தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்ட இரண்டு படங்கள்!

தஞ்சையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

தஞ்சை தனியார் பள்ளி

தஞ்சாவூர் அருகே உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ் டு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்து வந்த அந்த மாணவியை மதம் மாறும்படி வார்டன் கட்டாயப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. அதேநேரம், மதம் மாற்றம் குறித்து பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பொய்யான தகவலைப் பரப்புவதாகவும், மாணவியின் சித்தி கொடுமையாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராகச் சேர்க்கும்படி தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தசூழலில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று தீர்ப்பு வழங்கினார். மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அவர் உத்தரவிட்டார்.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட கே.பாலச்சந்தரின் `கல்யாண அகதிகள்’ படம்!

  • நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனது தீர்ப்பில் கே.பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் மற்றும் நவாசுதீன் சித்திக்கின் Serious Men ஆகிய படங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தீர்ப்பில், நவாசுதீன் சித்திக் நடித்திருக்கும்Serious Men’ படம் மும்பையில் செட்டிலான தமிழ் தலித்தான அய்யன் மணி என்பவரின் வாழ்க்கையைப் பற்றியது. அந்தப் படத்தின் அய்யன் மணி மற்றும் கிறிஸ்தவப் பள்ளியின் தலைமையாசிரியர் இடையிலான இந்த உரையாடல் இடம்பெற்றிருக்கும்.
நீதிமன்றத் தீர்ப்பு
நீதிமன்றத் தீர்ப்பு

அய்யன் மணி: என்னுடைய மகனின் IQ 169. உங்கள் பாடத்திட்டத்தை விட மேம்பட்டவர். வேறு ஒரு நிலையில் இருப்பவர்.

தலைமையாசிரியர்: ஆமாம் மணி அவர்களே. ஆதிக்கு இயேசு சிறந்த அறிவாற்றலை அளித்திருக்கிறார். Praise the lord.

அய்யன் மணியின் மனைவி: அவன் மீனாட்சியம்மனின் அருள். நான் கர்ப்பிணியாக இருந்தபோது வெறும் காலில் விநாயகர் கோயிலுக்கு நடந்து போயிருக்கிறேன்.

தலைமையாசிரியர்: இயேசு மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா மணி?

அய்யன் மணி: I Love Christ

தலைமையாசிரியர்: Christ Loves you too மணி. நீங்களும் ஆதியும் முறையாக அவரை ஏற்றுக்கொண்டால், பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் பள்ளியின் கொள்கையின்படி ஆதிக்கு சிறப்பு உதவித் தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவனை நான் நேரடியாக 9-ம் வகுப்பில் சேர்க்க முடியும். கட்டாயம் ஏதும் இதிலில்லை. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நீங்கள் வேண்டுமானால், உங்கள் நண்பர் சதீஷ், சயாலின் அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இயேசுவை அவரது குடும்பம் ஏற்றுக்கொண்ட பிறகு சயாலிக்கு எவ்வளவு உதவிகள் கிடைத்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நான் இதை வெளிப்படையாகச் சொல்வதற்காக என்னை நீங்கள் தவறாக நினைக்காவிட்டால், ஒரு விஷயம் சொல்கிறேன். உங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் மணி.

அய்யன் மணி: …….

தலைமையாசிரியர்: இலவசமாக புத்தகங்களை அளிப்பதோடு, இலவசமாக போக்குவரத்து வசதியும் உங்களுக்கு அளிப்போம்.

கல்யாண அகதிகள்
கல்யாண அகதிகள்
  • பழம்பெரும் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் படம் இந்துப் பெண்ணான அம்முலு என்பவர், ராபர்ட் என்பவருடன் காதலில் வீழ்வது குறித்து பேசுவது. கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு எமிலியாக மாறினால், அவளைத் தங்களின் மருமகளாக ஏற்றுக்கொள்ள ராபர்டின் பெற்றோர் தயாராகிறார்கள். ஆனால், அதை அம்முலு ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், ஆத்திரமடையும் ராபர்ட், தங்கள் குடும்பம் வரதட்சணை எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கிறிஸ்தவராக மாறும்படி மட்டுமே கேட்பதாகச் சொல்கிறார். பணமாகக் கேட்பதற்குப் பதில் என்னுடைய மதத்தில் இருந்து வெளியேறும்படி நீங்கள் கேட்கிறீர்கள். இதுவும் ஒருவகை வரதட்சணைதானே?’ என்று அவள் பதிலளிக்கிறாள். ராபர்ட் ஆத்திரத்தின் உச்சிக்குச் செல்லும் நிலையில், தனது மதத்துக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறேன் என்பது குறித்து தெளிவான வசனம் ஒன்றின் மூலம் பதில் சொல்லும் அம்முலு, அந்த பந்தத்தை முறித்துக் கொள்கிறாள்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும்,தமிழ் திரைப்படங்கள் மெலோடிராமா மற்றும் மிகைப்படுத்தலுக்குப் பெயர் போனவை. அவை உண்மையின் கருவையே மறைத்துவிடுகிறார்கள்’ என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read – இந்த ஊர்களையெல்லாம் தெரியுமா… தமிழகத்தின் 7 விநோத கிராமங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top