ஐபிஎல் தொடரில் முதல்முறையாக எல்.எஸ்.ஜி அணிக்குச் செல்ல இருக்கும் ரிஷப் பண்ட், டி20 ஸ்பெஷலிஸ்டாகவே பார்க்கப்பட்டார். தன்னால் டெஸ்டிலும் களமாட முடியும் என உணர்த்தியிருக்கிறார் பண்ட். ரிஷப் பண்டைப் பொறுத்தவரையில் அவரது அதிரடிதான் பலம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக நின்று பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதிக்க ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மனரீதியாக பலம் அதிகம் வேண்டும். அதேபோல், நாள் முழுவதும் விளையாட எனர்ஜியும் வேண்டும். இது இரண்டுமே பண்டுக்கு இல்லை என்பதுதான் குறையாகப் பார்க்கப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இந்திய அணிக்காக டெஸ்டில் உடனடியாகக் களமிறங்குவோம் என பண்டே நினைத்திருக்க மாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட பண்ட் தேர்வாகவில்லை. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை விருத்திமான் சாஹாதான் முதல் டெஸ்டுக்கு அணி நிர்வாகத்தின் சாய்ஸாக இருந்தார். ஆனால், அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்களுக்கு சுருண்டது, அணி நிர்வாகத்தை யோசிக்க வைத்தது. பேட்டிங்கில் வலுசேர்க்கும் வகையில் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு நடந்தது வரலாறு. அதன்பிறகு நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு கேம் – சேஞ்சிங் இன்னிங்ஸ் ஆடி டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை நிலைநிறுத்தினார் பண்ட். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் பண்ட் 544 ரன்கள் குவித்திருக்கிறார்.
[zombify_post]