அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

யார் பெருசுனு அடிச்சுக் காட்டு…. அ.தி.மு.க உரசல்களும் அண்ணாமலை ரியாக்‌ஷன்களும்..!

கோவில் படத்துல வடிவேலு, `யாரு பெருசுனு அடிச்சுக் காட்டுனு’ ஒரு டயலாக் சொல்வார். அரசியல் களத்துல அது அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் எக்ஸ்க்ளூசிவ்வா சொன்ன டயலாக்காவே எடுத்துக்கலாம். காரணம், அதிமுக கூட்டணில இருந்தா கட்சித் தலைவர் பதவியையே ராஜினாமா பண்ணிட்டுப் போய்டுவேன்னு அண்ணாமலை சொன்னதா ஒரு நியூஸ் வெளில வர்றதும்… அவருக்கெல்லாம் தலைவரா இருக்க தகுதியே இல்ல. திருவிழால காணாமப் போன சின்னக் குழந்தை மாதிரி-இப்படியெல்லாம் அதிமுக தரப்புல விமர்சனம் பண்றதும் ஒரு பக்கம் நடந்தாலும்… கொஞ்ச நாள்லயே அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாங்குற மாதிரி கூட்டணில எந்தவொரு சலசலப்பும் இல்லனு ஜஸ்ட் லைக் துடைச்சுட்டுப் போறதும்தான் சமீபகாலமா நடந்துட்டு இருக்கு… அதிமுக தரப்புல இருந்து அண்ணாமலையை எப்படியெல்லாம் டீஸ் பண்ணாங்க… அதுக்கு அண்ணாமலை எப்படியெல்லாம் ரியாக்‌ஷன் கொடுத்தார்ங்குறதைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!

தமிழ்நாடு பிஜேபி தலைவரா 2021 ஜூலை 8-ம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்றிருந்தாலும், ஆரம்பத்துல அவரோட பேச்சுகள் எல்லாமே திமுகவை தாக்குவதாகவே இருந்துச்சு. ஆனால், 2023 மார்ச்சுக்குப் பிறகு பல சந்தர்ப்பங்கள்ல அதிமுக-வும் அவர் தாக்கத் தொடங்குனார். குறிப்பா, பிஜேபி ஐடி விங் செயலாளரா இருந்த நிர்மல் குமார் அண்ணாமலையைக் கடுமையா விமர்சனம் பண்ணிட்டு கட்சில இருந்து விலகுனார். அவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திச்சு அதிமுகல சேர்ந்தார்.அதுவும் குறிப்பா, திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜக-வுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே மிகப்பெரிய கேடு’ என்கிற அளவுக்கு விமர்சித்திருந்த நிர்மலை அதிமுக இணைத்துக் கொண்டது அண்ணாமலைக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்துச்சு. இதனாலதான் இந்த சம்பவத்துக்கு அண்ணாமலை கொஞ்சம் சூடாவே எதிர்வினையாற்றுனார்.திராவிடக் கட்சிகள்ல இருந்து பிஜேபிக்கு வந்து வளர்க்க வேண்டும்ங்குற நிலைமை மாறி, பிஜேபில இருந்து போய் திராவிடக் கட்சிகளை வளர்க்கணும்ங்குற நிலை உருவாகியிருக்கு’னு சொல்லியிருந்தார். அதிமுகல இருந்து பிஜேபில சேர்ந்தா இனிக்குது. அதுவே பிஜேபில இருந்து அதிமுகல சேர்ந்தா கசக்குதோனு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டியிருந்தார்.

