சஞ்சனா கணேசன் குறித்த 5 சுவாரஸ்யத் தகவல்கள்
-
1 மிஸ் இந்தியா ஃபைனலிஸ்ட்
மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்த சஞ்சனா, `2012 Femina style Diva' போட்டியில் கலந்துகொண்டு இறுதிச் சுற்று வரை சென்றார். அதைத் தொடர்ந்து 2013-ல் `Femina Miss India Pune'போட்டியிலும் இறுதிச்சுற்று வரை தேர்வாகினார். அதே ஆண்டு நடைபெற்ற `Femina Officially Gorgeous’ வெற்றிவாகை சூடினார்.
-
2 டிவி தொகுப்பாளினி
எம்.டிவி-யின் ஸ்பிளிட்ஸ் வில்லா சீசன் - 7 மூலம் 2014ம் ஆண்டு டிவியில் சஞ்சனா அறிமுகமானார். அந்தப் போட்டியில் கலந்துகொண்ட அஸ்வினி கௌல் உடன் காதலில் விழுந்ததாக அப்போதே பேசப்பட்டது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் இருக்கும் தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் சஞ்சனா கணேசன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் முக்கிய தொகுப்பாளினியான இவர், அந்த சேனலுக்காகப் பல்வேறு விளையாட்டு துறை பிரபலங்கள், நிர்வாகிகளைப் பேட்டி கண்டிருக்கிறார். `சச்சின், மகேந்திர சிங் தோனி பேட்டிகள் எப்போதும் ஸ்பெஷல்’ என்பார். இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் பணியாற்றிய இவர், மேட்ச் பாயிண்ட், சீக்கி சிங்கிள்ஸ் உள்ளீட்ட ஷோக்களைத் தொகுத்து வழங்கினார். 2020 மகளிர் உலகக் கோப்பை டி20 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2020 ஐபிஎல் தொடரிலும் பணியாற்றினார். பிசிசிஐ சார்பில் 2019-ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பும்ராவை சஞ்சனா பேட்டியெடுத்திருக்கிறார். -
3 கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கான நிகழ்ச்சி
ஐபிஎல் அணிகளுள் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் அதிகாரப்பூர்வ தொகுப்பாளி சஞ்சனா. 2020 ஐபிஎல் சீசனின் போது ரசிகர்கள் கொல்கத்தா அணி குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட `The Knight Club’ என்ற நிகழ்ச்சியை சஞ்சனா தொகுத்து வழங்கினார். இது கே.கே.ஆர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கிரிக்கெட் தவிர பேட்மிண்டன், கால்பந்து தொடர்களிலும் தொகுப்பாளினியாகப் பணியாற்றியிருக்கிறார். ஐபிஎல் மற்றும் ஐஎஸ்எல் ஏலங்களையும் இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
-
4 ஏஜ் ஃபேக்டர்
சஞ்சனா கணேசன் பிறந்த நாள் 6 மே 1991. பும்ராவின் பிறந்த நாள் 6 டிசம்பர் 1993. சஞ்சனா தன்னைவிட இரண்டு வயது இளையவரான பும்ராவைக் கரம்பிடித்திருக்கிறார். சச்சின், கும்ப்ளே வரிசையில் வயது மூத்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார் பும்ரா.
-
5 தமிழ்நாடு கனெக்ஷன்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செட்டிலாகிவிட்ட சஞ்சனா கணேசனின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மேலாண்மைத் துறையில் முன்னணியில் இருக்கும் அவர், அலானா இன்ஸ்டிடியூர் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் இயக்குநராவார். தாய் சுஷ்மா கணேசன், வழக்கறிஞராகவும் ஃபிட்னெஸ் பயிற்சியாளராகவும் இருக்கிறார். தாய் சுஷ்மா மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தங்கை ஷீத்தல் கணேசன், பல் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.
0 Comments