பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக பிரதமர் மோடி இன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெற்றார். வேளாண் சட்டம் கடந்து வந்த பாதையினை பார்க்கலாம்.
ஜூன் 5, 2021 – வேளாண் சட்டம் அறிமுகம்.
செப்டம்பர் 14, 2020 – பாராளுமன்றத்தில் அறிமுகம்.
செப்டம்பர் 17, 2020 – லோக் சபாவில் நிறைவேற்றம்.
செப்டம்பர் 18, 2020 – வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி ராஜினாமா.
செப்டம்பர் 20, 2020 – ராஜ்ய சபாவில் நிறைவேற்றம்.
செப்டம்பர் 24, 2020 – விவசாயிகள் 3 நாள் ரயில் மறியல்.
செப்டம்பர் 25 – அகில இந்திய அளவில் விவசாயிகள் போராட்டத்துக்கு அழைப்பு.
செப்டம்பர் 27, 2021 – குடியரசு தலைவர் ஒப்புதல்.
நவம்பர் 25, 2020 – `டெல்லி சலோ’ படையெடுத்தனர்.
நவம்பர் 26, 2020 – டெல்லி எல்லையில் விவசாயிகள் தடுப்பு.
நவம்பர் 28, 2020 – விவசாயிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை.
டிசம்பர் 03, 2020 – விவசாயிகளுடன் அரசு 1-ம் கட்ட பேச்சுவார்த்தை.
டிசம்பர் 05, 2020 – விவசாயிகளுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை.
டிசம்பர் 08, 2020 – விவசாயிகள் தேசிய அளவில் போராட்டம் நடத்த அழைப்பு.
டிசம்பர் 11, 2020 – BKU உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
டிசம்பர் 21, 2020 – விவசாயிகள் ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டம் இருந்தனர்.
டிசம்பர் 30, 2021 – விவசாயிகளுடன் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை.
ஜனவரி 12, 2021 – வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஜனவரி 13, 2021 – வேளாண் சட்ட நகல்களை தீ வைத்து எரிக்கும் போராட்டம்.
ஜனவரி 26, 2021 – டெல்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி.
பிப்ரவரி 02, 2021 – டெல்லியைச் சுற்றி விவசாயிகளுக்கு எதிராக முள் வேலிகள் அமைப்பு.
பிப்ரவரி 05, 2021 – டூல்கிட் வழக்குப் பதிவு.
பிப்ரவரி 06, 2021 – சக்கரங்களை நிறுத்தும் போராட்டம்.
மார்ச் 6, 2021 – 100-வது நாள் போராட்டம்
மார்ச் 8, 2021 – துப்பாக்கி சூடு நடைபெற்றது.
மே 27, 2021 – விவசாயிகள் கறுப்புநாளாக கடைபிடித்தனர்.
ஜூன் 5, 2021 – Sampoorn Krantikari தினம் கடைபிடிப்பு
தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
நவம்பர் 19 , 2021 – வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
Also Read : Farm Laws: `நாங்க விதை போட்டிருக்கிறோம்’ – வேளாண் சட்டம் வாபஸ்; டெல்லி விவசாயிகளின் ரியாக்ஷன் என்ன?