நடிக்க ஆரம்பித்த நான்கே ஆண்டுகளுக்குள் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று துறைகளிலுமே தன்னுடைய வருகையைப் பதிவு செய்துவிட்டார். `முகமூடி’க்குப் பிறகு தமிழில் எந்தப் படமும் கமிட்டாகாத நிலையில் தற்போது விஜய் நடிக்கும் 65-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அவரைப் பற்றி சில தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
-
1 டாப் ஹீரோஸ்
2012-ல் இருந்து தற்போது வரை 11 படங்களில் மெயின் ரோலிலும் ஒரு படத்தில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். இவர் நடித்த 11 படங்களுமே அந்தந்த துறையைச் சேர்ந்த டாப் ஹீரோக்களுடன்தான் நடித்துள்ளார். அறிமுகமான முதல் படமே மிஷ்கின் - ஜீவாவுடன் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து `ஒக்க லைலா கோஸம்' படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதன் பிறகு பாலிவுட்டின் டாப் ஸ்டாரான ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து தெலுங்கில் 5 படங்களில் நடித்தார். அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு போன்ற டோலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். ராம் சரன் - சமந்தா நடிப்பில் வெளியான `ரங்கஸ்தலம்' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியிருப்பார்.
-
2 ஃபேன் பேஸ்
சமூக வலைதளங்களில் இவருக்கு மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 மில்லியன் ஃபாலோயர்கள், ட்விட்டர் பக்கத்தில் 3.1 மில்லியன் ஃபாலோயர்கள், ஃபேஸ்புக்கில் 6.8 மில்லியன் ஃபாலோயர்கள் என தனக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார் பூஜா. சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் போஸ்ட்டுகளுக்கு லட்சத்தைக் கடக்கிறது லைக்குகள். மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2009 மற்றும் 2010 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டார். 2009-ல் ஏற்பட்ட இடையூறு காரணமாக 2010-ம் ஆண்டு மீண்டும் மிஸ் இந்தியா போட்டிக்கு விண்ணப்பித்தார். 2010-ல் மிஸ் இந்தியாவின் 2-வது ரன்னர்அப் ஆனார்.
-
3 ஒரே பாட்டு ஓஹோனு ஹிட்டு
அல்லு அர்ஜுனோடு இவர் ஜோடி சேர்ந்து நடித்த ப்ளாக்பஸ்டர் படம் `அலா வைகுந்தபுரம்லோ'. 2020-ல் வெளியான இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி 260 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற `புட்ட பொம்மா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. அதுவும் டிக் டாக் செயலி உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடதவர்களே இல்லையெனலாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான வார்னர், இந்தப் பாடலுக்கு நடனமாடிய பின்னர், உலக லெவல் டிரெண்டானது. ஒரிஜினல் வெர்ஷனில் வரும் டான்ஸ் ஸ்டெப் போலவே வார்னர் தனது குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். பல மில்லியன் பார்வைகளையும், லைக்ஸ்களையும் அள்ளியிருந்தது அந்த வீடியோ.
-
4 லைன் அப்
இவர் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த அடுத்தடுத்த படங்களிலேயே உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பல்வேறு படங்களில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். நாகார்ஜுனின் மகனான அகில் நடிக்கும் `Most eligible bachelor', பிரபாஸ் நடிப்பில் டோலிவுட், பாலிவுட் என இரு மொழிகளிலும் தயாராகிக்கொண்டிருக்கும் `ராதே ஷ்யாம்', ரன்வீர் சிங் நடிக்கும் `சர்கஸ்', சிரஞ்சீவி - ராம் சரண் நடிக்கும் `ஆச்சார்யா' என லைன் அப்பில் இருக்கும் அனைத்துமே டாப் ஹீரோக்களின் படங்கள்தான். இந்த வரிசையில் நெல்சன் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் `விஜய் 65'யிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
0 Comments