ஈரோடு இடைத்தேர்தல்

‘புரோட்டா’ அமைச்சர்… ‘எகிறும்’ எடப்பாடி.. ‘விஸ்வரூப’ கமல்… ‘சிங்கிங்’ சீமான்.. ஈரோடு சுவாரஸ்யங்கள்!

இடைத்தேர்தல்னாலே கண்டண்டுக்கு பஞ்சம் இருக்காது. கோயில் திருவிழாவுக்குள்ள நுழைஞ்ச மாதிரி திரும்புற பக்கமெல்லாம் எதாவது சுவாரஸ்யமா நடந்துகிட்டே இருக்கும். தமிழ்நாட்டுக்கு சீசனுக்கு சீசன் ஒரு எண்டர்டெய்ன்மெண்ட்னா இடைத்தேர்தல்தான். இப்போ ஈரோடு சீசன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடக்க இருக்கு. அந்த பிரசாரத்துல நடந்த களேபரங்கள், ஒவ்வொரு கட்சியிலயும் என்ன நடந்திட்டு இருக்கு இதெல்லாம்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

ஈரோடு இடைத்தேர்தல் - திமுக
ஈரோடு இடைத்தேர்தல் – திமுக

* கொள்கைப் பிடிப்புள்ள தி.மு.க ஆட்கள் பேசுறப்போ பா.ஜ.கவோட தலைமைச் செயலகம் நாக்பூர்னா தி.மு.கவுக்கு தலைமைச் செயலகம் ஈரோடுனு சொல்வாங்க. கொள்கை விஷயத்துல எப்படியோ ஆனா இப்போ உண்மைலயே தி.மு.க அரசோட தலைமைச் செயலகம் ஈரோட்டுலதான் இருக்கு. தி.மு.க கூட்டணில வேட்பாளரா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுறாரு. தி.மு.கவோட தேர்தல் பணிக்குழுனு 10 அமைச்சர்களை நியமிச்சாங்க. இப்போ பார்த்தா முக்கால்வாசி அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள்னு ஒரு பெரிய க்ரூப்பை இறக்கிவிட்டிருக்காங்களாம். இவங்களும் ஆளுக்கொரு திசையில சுத்தி சுத்தி பிரசாரம் பண்ணிட்டு இருக்காங்க. அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஒரு கடைல பரோட்டா போடுறாரு, அமைச்சர் நாசர் டீ போட்டுக்கொடுக்கிறாரு, அமைச்சர் சி.வி.கணேசன் இட்லி சுடுறாரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பறையடிக்கிறாரு, அமைச்சர் சுவாமிநாதன் மேளம் அடிக்கிறாரு. ஒரு தி.மு.க நிர்வாகி ஓட்டு கேட்க போன வீட்டுல பாத்திரம்லாம் தேச்சி கொடுத்தாங்க. அந்த நிர்வாகி பேரு கனிமொழிங்குறதுதான் ஹைலைட்டு. இதெல்லாம் விட செந்தில் பாலாஜி ஒரு தெருவுக்குள்ள ஓட்டு கேட்டு இருக்கும்போதே திடீர்னு ஓட ஆரம்பிச்சுட்டாரு. கூட வந்தவங்களும் பதறி அடிச்சி ஓடிருக்காங்க. ஒருவேளை ஓடி ஓடி வேலை பார்க்குறேனு சிம்பாளிக்கா சொல்லிக் காட்டிருப்பாரோ?

