ஸ்கூல்ல, காலேஜ்ல, ஆபிஸ்ல, பக்கத்துவீட்லனு நம்ம எல்லாருக்குமே ஒரு க்ரஷ் இருக்கும். இந்த பையன் நம்மகிட்ட ஃப்ரெண்டா இருந்தா நல்லாருக்குமே.. இந்த பொண்ணு நம்மகிட்ட ஃப்ரெண்டா இருந்தா நல்லாருக்குமேனு நமக்குத் தோணும். ஆனா அவங்ககிட்ட என்ன பேசுறது, எப்படி பேசுறதுனு தெரியாம பெரும்பாலும் வாட்சிங் மோடுலதான் இருப்போம். இந்த 7 டிப்ஸை அப்படியே ஃபாலோ பண்ணீங்கன்னா உங்க க்ரஷ் உங்களுக்கு ஃப்ரெண்ட் ஆகிடுவாங்க. ஆரம்பிக்கலாங்களா?
-
1 முதல்ல பேசணும்
வாட்ஸப்ல ஆன்லைன் காட்டும். இன்ஸ்டால போட்டோ பார்ப்போம். எதிர்லயே உக்காந்திருப்பாங்க. ஒரு ஹாய் சொன்னா ஒண்ணும் ஆகிடாது. ஆனா உள்ளுக்குள்ள ஒரு உதறல் இருக்கும். வைரமுத்து சொன்ன உருண்டை வயித்துக்குள்ள உருண்டு நம்மளை சொல்ல விடாது. என்ன பெருசா நடந்துறப்போகுது முறைச்சாலும் பரவால்லனு தைரியமா ஒரு ஹாய் போட்டு வைக்கிறதுதான் இந்த ஆபரேசன்ல முதல் ஸ்டெப். எடுத்ததுமே லவ்வர் இருக்கானு கேட்க முடியாது ஆனா உறியடி ஹீரோ மாதிரி லப்பர் இருக்கானு முதல்ல ஆரம்பிக்கலாமே.
-
2 பெர்சனல் பேசுவோம்.
பேச ஆரம்பிச்சதும் நம்ம பயலுக பண்ற முதல் தப்பு சாப்பிட்டியா… தூங்குனியானு கேட்டு ஆப்போசிட்ல இருக்குறவங்களை டார்ச்சர் பண்றது. இதனால பத்து பைசா பிரயோஜனமில்ல. இந்த மாதிரி டெம்ப்ளேட் கேள்விகளை கொஞ்சம் ஓரமா வச்சிட்டு பெர்சனலா பேச ஆரம்பிங்க. அவங்க ஊர் என்ன? அவங்க தங்கச்சி எங்க வேலை பாக்குறாங்க? அவங்களுக்கு பிடிச்ச ஹீரோ யாரு? இந்த மாதிரி கேள்விகளை கேட்க ஆரம்பிங்க. அதுக்காக எடுத்ததும் ரொம்ப பெர்சனலா கேட்காதீங்க. அப்பறம் காண்டாகிடுவாங்க. பொதுவாவே யார்கிட்டயாச்சும் நம்ம பெர்சனல் விஷயங்களை ஷேர் பண்ணிக்கிட்டோம்னா இயல்பாவே அவங்கமேல நமக்கு ஒரு Bonding வர ஆரம்பிச்சுடும். அதான் சைக்காலஜி.
-
3 பொதுவான விஷயங்களை தேடுங்க.
எதாவது ஒரு விஷயம் உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா இருக்கும். அது என்னனு தேடுங்க. உனக்கும் இந்த படம் பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும். சேம் பிஞ்ச். அப்படினு கிள்ளிக்குற மாதிரி ஒரு மொமண்ட். நமக்கு பிடிச்ச ஒண்ணு இன்னொருத்தருக்கு பிடிக்கும்னா அவங்களையும் நமக்கு பிடிக்கும்ங்குறதுதான் இதுல இருக்குற லாஜிக். ஃபேவரிட் உணவா இருக்கலாம். ஒரு நடிகரா இருக்கலாம். ஆபிஸ் விஷயமாக்கூட இருக்கலாம். உங்க ரெண்டு பேரையும் இணைக்கிற அந்த புள்ளியை தேடுங்க.