இப்படி இங்கொண்ணும் அங்கொண்ணுமா முட்டல் மோதல் இருந்துக்கிட்டு இருந்தப்போதான் பிரபலமான இங்கிலீஷ் பேப்பருக்கு அண்ணாமலை கொடுத்த பேட்டி அதிமுக தரப்பை உசுப்பேத்துச்சு. அந்த பேட்டில, தமிழ்நாட்டுல ஆட்சில இருந்த கட்சிகள் ஊழல்ல ஈடுபட்டாங்க…. இங்க இருக்க ஆட்சி எல்லாமே ஊழல் ஆட்சியாத்தான் இருக்கு. முன்னாள் முதலமைச்சரே ஊழல் வழக்குல தண்டிக்கப்பட்டிருக்கிறாரே’னு பேசுனது பெரிய விவாதத்தைக் கிளப்புச்சு. ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சனம் பண்ணதுக்கு அதிமுக தரப்புல இருந்து கடுமையான ரியாக்‌ஷன்கள் வர ஆரம்பிச்சுச்சு. அதிமுக சார்பா பிரஸை சந்திக்குற ஜெயக்குமார்,நீங்க அம்மா மாதிரி பெரிய லீடர்னு சொல்லிக்காதீங்க’னு சொன்னார். அதேபோல், `இந்தியா முழுக்க செயல்படுற ஒரு கார்ப்பரேட் கம்பெனியோட பிராஞ்ச் மேனேஜர்தான் நீங்க’னும் அதிமுக சார்புல விமர்சனம் பண்ணதோட, போன ஜூன் மாசம் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல அண்ணாமலையைக் கண்டிச்சு தீர்மானமே நிறைவேத்துனாங்க.

இதெல்லாம் விட ஒரு ஸ்பெஷல் ஐயிட்டம் இருக்குங்குற மாதிரி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் சமயத்துல பல சம்பவங்கள் அரங்கேறுச்சு. அந்தத் தேர்தல்ல ஓபிஎஸ் தனியா வேட்பாளரை அறிவிச்சு, அதுக்கப்புறம் என்ன நடந்துச்சோ பின்வாங்குனார். தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக ஒண்ணா இருந்திருக்கணும்னெல்லாம் பேசுனார் அண்ணாமலை. இது டைரக்டா தன்னையே தாக்குற மாதிரி இருக்கதா நினைச்சாரோ என்னவோ, எடப்பாடி பழனிசாமி ஒரு பிரஸ்மீட்ல தன்னோட மைண்ட் செட்டை வழக்கத்துக்கு மாறா ஓப்பனாவே கொட்டிட்டுப் போனார். அண்ணாமலை பத்துன கேள்விக்கு, `ஏங்க அவரைப் பத்தியே பேசிட்டு இருக்கீங்க. இப்படிப் பேசிப்பேசிதாங்க அவர் பெருசாகுறார். அவரைப் பத்தியே பேச வேணாம். நான் அரசியலுக்கு வந்து 50 வருஷம் ஆகுது. அவர் இப்படி பேட்டி கொடுத்தே பெருசாகணும்னு நினைக்குறாரு. அதனால தயவு செஞ்சு அவரப்பத்தி என்கிட்ட கேக்காதீங்க. கட்சில இருக்க அடிப்படைத் தன்மை தெரியணும். அப்படிப்பட்டவங்க பத்தி கேட்டா நான் பதில் சொல்றேன்’னு சொல்லிருப்பார்.

இதே கேள்வியை திரும்பவும் அவர்கிட்ட ஒரு பிரஸ்மீட்ல கேட்டப்போ, அவர் சொன்ன பதில் வேற லெவல்ல இருந்துச்சு… அப்போ அவர் என்ன சொல்லிருந்தார்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