* ஆப்போசிட் டீம்ல நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கானு ஈகுவலா மெயிண்டெய்ன் பண்றாங்க அ.தி.மு.கவோட முன்னாள் அமைச்சர்கள். அ.தி.மு.க சார்பில கே.எஸ்.தென்னரசு போட்டியிடுறாரு. எடப்பாடி, அண்ணாமலைனு பெரிய தலைகள் எறங்கி பிரசாரம் பண்ணிட்டு இருக்காங்க. இங்கிட்டும் கலைகட்டுது பிரசாரம். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இஸ்திரி போட்டு வாக்கு கேக்குறாரு, வேலுமணி ஒயிலாட்டம் ஆடிக்கிட்டு இருக்காரு, ராஜேந்திர பாலாஜி டான்ஸர்ஸோட இறங்கி குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருக்காருனு செம ஃபன்னா போயிக்கிட்டு இருக்கு. இதுக்கு நடுவுல நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள்லாம் நடந்தது.

எடப்பாடி பழனிசாமி
ஈரோடு – எடப்பாடி பழனிசாமி

*  ‘ஏன்யா புரோட்டா போடுறதுக்கும் வடை சுடுறதுக்குமா மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு அமைச்சர் ஆக்குனாங்க’ அப்படினு தி.மு.கவுக்கு எதிரா ஆவேசமா பிரசாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு எடப்பாடி பழனிசாமி. பக்கத்துல இருந்த வேட்பாளருக்கும் தூக்கம் சொக்குது. கண்ணைத் துடைச்சிக்குறாரு. கஷ்டப்பட்டு முழிக்க டிரை பண்றாரு, ஆனாலும் முடியாம தூங்கியே விட்டாரு. இதுவும் வைரலா சுத்திட்டு இருக்கு. விடிய விடிய ஓட்டு கேட்டு சுத்துனா தூக்கம் வரத்தான செய்யும் இது ஒரு குத்தமா?

* ‘மக்கள் நீதி மய்யம்’ கமல்ஹாசனும் ஈரோடு தேர்தல் பிரசாரத்துல களமிறங்கிட்டாரு. போன மாசம் ராகுலை சந்திச்சுட்டு வந்த கமல் இந்தத் தேர்தல்ல காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பேன்னு சொல்லிருந்தாரு. அதனால ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்காக தேர்தல் பிரசாரம் பண்றாரு கமல். ‘அவரும் பெரியார் பேரன்.. நானும் பெரியார் பேரன்’ அப்படினு ஒரு லாஜிக் சொல்றாரு.  ‘விஸ்வரூபம் படம் வந்தப்போ ஒரு அம்மையார் என்னை தடுமாற வச்சாங்க. அப்போ கலைஞர்தான் கால் பண்ணி உதவி வேணுமானு கேட்டாரு’ அப்படினு பழைய ரத்த சரித்திரங்களையெல்லாம் சொல்லி ஓட்டு கேட்டாரு. அதுமட்டுமில்லாம ‘ஈஸ்ட் கம்பெனி சென்றுவிட்டது இப்போ நார்த் இந்தியா கம்பெனி வந்திருக்கு’ அப்படினு பி.ஜே.பியை போட்டு தாக்கிருக்காரு.

கமல்ஹாசன் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு இடைத்தேர்தல் – கமல்ஹாசன் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

* சீமான் அண்ணன் என்ன பண்றாருனு பார்த்தா வழக்கம்போல பாட்டு பாடிக்கிட்டு ஜாலியா ஓட்டுகேட்டுட்டு இருக்காரு. நஞ்சை உண்டு புஞ்சை உண்டுனு அண்ணன் மெய்மறந்து பாட்டு எடுத்துவிடுறாரு. நேத்துதான் கமல் வந்து ஓட்டு கேட்டாரு. இன்னைக்கு அண்ணன் கமல் பாட்டு பாடி ஓட்டு கேக்குறாரு. அப்படினு கூட்டத்துல இருந்த ஒரு பெருசு சவுண்ட் விட்டது. அதுல பாருங்க ஒரு வீராவேசமா பேசுறதுல அருந்ததியர்கள் தெலுங்கர்கள்னு பேசிவிட்டாரு. அடுத்தநாள் அருந்ததியர்கள் அதிகமா இருக்குற இடத்துல ஓட்டுகேட்கப்போன தம்பிகள்ட்ட அந்த பகுதி மக்கள் சண்டை போட்டு திருப்பி அனுப்பிட்டாங்க. இந்த தெலுங்கு பஞ்சாயத்து அதோட நிக்கல. பாத்திங்களா தி.மு.க ஆளுங்க தெலுங்குல பேசி ஓட்டு கேட்டுட்டு இருக்காங்க அப்படினு தம்பிகள் வீடியோ போட்டு கதற, யோவ் உங்க ஆளுங்களே தெலுங்குலதான்யா ஓட்டு கேட்கிறாங்கனு உ.பிகள் பதில் வீடியோ இறக்குனாங்க.

