Game of Thrones, Breaking Bad, Money Heist னு எல்லா வெப் சீரீஸூம் பார்த்து முடிச்சிட்டிங்களா? அடுத்து என்ன பாக்குறதுனு குழப்பத்துல இருக்கீங்களா? வெப்சீரீஸ்லாம் பழசாகிடுச்சு. இப்போ ஒரு க்ரூப் வெறிகொண்டு ஜப்பான் Anime சீரீஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அனிமேசனா அது குழந்தைங்க பாக்குறதுல? அப்டினு ஷாக் ஆகாதீங்க. பெரியவர்களுக்காகவே கார்ட்டூன் சீரீஸ்களை தயாரித்து உலகம் முழுவதும் ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது ஜப்பான். சில பிரபலமான Anime சீரீஸ் இங்கே.
-
1 Naruto
நிஞ்சா எனும் தற்காப்புக் கலை வீரன் நருட்டோ. ஊரிலேயே சக்தி வாய்ந்த நிஞ்சாவான ஹாக்கேஜ் ஆவதற்காக செய்யும் சாகசங்கள்தான் கதை. நிறைய கதாபாத்திரம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை என பட்டையை கிளப்புகிறது இந்த சீரீஸ். 9 சீசன்களைக் கொண்ட இந்த சீரீஸ் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.
-
2 One Punch Man
மாஸ்டர் விஜய் சேதுபதி போல ஒரே குத்தில் எவரையும் வீழ்த்திவிடக்கூடிய சூப்பர் ஹீரோவான Saitama வை பற்றிய கதை. இதுவரை 2 சீசன்கள் வெளிவந்துள்ள One Punch Man நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.
-
3 Death Note
ஜீபூம்பா பென்சிலை வைத்து எதாவது வரைந்தால் அது அப்படியே வருமே.. அதுபோல ஒரு ஹீரோ கையில் ஒரு நோட் கிடைக்கிறது. அதில் யாருடைய பெயரையாவது எழுதினால் அவர்களுக்கு சாவு நிச்சயம். இதுதான் Death Note சீரீஸின் கதை. கொலைகள் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த சீரீஸை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.
-
4 Attack on Titans
மனிதர்களை தின்னும் டைட்டன்களிடம் இருந்து மனித இனத்தை காக்கும் கதாநாயகனின் கதை. சூப்பரான கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமான திரைக்கதை என சக்கை போடுபோடுகிறது இந்த சீரீஸ். நான்கு சீசன்கள் கொண்ட இந்த சீரீஸை Hulu தளத்தில் பார்க்கலாம்.
-
5 My Hero Academia
80% மக்கள் எதாவது ஒரு சூப்பர் பவருடன் இருக்கும் ஒரு உலகம். அதில் எந்த சூப்பர் பவரும் இல்லாத ஹீரோ. தி பெஸ்ட் சூப்பர் பவர் கொண்ட All Might, தன்னுடைய சூப்பர் பவரை ஹீரோவுக்குக் கற்றுத் தருகிறார் என விரியும் கதை. நான்கு சீசன்கள் கொண்ட இந்த சீரீஸ் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.
0 Comments