சேலத்தைத் தொடர்ந்து ஒரு வாரம் கழிச்சு மதுரைலயும் அண்ணாமலை பத்தின கேள்வியை எடப்பாடியை நோக்கிக் கேட்டாங்க. அதுக்கு அவரோ, மேல பாஸ் இருக்கும்போது கீழ இருக்கவரைப் பத்தி எதுக்குப் பேச்சு. கீழ இருப்பவங்க மாறிட்டே இருப்பாங்க. முன்னாடி தமிழிசை இருந்தாங்க, அதுக்கப்புறம் எல்.முருகன் இருந்தார். இப்போ அண்ணாமலை. இப்படி மாறிட்டே இருப்பாங்க. அதப்பத்திலாம் எங்களுக்குக் கவலை இல்ல. எங்களைப் பொறுத்தவரைக்கும் கூட்டணினா மோடி, அமித் ஷா, நட்டாதான்’னு அசால்டு காட்டியிருப்பார். இதைக் கேட்டுட்டும் அண்ணாமலையால்,எரிமலை எப்படிப் பொறுக்கும்’னு பிஜிஎம் போட மட்டும்தான் முடிஞ்சது. ஒரு வகைல தமிழ்நாட்டுல கூட்டணி பத்தின முடிவெடுக்குற உரிமை விஷயத்துல அண்ணாமலை கொஞ்சம் அப்செட்டாதான் இருந்தார்ங்குறதை சமீபத்துல அவர் பேசுன பேச்சு தெளிவாவே காட்டுச்சுனு சொல்லலாம். நான் யாருக்கும் அடிமை இல்ல. கூழைக் கும்பிடு போடணும்னு இல்லை. எதைப் பத்தி வேணா பேசலாம். என் நேர்மையைப் பத்தி பேசுனா நான் சும்மா இருக்க மாட்டேன்’னு சி.வி.சண்முகத்தோடவசூல் யாத்திரை’ விமர்சனத்துக்குப் பதில் சொல்லிருந்தார் அண்ணாமலை.

Also Read – `நான் ஆட்சிக்கு வந்தால்..’ – Dangerous Fellow ‘சீமான்’ காணும் கனவுகள்!”

அதிமுக – பிஜேபி கூட்டணி இன்னிக்கு இல்ல… அதோட வரலாறுமே கேட் அண்ட் மவுஸ் கேமாகவே இருந்துருக்கு. சரி எஸ்டிடி என்ன சொல்லுதுனு பார்ப்போமா?

வாஜ்பாய் காலத்துல 1998 நாடாளுமன்றத் தேர்தல்ல அதிமுக – பிஜேபி கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செஞ்சது. அதிமுக 18 இடங்கள்லயும் பிஜேபி 3 இடங்கள்லயும் ஜெயிச்சிருந்தப்போ, பிஜேபிக்கு வெளில இருந்து ஆதரவு தர்றதா ஜெயலலிதா சொன்னாங்க. அத்தோட டிஃபன்ஸ் மினிஸ்டர் ஜார்ஜ் பெர்ஃனாண்டஸை டிஸ்மிஸ் பண்ணனும், சுப்ரமணியன் சுவாமிக்குப் பதவி கொடுக்கணும், திமுக அரசைக் கலைக்கணும்னு பல டிமாண்டுகளை வைச்சாங்க. ஆனா, எதையுமே வாஜ்பாய் அரசாங்கம் ஏத்துக்காத நிலைமைல திடீர்னு சுப்ரமணியன் சுவாமி அரேஞ்ச் பண்ண டீ பார்ட்டில காங்கிரஸ் தலைவர்களை சந்திச்சு பிஜேபிக்கு அதிர்ச்சி கொடுத்ததோட, குடியரசுத் தலைவரை சந்திச்சு பிஜேபி கவர்மெண்டுக்குக் கொடுத்துட்டு வந்த சப்போர்ட்டை வாபஸ் வாங்குறதாகவும் சொன்னாங்க. இதனால, நம்பிக்கை வாக்கெடுப்புல ஒரு ஓட்டு வித்தியாசத்துல தோத்து பிஜேபி கவர்மெண்ட் ஆட்சியை இழந்துச்சு. இதுக்கடுத்து 2004 நாடாளுமன்றத் தேர்தல்ல கூட்டணி வைச்சப்போ, தேர்தல்ல விழுந்த பலத்த அடி காரணமா உடனடியா அந்தக் கூட்டணி முறிஞ்சு போச்சு. 2014 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுல ஜெயலலிதா முன்வைத்த பிரதான பிரசாரமே, `மோடியா இந்த லேடியா’ங்குறதுதான். ஜெயலலிதா இருந்தவரை பிஜேபி கூட்டணியை முடிவு பண்றது அவங்களாவே இருந்து வந்திருக்காங்கங்குறதுதான் வரலாறு.

தமிழ்நாட்டு அரசியல்ல பிஜேபி – அதிமுக கூட்டணி பிரிவு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நீங்க நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top