியிருக்கிறார். 25 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட ஜெயந்தியின் ஒன்றரை கோடி வியூஸ் குவித்த டாப் ரெசிப்பி எது தெரியுமா? சிக்கன் பிரியாணி.
0 Comments