சீமான்
சீமான்

* இதுக்கு நடுவுல எடப்பாடி கையெழுத்தோட ஒரு கடிதம் சுத்திக்கிட்டு இருந்தது. ‘நானும் கண்ணன் குலம். நம்ம வேட்பாளரும் கண்ணன் குலம். நம்ம பங்காளிக்கு ஓட்டு போட்ருங்க’ அப்படினு எட்ப்பாடி கேட்டிருக்குற மாதிரி அந்த கடிதம் இருந்தது. என்னயா இப்படி பண்ணிருக்கீங்கனு கேட்டா, ‘இது தி.மு.க சதிங்க.. சாதி, மதம், இனம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்ட இயக்கம் அ.தி.மு.க’ அப்படினு எமோசனாகுறாரு ஜெயக்குமார்.

* வாக்காளர்களையெல்லாம் காசு கொடுத்து ஒரு இடத்துல அடைச்சி வைக்குறாங்க தி.மு.க. நாங்க வீதிவீதியா ஓட்டு கேட்க போனா ஒரு பய இல்லைனு ஒரு குபீர் குற்றச்சாட்டை வைக்குறாங்க அ.தி.மு.க. தன்னோட பிரசாரத்துல இதை குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ‘நீ சரியான ஆம்பளையா இருந்தா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, மானம், ரோசம், சூடு, சொரனை இருந்தா அவங்களை வெளியே விடுயா பார்க்கலாம்’ அப்படினு ஆவேசமா பேசிருந்தாரு. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல டாஸ் தோத்ததும் ‘நீ ஆம்பளையா இருந்தா எங்களுக்கு பேட்டிங் கொடுயா’ னு பக்ஸ் சொல்லுவாருல அதே மாடுலேசன்ல இருந்தது. ‘ஏங்க அப்படியெல்லாம் அடைச்சு வச்சா ஒருத்தர்கூடவா போலீஸ்ல சொல்லமாட்டாங்க. அப்படியே அடைச்சுவச்சாலும் டெய்லியுமா மக்கள் வருவாங்க’ அப்படினு செந்தில் பாலாஜி ரிப்ளை கொடுத்திருக்காரு.

Also Read – அடேய் ஈரோடியன்ஸ்.. யார்யா நீங்கலாம்… இவ்வளவு சேட்ட பண்றீங்க?

* சரி எடப்பாடி இப்படி பிரசாரம் பண்றாரு. ஓ.பி.எஸ்? அவரு நிறுத்துன வேட்பாளரை வாபஸ் வாங்கிட்டாரு. அதனால ஈரோடு பக்கம் எட்டிக்கூட பார்க்கலயாம். குக்கர் சின்னம் ஒதுக்காததால தன்னோட வேட்பாளரை வாபஸ் வாங்கிட்டாரு டி.டி.வி தினகரன். தே.மு.தி.க வேட்பாளருக்காக பிரசாரம் பண்ணிட்டு இருக்காரு விஜயகாந்தோட மகன் விஜய பிரபாகரன். ‘இந்த சவுண்டெல்லாம் எங்க விடக்கூடாது. நான் விஜயகாந்த் பையன்’ அப்படினு அப்பா மாதிரியே ஆவேசமா பேசிட்டு இருக்காரு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top