இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவிடம் போன்றவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களே இங்கு முதலீடு. அதிலும் குறிப்பாகத் தனிப்பட்ட தகவல்களுக்கு பெரிய மவுசே இருக்கிறது. கூகுள் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது சேவைகளுக்குச் சரியான பயனாளிகளை அடையாளம் கான இவற்றைப் பயன்படுத்துகின்றன. இதற்காக ஒவ்வொரு பயனாளரின் விர்ச்சுவல் புரஃபைல் எனப்படும் மெய்நிகர் ஆசாமியாக உருவகப்படுத்தப்படுகிறார்கள்.
-
1 டிஜிட்டல் புட் பிரிண்ட்
இணையத்தில் ஒவ்வொருவரும் செல்லும் பாதை, பிரவுசிங் செய்யும் தளங்கள் போன்றவற்றில் பயணிக்கும் பாதையை டிஜிட்டல் புட் பிரிண்ட் என்பார்கள். அந்தவகையில் யூடியூப், குரோம், சர்ச் என்ஜின், ஜி மெயில் உள்ளிட்டவைகள் மூலம் பயனாளர்களின் டிஜிட்டல் புட் பிரிண்ட் சேகரிக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தொகுக்கும் பெரு நிறுவனங்கள், பயனாளர்களின் தேவை அறிந்து விளம்பரங்களைக் காட்டுகின்றன. நீங்கள் பார்த்த இணையதளங்கள், அதுபற்றிய தகவல்களை கூகுள் சேமித்து வைத்திருக்கும்.
எடுத்துக்காட்டாக கூகுள் சர்ச் என்ஜினில் நீங்கள் லேப்டாப்பின் விலையைத் தேடினீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின்னர், வேறு ஒரு இணையதளத்தில் நீங்கள் பிரவுஸ் செய்துகொண்டிருக்கும்போது லேப்டாப் விலை, அம்சங்கள் குறித்த விளம்பரம் உங்களுக்குக் காட்டப்படும். -
2 தனிப்பட்ட தகவல்கள்
கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனத்திடம் உங்கள் தனிப்பட்ட தகவல் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள். இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மனிதரின் வாழ்வும் எப்படியானது என்பது பற்றிய ஏறக்குறைய தெளிவான தகவல்கள் கூகுளிடம் இருக்கிறது. ஃபேசியல் ரெக்காக்னிஷன், குரல் வழித் தேடல், ஜி.பி.எஸ் போன்றவைகள் இன்று எல்லோரும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களாகிவிட்ட நிலையில், நீங்கள் எப்படி இருப்பீர்கள், உங்கள் குரல் எப்படி இருக்கும் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் கூகுளிடம் எளிதாக சென்றுசேர்ந்துவிடும்.
இதுமட்டுமல்லாது உங்களது மதம் சார்ந்த நம்பிக்கை என்ன, உங்கள் உடல்நிலை, உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறதா, இல்லையா போன்ற தகவல்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொடுக்கும் தகவல்கள் மூலம் அறிந்துவைத்திருக்கிறது கூகுள். தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் விளம்பரங்கள், எந்தெந்த நிறுவனங்கள் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துகின்றன போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் கூகுள் நமக்கு வாய்ப்பை வழங்குகிறது. இதுபற்றி கூடுதல் தகவல்களை https://adssettings.google.com/authenticated இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். -
3 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
லொக்கேஷன் டிராக்கிங் மூலம் ஒருவரின் இருப்பிடத்தை கூகுளால் அறியமுடியும் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. இதன்மூலம் ஒருவர் பணியாற்றும் இடம், அவரது இருப்பிடம், பயணிக்கும் இடங்கள் போன்ற தகவல்கள் கூகுளிடம் சென்று சேர்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள், எதைப்பற்றி பேசுகிறீர்கள், உங்கள் நண்பர்கள் யாரெல்லாம் போன்ற தகவல்களும் கூகுளிடம் இருக்கின்றன.
எந்த சமயத்தில் யாருடன் பேசினீர்கள் என்ற டேட்டாவும் அந்த நிறுவனத்திடம் இருக்கும். -
4 லைக், டிஸ்லைக்
கூகுள் சர்ச் என்ஜின் ஹிஸ்டரி அடிப்படையில் உங்களுக்கு எந்தப் படம் பிடிக்கும், பிடித்த புத்தகம், வீடியோ, இடம், ஹீரோ, ஹீரோயின் போன்ற தகவல்கள் கூகுளிடம் இருக்கும். உங்கள் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கூகுளுக்குத் தெரிந்திருக்கும் என்கிறார்கள். உதாரணத்துக்கு குழந்தை வளர்ப்பு பற்றி தேடினீர்கள் என்றால், விரைவில் தந்தையாகவோ, தாயாகவோ ஆகப்போகிறீர்கள் என்பதைக் கணிக்க கூகுளுக்கு ஏழாவது அறிவெல்லாம் தேவையில்லை அல்லவா...
0 Comments