அனு சித்தாரா – குட்டி பயோ
2013ல் பட்டாஸ் பாம்ப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனு சித்தாரா, ஹேப்பி வெட்டிங் படம் மூலம் கவனம் ஈர்த்தார். அடுத்தடுத்து இவர் நடித்த ஃபக்ரி, ராமண்டே ஏதன் தோட்டம், படையோட்டம், ஒரு குட்டநாடன் பிளாக், அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டு, சுபராத்திரி போன்ற படங்கள் அனுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தன. சிறுவயது முதலே நடனம் கற்று வரும் அனு சித்தாரா, படையோட்டம் படத்தில் நடித்த மீரா டீச்சர் கேரக்டர் பெரிய அளவுக்கு ரீச்சானது. அதேபோல், ராமண்டே ஏதன் தோட்டம் படத்தில் மாலினி கேரக்டரும் அனுவுக்கு பெரிய வெளிச்சம் கொடுத்தது. 2019ல் வெளியான பொதுநலன் கருதி தமிழ் படத்திலும் அனு சித்தாரா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
அனு சித்தாராவை தமிழ் ரசிகர்களுக்கு ஏன் பிடிக்கும்?
-
1 நடிப்பும் நடனமும்
கோலிவுட்டில் கோலோச்சிய முன்னணி நடிகைகள் பலரிடமும் இருந்த காம்போ நடிப்பு பிளஸ் நடனம். இயல்பிலேயே கிளாசிக்கல் டான்ஸரான அனு சித்தாரா, ராமண்டே ஏதன் தோட்டம் படத்தில் நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாகவும் அசத்தியிருப்பார். அந்தப் படத்தில் கணவரின் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் மனைவியாக, 10 வயது மகளின் தாயாக, குஞ்சாக்கோ கோபனுடனான நட்பு என நடிப்பிலும் அனு சித்தாரா காட்டிய வெரைட்டி அவருடைய நடிப்பை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது.
-
2 ஸ்கிரீன் பிரசன்ஸ்
திரையில் தங்களுக்குப் பிடித்தமான நட்சத்திரங்கள் தோன்றினாலே கொண்டாடும் மனநிலை கொண்டவர்கள் நம் தமிழ் ரசிகர்கள். ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்து கொண்டாடிய முந்தைய தலைமுறையின் அடியொற்றி இன்றும் தங்களின் ஆதர்ஸ நட்சத்திரங்களுக்கு விசில் மூலமாகவும் கரகோஷங்கள் மூலமாகவும் கொண்டாட்ட வரவேற்புகள் கொடுப்பதுண்டு. நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களின் ஸ்கிரீன் பிரசன்ஸ் ஒருவிதமான மனதுக்கு நெருக்கமான குட்ஃபீலைக் கொடுக்க வேண்டும் என்பது கடைக்கோடி சினிமா ரசிகனின் விருப்பமாக இருக்கும்.
அப்படி ஒரு மனதுக்கு நெருக்கமான குட்ஃபீலை அனு சித்தாராவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கொடுக்கிறது. அவர் நடிக்கும் படங்கள் மட்டுமல்ல, அவரது இன்ஸ்டா பேஜில் இருக்கும் ஒவ்வொரு வீடியோ, போட்டோவும் இதற்கு சாட்சியாக நிற்கின்றன. கொரோனா லாக்டௌனில் அவர் பகிர்ந்த டான்ஸ் வீடியோக்கள் வைரலாகின. அனு சித்தாராவுக்கு இந்த குவாலிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகத் தமிழ் ரசிகர்கள் நினைக்கிறார்கள். -
3 ஃபேன் ஃபாலோயிங்
ஒரு பிரபலத்தின் பலமே அவரைக் கொண்டாடும் ரசிகர்கள்தாம். அந்த வகையில் சோசியல் மீடியா மட்டுமல்லாது நிஜத்திலும் மிகப்பெரிய ஃபேன் ஃபாலோயர்களைக் கொண்டவர் அனு சித்தாரா. இவரின் ஒவ்வொரு இன்ஸ்டா போஸ்டுக்கும் குவியும் லைக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இன்ஸ்டாவில் மட்டும் 24 லட்சம் பேர் இவரைப் பின் தொடருகிறார்கள். ட்விட்டரில் 43,200 பேர் இவரைப் பின் தொடருகிறார்கள். சமூக வலைதளங்களில் அனு சித்தாராவைப் பின் தொடருபவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கமெண்டுகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
-
4 பக்கத்து வீட்டுப் பெண் லுக்
தமிழகத்தில் பாலிவுட்டைப் போல சைஸ் ஜீரோ ஹீரோயின்கள் பெரிதாகக் கவனம் பெற்றதில்லை. 1990களில் சிம்ரன் தொடங்கி இப்போது நயன்தாரா வரை அவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் அவர்களை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அந்தவகையில் அனு சித்தாராவின் பக்கத்து வீட்டுப் பெண் லுக் அவருக்குத் தமிழகத்தில் கணிசமான ரசிகர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது என்று சொல்லலாம்.
0 Comments