BJP

1980 முதல் 2021 வரை… தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க! #BJP

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்த பா.ஜ.க, 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

தேசிய கட்சியான பா.ஜ.க தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். அதன்பிறகு எந்தவொரு தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றியைப் பதிவு செய்யவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது.

BJP

இதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.கவின் டிராக் ரெக்கார்டு என்ன?

1980ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்தான் பா.ஜ.க தமிழகத்தில் முதல்முறையாகப் போட்டியிட்ட தேர்தல். அந்தத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது.

  • 1984 தேர்தல் – 15 தொகுதிகளில் போட்டி – ஒரு தொகுதியில் டெபாசிட் கிடைத்தது.
  • 1989 தேர்தல் – 31 தொகுதிகளில் போட்டி – ஒரு தொகுதி தவிர 30 தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது.
  • 1991 தேர்தல் – 99 தொகுதிகளில் போட்டி – நான்கு தொகுதிகளில் டெபாசிட் கிடைத்தது.
  • 1996 தேர்தல் – 143 தொகுதிகளில் போட்டி – ஒரு தொகுதியில் வெற்றி, ஆறு தொகுதிகளில் டெபாசிட் கிடைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட சி.வேலாயுதன் வெற்றிபெற்று, தமிழகத்தில் பா.ஜ.க-வின் முதல் சட்டமன்ற உறுப்பினரானார்.
  • 2001 தேர்தல் – தி.மு.க கூட்டணியில் 21 தொகுதிகளில் போட்டி – நான்கு தொகுதிகளில் வெற்றி, அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டைத் தக்க வைத்துக் கொண்டது. காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 4 பேர் இந்தத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்றனர்.
  • 2006 தேர்தல் – 225 தொகுதிகளில் போட்டி – நான்கு தொகுதிகளில் அந்தக் கட்சி டெபாசிட்டைத் தக்கவைத்தது.
  • 2011 – 204 தொகுதிகளில் போட்டி – ஆறு தொகுதிகளில் டெபாசிட் கிடைத்தது.
  • 2016 தேர்தல் – 188 தொகுதிகளில் போட்டி – எட்டு தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
  • 2021 தேர்தல் – அ.தி.மு.க கூட்டணியில் 20 இடங்களில் போட்டி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top