ஆர்.கே.நகரில் ’கராத்தே’ பாபு, வட சென்னை மஹாராணி தியேட்டர் முன்பு விசாரித்தால் ’டிக்கெட்’ பாபு, அ.தி.மு.க-வில் நுழைந்த பிறகு ஜெயலலிதாவுக்கு ’எஸ்கார்ட்’ பாபு, ராயபுரம் ஜெயகுமாருக்கும் ஆர்.கே.நகர் வெற்றி வேலுக்கும் ஆகாத பாபு, மு.க.ஸ்டாலின் குட்புக்கில் ’செயல்’ பாபு, இந்து சமய அறநிலையத்துறைக்கு அடையாளம் கொடுத்துக்கொண்டிருக்கும் ’ஆக்ஷன்’ பாபு. இத்தனை பாபுக்களுக்கு பின்னால் இருக்கும் அந்த ஒரிஜினல் சேகர் பாபு யார்?
இதற்கான விரிவான பதில் TamilnaduNow யூ டியூப் சேனலில் வெளியாகியிருக்கும் மிஸ்டர். மினிஸ்டர் நிகழ்ச்சியில் உள்ளது. அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அவர் எம்.எல்.ஏ சீட் வாங்கிய கதையையும் மு.க.ஸ்டாலினை சுற்றி சுற்றி வந்த கதையையும் இங்கு தெரிந்துகொள்வோம்!

அமைச்சர் சேகர்பாபு எம்.எல்.ஏ சீட் வாங்கிய கதை!
அ.தி.மு.க 1996-ல் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதனால், ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த என்.எஸ்.ஜி பாதுகாப்பு பறிக்கப்பட்டது. அந்த நேரத்தில், சேகர்பாபு பிரைவேட் செக்யூரிட்டி ஃபோர்ஸை ஜெயலலிதாவுக்கு ஏற்பாடு செய்தார். பொலீரோ, டாடா சுமோ, டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுமார் 40 பேர் வரை அவரின் பாதுகாப்புக்காக உடனிருந்தனர். சஃபாரி சூட் சகிதம் அரசு பாதுகாப்பு படை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த செக்யூரிட்டி ஃபோர்ஸ். இந்த விஷயம் சேகர்பாபு மீது ஜெயலலிதாவுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 2001 சட்டமன்ற தேர்தலில் சேகர்பாபுவுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்தது.

மு.க.ஸ்டாலினை சுற்றி வந்த சேகர் பாபு!
தி.மு.க-வின் எதிர்காலம் மு.க.ஸ்டாலின்தான் என்பதை முன்கூட்டியே கணித்தார், சேகர்பாபு. இதனால், காலையில் விடிந்தது முதல் இரவு தூங்குவது வரை மு.க.ஸ்டாலின் வீட்டையே சுற்றி சுற்றி வந்தார். கட்சிப்பணி முதல் மு.க.ஸ்டாலினின் தனிப்பட்ட வேலைகள் வரை, நான்கு, ஐந்து நபர்கள் செய்யக்கூடிய வேலையை ஒற்றை ஆளாக நின்று செய்தார். ஆன்மீக ஈடுபாடு உடையவர் என்பதால் துர்கா ஸ்டாலினிடமும் சேகர்பாபுவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகளில் முன்னிலை வகித்து சேகர்பாபு எல்லாவற்ரையும் செய்தார். இதன் காரணமாக அவருக்கு 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்தது. ஆனால், அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
Also Read : Sekar Babu -வின் கதையில் 4 வில்லன்கள் – | Mr Minister EP – 01 | DMK
வடசென்னையில் இருந்த மஹாராணி தியேட்டரைச் சுற்றி சிறுசிறு வியாபாரங்கள் செய்துகொண்டிருந்த சேகர் பாபு அரசியலுக்கு வந்தது எப்படி?
`செயல்’ பாபுவாக மு.க.ஸ்டாலின் குட்புக்கில் இடம்பிடித்தது எப்படி?
தயாநிதிமாறனுடன் சேகர் பாபு சேர்ந்தது எப்படி?
கலைஞர் காலத்தில் முடியாதது, சேகர்பாபு காலத்தில் முடிந்தது. அந்த விஷயம் என்ன?
சேகர்பாபு முன் இருக்கும் சவால்கள் என்ன?
அவருக்கான ரேட்டிங் என்ன?
இந்த கேள்விகளுக்கான பதிலை TamilnaduNow யூ டியூப் சேனல் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
Also Read : ADMK: எஸ்டிஎஸ் முதல் அன்வர் ராஜா வரை – அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்கள்!
0 Comments