-
4 மனதார பாராட்டுங்க.
இது கொஞ்சம் ஓவரா இருக்கும். ஆனா கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும். உங்க கிரஷ்ஷை மனதாரப் பாராட்டுங்க. அதுக்காக இயல்புலயே கியூட்டா இருக்குற ஒருத்தர்கிட்ட நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்கனு சொன்னா ‘டோக்கன் நம்பர் 1342’ னு உங்களுக்கும் ஒரு டோக்கனை குடுத்து கியூல நிக்க வச்சிருவாங்க. நீங்க சொல்றது ரொம்ப Unique-ஆ இருக்கணும். மத்தவங்க கவனிக்காத சில சின்ன விஷயங்களை தேடி கண்டுபிடிச்சு ஒரு பாராட்டா சொன்னீங்கனா அது அவங்களுக்கு மறக்கவே மறக்காது.
-
5 ஒப்பீனியன் கேளுங்க
ஒப்பீனியன் கேளுங்க. அதுக்காக ‘இந்திய பொருளாதாரம் அதளபாதாளத்துல போயிக்கிட்டு இருக்கே. அது பத்தி என்ன நினைக்கிறீங்க?’னு ரொம்ப டீப்பா போகத் தேவையில்லை. சிம்பிளான ஒப்பீனியன் கேளுங்க. உதாரணத்துக்கு ‘இந்த கருப்பு சட்டை எனக்கு எப்படி இருக்கு?’,’இந்த சுடிதாருக்கு இந்த கம்மல் மேட்ச் ஆகுமா?’ அப்படினு சின்ன சின்னதா இருக்கணும். ரிலேசன்ஷிப்லயும் ஃப்ரெண்ட்ஷிப்லயும் இந்த ஒப்பீனியன்தான் கீ ஃபேக்டர். நல்லாருக்கு, நல்லாயில்லை, புடிச்சிருக்கு, புடிக்கலைங்குறதை க்ளோஸ் ஃப்ரெண்ட்கிட்டதான் ஓப்பனா சொல்லமுடியும்.
-
6 பேசுவதை கவனிங்க.
‘அட நம்ம சொல்றதையும் காதுகொடுத்து கேட்க ஒரு ஆள் இருக்குப்பா’ அப்படிங்குறதுதான் அவங்களுக்கு உங்க மேல ஒரு நம்பிக்கையை கொடுக்கும். நிறைய பேச வைக்கும். நிறைய பேசப்பேசத்தான் நட்பு வளரும். எல்லார்கிட்டயும் சொல்றதுக்கு 1008 விஷயம் இருக்கு. அதை கேட்குறதுக்குதான் ஆள் இல்ல. ஒரு ஃப்ரெண்டா நம்ம கடமை அவங்க சொல்றதை முழு ஆர்வத்தோட கேட்கிறதுதான். அதனால அவங்க பேசுவதை கேளுங்க.
-
7 ஞாபகம் வச்சிக்கணும்.
இந்த இடம்தான் த்ரில்லிங்கான இடம். உங்க க்ரஷ் பேசும்போது அவங்க சொல்ற ஆளுங்களோட பேரு, இடத்தோட பேரு இதுமாதிரி சின்ன சின்ன டீட்டெய்ல்ஸை ஞாபகம் வச்சிக்கோங்க. அடுத்த முறை பேசுறப்போ, அன்னைக்கு எதோ சித்தி பொண்ணு சொன்னியேனு இழுக்காம, அந்த பாப்பா பெயரை சொல்லி பேசுனீங்கன்னா, உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற கனெக்ட் அதிகமாகும். நீங்க ஞாபகம் வச்சிக்குற ஒவ்வொரு சின்ன சின்ன டீட்டெய்லும்தான் உங்க இன்வால்வ்மெண்டை காட்டுதுனு அர்த்தம்.
0 Comments