கருணாநிதி - ஜெயலலிதா

கருணாநிதி Vs ஜெயலலிதா – அடுத்த 27 வருட அரசியலுக்கு விதைபோட்ட 1989 தேர்தல்! 

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றுல 1989 தேர்தலுக்கு முக்கியமான ஒரு சிறப்பு இருக்கு. கருணாநிதி Vs ஜெயலலிதா என்ற போட்டி முதல்முறையாக உருவான தேர்தல் அதுதான். எம்.ஜி.ஆர் மறைவு, வி.ஜானகி அரசு கலைப்பு, 13 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுகவினர் உற்சாக தேர்தல் பணினு பரபரப்பா இருந்தது தேர்தல் களம்.

அந்த சமயத்துல ரெண்டு திரைப்பிரபலங்கள் கட்சியும் தொடங்குனாங்க. வி.ஜானகி அரசுக்கு ஆதரவளிக்காத காங்கிரஸ் மேல இருந்த அதிருப்தியால ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்களோட சேர்ந்து சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்குனாரு. அதேநேரம், ஜானகி டீமுக்காக தேர்தல் வேலை பார்ப்பாருனு எதிர்பார்க்கப்பட்ட கே.பாக்யராஜ், எ.வ.வேலு உள்ளிட்டவர்களோடு சேர்ந்து எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குனார். தேர்தல் பாதை திருடர் பாதைனு பாமக தேர்தலைப் புறக்கணித்தது. ஜானகி அணியில் சிவாஜி கட்சி 49 இடங்கள்லயும், ஜெயலலிதா அணி 196, காங்கிரஸ் தனியா 208 இடங்கள்லயும் போட்டியிட்டன.

Also Read – #Vijayakanth – 25 ஆண்டுகால ரசிகர் மன்றத்தின் நீட்சி… தேமுதிக-வின் கதை!

இது மட்டுமில்லாம ஜெ. அணியிலிருந்து விலகிய நெடுஞ்செழியன் 13 இடங்கள்ல போட்டியிடுறதா அறிவிச்சார். இன்னொரு பக்கம் பிஜேபி 31, பழ.நெடுமாறன் 8 இடங்கள்லயும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுல திமுக 150 தொகுதிகள்ல ஜெயிச்சு தனிப்பெரும்பான்மையோட ஆட்சியைப் பிடிச்சது. 26 தொகுதிகளை வென்றிருந்த காங்கிரஸை விட ஒரு இடம் கூடுதலாக ஜெயித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானர். மற்ற கட்சிகள்னு பார்த்தா சிபிஎம் 15, சிபிஐ 3, ஜானகி அணி 2 ஜெயிச்சாங்க. ஜானகியும் சிவாஜியுமே தோல்வியைச் சந்திச்சனர். பிஜேபி, நெடுஞ்செழியன், பழ.நெடுமாறன் தரப்பில் ஒருத்தர் கூட ஜெயிக்கல. அந்தத் தேர்தல்தான் தமிழ்நாடு அரசியல்  கருணாநிதி Vs ஜெயலலிதா-னு அடுத்த 27 ஆண்டுகள் பயணிக்க விதை போட்ட தேர்தல். 

1 thought on “கருணாநிதி Vs ஜெயலலிதா – அடுத்த 27 வருட அரசியலுக்கு விதைபோட்ட 1989 தேர்தல்! ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top